சம்யுக்தாவிடம் Misbehave பண்ணுனேன்னா? நடந்தது இதுதான்.. கோபமாக விளக்கம் கொடுத்த ஆர்ஜே ரவி
சென்னை: சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா குடும்ப பிரச்சனையில் நிறைமாத நிலவே வெப்சீரிஸ் நடிகர் ஆர்ஜே ரவி பற்றி பல செய்திகள் வெளியாகி இருக்கிறது.
அது குறித்து தன்னைப் பற்றிய விளக்கம் கொடுத்து ஆர் ஜே ரவி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
என்னை காதலித்ததற்கு நான் மறுத்ததால் என் மீது எப்படி வேணாலும் குற்றச்சாட்டு வைக்கலாமா என்று ஆர்ஜே ரவி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து ரியல் ஜோடியாக மாறிய நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்து ஒரு சில மாதங்களுக்குள் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் சம்யுக்தா அவர் அண்ணன் என்று சொல்லி ஒரு நபரோடு பேசும் ஆடியோ ஒன்றை விஷ்ணுகாந்த் பகிர்ந்து இருக்கிறார். அதில தன்னை காதலித்துக் கொண்டிருக்கும் போதும் கூட அதற்கு முன்பு தான் காதலித்த ஆர்ஜே ரவியுடன் பேசிக் கொண்டிருந்தது பற்றி அதில் பேசியிருக்கிறார்.
அந்த ஆடியோவில் தான் காதலித்துக் கொண்டிருக்கும் போது ரவி தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார் என்று கூறியிருக்கிறார். அதற்கு அவருடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவரும் ரவியைப் பற்றியும் அந்த ஆடியோவில் அதிகமாக பேசியிருக்கின்றனர். தற்போது இந்த ஆடியோ வைரலாகி வரும் நிலையில் அதற்கு விளக்கம் கொடுக்கும் பொருட்டு ஆர்ஜே ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், நான் தவறாக நடக்க முயற்சி செய்தேனா...? அன்புள்ள என்னுடைய ரசிகர்களே மற்றவர்களை விட உங்களுக்கு என்னைப் பற்றி நன்றாக தெரியும். அதனால் நான் எந்த விளக்கத்தையும் தரப்போவதில்லை. எனக்கு இதுவரை 470 கே பாலோவர்ஸ் இருக்கின்றனர்.. அவர்களில் அதிகமானோர் பெண்கள் தான் சில நேரம் என்னுடைய ஃபேன்ஸ் என்னை நேரில் பார்த்திருக்கிறார்கள்.
அவர்களிடம் நான் தவறாக நடந்து கொண்டேனா? நான் அப்படி நடந்து கொண்டிருந்தால் என்னை அவர்கள் சொந்த சகோதரராக நடத்திருக்க மாட்டார்கள். உங்களுக்கு தெரியும் நான் பல நடிகைகளோடு நடித்திருக்கிறேன். அவர்களையும் பாதுகாப்பாக உணர வைத்திருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் என்னைப் போன்று ஒரு நடிகர்கள் என்பதால் தான்.
ஒரு நடுத்தர வர்க்கத்து பையன் தான் நான். என்னை என்னுடைய அம்மா அப்பா நல்ல முறையில் தான் வளர்ந்து இருக்கிறார்கள். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இதைவிட நான் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றால் என்னை காதலித்ததை நான் மறுத்ததால் என்னைப் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு நான் பொறுப்பாக முடியுமா?

இப்போது நான் இருக்கும் இடம் என்னுடைய ஆறு வருட கடின உழைப்பால் வந்தது. வீட்டில் ஒரே குழந்தையாக இருந்து குடும்பத்தை பாதுகாத்து கொண்டுவரும் எனக்கு எல்லா கஷ்டங்களும் தெரியும். என்னுடைய வேலை செய்யும் இடங்களிலும் என்னுடைய திறமையால் மட்டும்தான் நான் இங்கே வந்து இருக்கிறேன்.
என்னுடைய எதிர்கால திட்டங்களை பற்றி விரைவில் நான் உங்களுக்கு சொல்லுவேன். சிலருக்கு இருக்கும் பழிவாங்கும் கேரக்டரால் சிலருடைய வாழ்க்கையை கெடுத்து விடுகிறது. இதற்கு கர்மா பேசும். இப்போதும், எப்போதும் என் பக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் நீங்கள் என்னை நம்புவீர்கள். உங்கள் நம்பிக்கை நான் ஒருபோதும் உடைக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications