அந்த வியாதியால் வந்த வினை..முதல் முறை மனம் திறந்த ரோபோ சங்கர்.. கண் கலங்க வைத்த வார்த்தை
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் தான் உடல் எடை குறைந்தது பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் நான் ஏற்கனவே சினிமா வாய்ப்புக்காக டயட்டில் இருந்தேன். அந்த நேரத்தில் மஞ்சள் காமாலையும் சேர்ந்து வந்ததால் ஏற்பட்ட மாற்றம் தான் இது என்று கூறியிருக்கிறார்.
கூடவே தான் சில தப்புகளையும் செய்து விட்டேன். அந்த தப்புகளை இனி யாரும் செய்யாதீங்க என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

நடிகை ரோபோ சங்கர் பலருக்கும் பரிச்சயமானவர்தான். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இவருடைய அசத்தலான பெர்பாமன்ஸ் பலருக்கும் பிடித்திருக்கும். அதைத் தொடர்ந்து தான் தற்போது வெள்ளி திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று இவர் எடை குறைந்து இருந்தார்.
ரொம்ப சங்கர் உடல் எடை குறைந்ததை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி ஆகி இருந்தனர். ஒரு சிலர் அவரைப் பற்றி தவறாகவும் கருத்து தெரிவித்து வந்தனர். ரோபோ சங்கருக்கு அளவுக்கு அதிகமாக குடித்ததால் உடல் எடை குறைந்துவிட்டது, அதனால் உடல்நிலை ரொம்பவே பாதித்துவிட்டது. இனி ரொம்ப நாள் தாக்கு பிடிக்க மாட்டார். நடிகர் விஜயகாந்த் மாதிரி ரோபோ சங்கர் உடம்பும் போயிடுச்சு அவ்வளவுதான் என்றெல்லாம் கூறி வந்தார்கள்.
இந்த நிலையில்தான் சில மாதங்களிலே தன்னுடைய பழைய நிலைக்கு இயல்பாக ரோபோ சங்கர் மாறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அது குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேட்டியில் பேசியிருக்கிறார். அவர் அந்த பேட்டியில் கூட எப்போதும் போல தன்னுடைய கலகலப்பான காமெடியாலே பதிலளித்திருக்கிறார்.
ரோபோ சங்கர் பேசுகையில், எல்லாரும் சொல்ற மாதிரி இல்லங்க. அந்த நேரத்துல பட வாய்ப்புக்காக தான் உடல் எடை குறைப்பதற்காக டயட்டிலிருந்தேன். அதே நேரத்தில் மஞ்சள்காமலையும் வந்திருக்கு, ரெண்டும் சேர்ந்ததால உடல் எடை வேகமாக குறைச்சிட்டு. பிறகு டாக்டர்களும் என்னுடைய குடும்பத்தினரும் போராடி என்னை பழைய நிலைக்கு கொண்டு வந்து இருக்காங்க.
என்ன பற்றி எவ்வளவோ நெகட்டிவ் கமெண்ட்கள் வந்துச்சு. சில youtube சேனல்கள் கூட இன்னும் ஒரு சில நிமிடங்களில் ரோபோ சங்கர் உடல் வீட்டிற்கு வந்து விடும் என்றும், எனக்கு RIP எல்லாம் போட்டாங்க. நான் அப்போ வீட்டில் நல்லபடியா தான் இருந்தேன். இதற்கு என்ன சொல்வது எனக்கு தெரியல என்று கலகலப்பாக சிரித்தபடியே பேசி கொண்டிருந்தார்.
என்னை மாதிரி வேற யாருக்கும் உடம்பு சரியில்லாமல் போறது இப்போ சகஜம்தான். ஆனா இந்த மாதிரி நிலைமையில் இருக்கிறவங்களை மேலும் மேலும் துன்புறுத்துற மாதிரி கமெண்ட் போடாதீங்க. நம்மளால கமெண்ட் போட முடியும் என்கிறதுக்காக கண்டபடி எல்லாம் அடுத்தவங்கள பற்றி பேசக்கூடாது என்று கூறியபடியே மேலும் அவர் தொடர்ந்து இருக்கிறார்.

அதில், எனக்கும் ஒரு காலத்துல சில கெட்ட பழக்கங்கள் இருந்துச்சு. அந்த கெட்ட பழக்கங்களாலும் என்னுடைய உடம்பு போயிடுச்சுன்னு எல்லாரும் சொன்னாங்க. அதுவும் ஒரு காரணமா இருக்கலாம். அதனாலதான் நான் சொல்றேன் தயவு செய்து யாரும் அந்த மாதிரி கெட்ட பழக்கங்களுக்கு அடிமை ஆகிறது. நம்முடைய உடம்பு தான் நமக்கு சுவர். அது இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.
என்னடா இவன் அட்வைஸ் பண்றான்னு நினைக்காதீங்க. நான் அந்த இடத்துல இருந்ததனால தான் சொல்றேன். தப்பு பண்றது பிரச்சனை கிடையாது. ஆனால் நம்ம பண்ற தப்பால நமக்கு ஒரு பிரச்சனை வரும்போது நம்மை நேசிக்கிறவங்கள கஷ்டப்படுறாங்க. இதை இப்போ நான் கண்கூட பார்த்தபோதுதான் தெரிஞ்சது. அதனால தயவு செய்து உங்ககிட்ட கெஞ்சி கேட்டுகிறேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
ஆரம்பத்தில் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த ரோபோ சங்கர் இறுதியில் அனைவரிடமும் குடி போன்ற தப்பான விஷயங்களில் தங்களுடைய வாழ்க்கைகளை தொலைச்சி விடாதீங்க என்று வேண்டுகோள் வைக்கும் போது அவர் உருக்கமான பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications