ரோபோ சங்கர் மகளின் திருமணத்திற்காக இப்படி ஒரு பரிசா? கொடுத்து வச்சவர் தான் மாப்பிள்ளை
சென்னை: ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் தனக்கு விரைவில் திருமணம் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார்.
அதோடு தான் தன்னுடைய மாமாவை தான் திருமணம் செய்யப் போகிறேன் என்றும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் விரைவில் நடைபெற இருக்கும் தன்னுடைய மகள் திருமணத்திற்காக ரோபோ சங்கர் பல பரிசு பொருட்களையும், வீட்டையும் வழங்குவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நடிகர் ரோபோ சங்கர் பலருக்கும் பரீட்சையமானவர்தான். இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்து தற்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய மகளான இந்திரஜா சங்கரும் விஜய் டிவி நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகி இப்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்திரஜா சங்கர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் ஒரு பிரபலமாக கலந்து கொண்டு தன்னால் முடிந்த அளவிற்கு பிற போட்டியாளர்களுக்கு டப் கொடுத்து இருந்தார். ஆரம்பத்தில் அந்த நிகழ்ச்சியில் இந்திரஜா கலந்து கொள்ளும்போது இவரால் எல்லாம் எப்படி இதில் தாக்குப் பிடிக்க முடியும் என்று பலர் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் பல நாட்கள் இந்த நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்றிருந்தார்.
அது மட்டுமல்லாமல் நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்திலும் ஒரு கால் பந்தாட்ட வீராங்கனையாக கலக்கி இருப்பார். இப்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய அப்பா அம்மா மற்றும் உறவினர்களோடு மதுரை அருகில் இருக்கும் உசிலம்பட்டி பக்கத்தில் இருக்கும் தங்களுடைய குலசாமியை கோவிலுக்கு சென்றிருக்கிறார்.
எப்போதும் தான் எங்கே சென்றாலும் அங்கே எடுக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வரும் இந்திரஜா சங்கர் அது போல தான் குடும்ப கோவிலில் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். அந்த போட்டோவில் இந்திரஜா சங்கர் அவருடைய மாமனோடு எடுத்த புகைப்படங்களும் இருந்தது.

அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் நீங்க உங்க பக்கத்துல இருக்கிற உங்க மாமாவை கல்யாணம் பண்ண போறீங்களா? நீங்க ரெண்டு பேரும் வெளியிடும் போட்டோக்களும் ரீல்ஸ்களும் பார்த்து தான் நாங்களும் ரொம்ப நாளா உங்க கிட்ட கேட்டுகிட்டே இருக்கோம். நீங்க பதில் சொல்ல மாட்டீங்களா? என்று உரிமையாக கேள்வி கேட்டுக் இருக்காங்க.
அதற்கு இந்திரஜா தேதி இன்னும் பிக்ஸ் பண்ணல அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும். என்னோட சந்தோசத்தை கண்டிப்பா என்னோட ரசிகர்களிடமும் நலம் விரும்பிகளிடமும் கண்டிப்பாக சொல்லுவேன் என்று பதில் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் விரைவில் திருமணம் ஆக இருக்கும் இந்திரஜாவிற்கு அவருடைய அப்பாவான ரோபோ சங்கர் சென்னையில் புதியதாக வாங்கிய வீடு ஒன்றை அவருடைய பெயரில் மாற்றி கொடுக்கிறாராம். அதுபோல இந்திரஜாவுக்காக அதிகமான நகைகளை வாங்கி கொண்டிருக்கிறார் என்றும், அதனால் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்றும் தகவல்கள் பரவி வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications