கருப்பு பட போஸ்டர்.. சூர்யா வாயில் "சுருட்டு”! கோபத்தில் கொந்தளித்த பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து வந்தாச்சு
சென்னை: ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து இருக்கும் கருப்பு திரைப்படத்தில் டீசர் இன்று சூர்யாவின் 50ஆவது பிறந்த நாளில் வெளியாகி இருக்கிறது. இந்த டீசர் இப்போது இணையத்தில் பலருடைய கவனத்தைப் பெற்று வரும் நிலையில் இந்த டீசரில் நடிகர் சூர்யா வாயில் சுருட்டுடன் இருப்பது குறித்து பிரபலம் ஒருவர் கோபத்துடன் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
மூக்குத்தி அம்மன் திரைப்படம் கொடுக்க வெற்றியால் ஆர் ஜே பாலாஜி கருப்பு திரைப்படத்தை சூர்யாவை வைத்து தொடங்கி இருந்தார். மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் பாகத்தில் நயன்தாராவை வைத்து ஒரு கடவுள் மற்றும் சாதாரண மனிதனின் ஆசைகள், கோபம் என எல்லாவற்றையும் கலந்து ஒரு படமாக கொடுத்திருந்தார். அது வெற்றியை கொடுத்தது. ஆனால் இரண்டாவது பாகம் எடுப்பதற்குள் நயன்தாரா சுந்தர் சி யின் படத்தில் கமிட்டாகி விட்டதால் இப்போது சூர்யாவை வைத்து கருப்பன் என்ற பெயரில் ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார்.

கருப்பு திரைப்படம்
இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் திரிஷா, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அதோடு இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைத்திருக்கிறார். அதுபோல இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை சூர்யாவின் உறவினார் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது.
புகைப்பிடிக்கும் சூர்யா
சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா பெரிய ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. அதை தொடர்ந்து வந்த ரெட்ரோ திரைபடமும் ஓரளவுக்கு வெற்றி பெற்றாலும் அதுவும் சூர்யாவுக்கு பெரிய அளவில் ஹிட்டு கொடுக்கவில்லை. இதனால் கருப்பு திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் டீசர் இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது அதே நிலை நேரத்தில் அந்த டீசரில் சூர்யா வாயில் சுருட்டுடன் இருப்பது பற்றி சமூக ஆர்வலர் ஒருவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஆதங்கத்துடன் பதிவு வெளியிட்டிருக்கிறார்.
பிரபலம் பதிவு
அதில், "சூர்யா தொடர்ந்து புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்து வருகிறார். விரைவில் நீங்கள் சினிமா உலகில் இருந்து விரட்டி அடிக்கப்படுவீர்கள். இளைஞர்களும், மாணவர்களும் இவரை பின்பற்ற கூடாது" என்று கூறியிருக்கிறார். இந்த பதிவை வெளியிட்டது வேறு யாரும் இல்லை அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பாக ராஜேஸ்வரி பிரியா என்பவர்தான்.
புகை பிடிக்கும் காட்சி
ராஜேஸ்வரி பிரியா ஏற்கனவே நடிகர் விஜய் லியோ திரைப்படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்திருந்தது குறித்து கோபமாக அந்த நேரத்தில் பேசிக் கொண்டிருந்தார். அதுபோல இப்பொழுது சூர்யாவின் டிரைலருக்கு எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். சினிமாவில் மாஸ் ஹீரோக்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக சில நடிகர்கள் புகைப்பிடிப்பது, குடிப்பது ஸ்டைலாக வைத்திருக்கிறார்கள். இதனால் இளைய தலைமுறைகள் தவறான பாதையில் வழிநடத்தப்படுவார்கள் என்று பலரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் சினிமாவில் மக்கள் கைதட்ட வைக்க வேண்டும் என்று புகைப்பிடிக்கும் காட்சிகளும் போதை பொருள் பயன்படுத்தும் காட்சிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
வாயில் சுருட்டு
ஏற்கனவே நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய் பீம் திரைப்படம் வெளியான போது பாமக அன்புமணி ராமதாஸுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் சூர்யாவிற்கு வன்னியர்கள் அந்த நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து சோசியல் மீடியாவில் சூர்யாவை சிலர் விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் கருப்பு படம் கருப்புசாமி பற்றிய கதையாக இருக்கிறது. கருப்பசாமி என்பதால் வாயில் சுருட்டு வைத்திருப்பார் என்பதற்காக சூர்யாவை அப்படி காட்டி இருக்கிறார்கள். ஆனால் இப்போது இது பிரச்சனையாக தொடங்கி இருக்கிறது. இதற்கு ஆர் ஜே பாலாஜி மற்றும் சூர்யா தரப்பில் இருந்து என்ன ரியாக்ஷன் வரப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications