Robo Shankar: ரோபோ சங்கருக்கு உள்ளுணர்வு சொல்லி இருக்கு! கடைசியாக சொன்ன வார்த்தை! அந்த 4 பேரு! அண்ணன் பேட்டி!
சென்னை: (Robo Shankar brother interview) சிரிப்பு மட்டுமே தங்களது அடையாளம் என்று வாழ்ந்த ஒரு கலைஞன், தனது வாழ்க்கையின் இறுதிப் பக்கங்களில் வலிகளால் அவதியுற்றது, அவரது குடும்பத்தினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது 46வது வயதில் காலமான நடிகர் ரோபோ சங்கரின் அண்ணன், தனது தம்பியின் நினைவுகளைப் பற்றிப் பேசிய பேட்டி, இப்போது இணையத்தில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

எங்க வீட்டு கடைக்குட்டி
ரோபோ சங்கரின் அண்ணன் சிவகாசி சிவா பேசும்போது, "நான் ரோபோ சங்கரின் அண்ணன், சிவகாசி சிவா. நாங்க மொத்தம் நாலு அண்ணன் தம்பிகள். இரண்டு அண்ணன்கள் ஏற்கனவே இறந்துபோயிட்டாங்க. எங்க வீட்டுல ரோபோ சங்கர் தான் கடைக்குட்டி. ஆனால் இப்போ அவனுடைய நிலையைப் பார்க்கும்போது என்னால் தாங்கிக்கொள்ளவே முடியல. அவனுடைய இழப்பு எங்க குடும்பத்துக்கே பெரிய இழப்பு. அவன் விட்டுட்டு போன இடத்துக்கு, இனி அவன் தான் மீண்டும் பிறந்து வந்து நிரப்பணும்" என்று கண்ணீருடன் குறிப்பிட்டார்.
கலை மீது கொண்ட காதல்
ரோபோ சங்கர், தனது ஆரம்ப காலத்தில் ஒரு பாடி பில்டராக இருந்தார். கமல்ஹாசனின் பாடல்களுக்குப் பாடி பில்டிங் மூலமாகவே ஒரு வித்தியாசமான நடனத்தை மேடைகளில் செய்து வந்தார். "தமிழ்நாட்டில் முதல் முறையாக இரண்டு ஜெஸ்டையும் மேலே கீழே தூக்கிக் காட்டிய ஒரே பாடி பில்டர் ரோபோ சங்கர்தான்" என்றும் அவரது அண்ணன் பெருமையுடன் கூறினார். ரோபோ சங்கரின் இந்த கலை, பல மேடைகளில் அலுமினியம் பெயிண்ட் பூசிக்கொண்டு நிகழ்த்தப்பட்டது. அதுதான் இப்போது அவரது இந்த நிலைக்குக் காரணம் ஆகிவிட்டதோ என்றும் அவரது அண்ணன் வேதனையுடன் தெரிவித்தார்.
இறுதி தருணங்கள்
கடைசி நான்கு நாட்களில் ரோபோ சங்கர் பல பெரிய விஷயங்களைச் செய்து இருக்கிறார். தனது குடும்பத்தினரிடம் கடைசியாகப் பேசியபோது, "எனக்குத் தூக்கம் வருது" என்று சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளார். அதுவரை தூக்கம் வராமல் கஷ்டப்பட்டவர், அன்றைக்கு அப்படிப் பேசியது அவரது மரணத்தின் உள் உணர்வு போலத் தோன்றுகிறது என்றார்.
வெளிநாட்டு பயணம்
அவர் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு வெளிநாட்டுக்குச் சென்று வந்திருக்கிறார். அவருக்குப் பிடித்த விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். பிறகு ஒரு திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து இளையராஜா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின், இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பல பிரபலங்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கிறார். இளையராஜா மீது அவருக்கு அளவு கடந்த பிரியம் இருந்தது. அடிக்கடி அவரைச் சென்று பார்த்து வருவார். அதுபோலவே, கமல்ஹாசனின் தீவிர பக்தர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.
அவருக்குள்ளே ஏதோ ஒரு உள்ளுணர்வு தோன்றியதாலோ என்னவோ, அந்த நாளில் அவர் பலருடைய ஆசீர்வாதத்தை வாங்கி இருப்பதாக அவரது அண்ணன் கண்ணீருடன் கூறியுள்ளார். ஒரு கலைஞனின் கடைசி ஆசை, நிறைவேறியதா அல்லது கடைசி தருணத்தில் ஏதோ ஒரு உணர்வு தூண்டியதா என்பதை அவரது அண்ணனின் வார்த்தைகள் மூலம் நம்மால் உணர முடிகிறது.
ரோபோ சங்கர் பட்ட அவஸ்தை
ரோபோ சங்கரின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழந்து, கோமா நிலைக்குச் சென்று, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரிப்பை மட்டுமே கொடுத்த ஒரு கலைஞனின் மரணம், அவரது குடும்பத்தினரைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், அவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க எவ்வளவு போராடினார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, அவரது இழப்பு ஒரு தனிப்பட்ட சோகம் என்பதைத் தாண்டி, ஒரு சகாப்தத்தின் முடிவாக உணர்வுபூர்வமாகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications