ரோபோ சங்கர் வளர்ப்பு மகளுக்கு கல்யாணம்! இந்திரஜாவும், பிரியங்காவும் போகவில்லையா? வெளியான போட்டோஸ்
சென்னை: மறைந்த ரோபோ சங்கரின் வளர்ப்பு மகளான இந்துவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இது குறித்து அவர் தன்னுடைய instagram பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்ததும் இந்த பங்க்ஷனில் ரோபோ சங்கரின் மனைவியான பிரியங்கா மற்றும் மகள் இந்திரஜா கலந்து கொள்ளவில்லையா என்று கேள்வி எழும்பி வருகிறது.
சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் ஒரு சிலர் காலடி எடுத்து வைத்து தங்களுக்கு என்ன ஒரு இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ரோபோ சங்கரும் ஒருவர். இவர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி உட்பட ஒரு சில நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையை காட்டி வெள்ளித்திறையிலும் அறிமுகமானார்.

அதிலும் சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களோடு நண்பராகவும் நடித்து வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை குறைபாடு காரணமாக காலமானார். இந்த செய்தி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. ரோபோ சங்கர் பிரியங்கா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரியங்காவும் இப்போது விஜய் டிவியில் தனம் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல சில ஷார்ட் பிலிம்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த தம்பதியின் மகளான இந்திரஜா நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில் நடித்திருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இந்திராஜாவின் திருமணத்தை ரோபோ சங்கர் பிரமாண்டமாக நடத்தி வைத்திருந்தார். தன்னுடைய மகள் திருமணத்தை அம்பானி வீட்டு கல்யாணம் போல நடத்தி மொத்த திறை உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் மரணம் அடைந்து விட்டார்.

அவருடைய வளர்ப்பு மகளான இந்துவிற்கு திருமணம் நடக்க இருக்கிறதாம். இந்து வேறு யாரும் இல்லை ரோபோ சங்கரின் சொந்த அண்ணன் மகள் தான். தன்னுடைய சித்தப்பா தான் தனக்கு எல்லாமே ஆக இருக்கிறார் என்று பல இடங்களில் இந்து சொல்லி இருக்கிறார். ரோபோ சங்கர் இறப்பின் போது கூட தொடர்ந்து சோகமான போஸ்ட்களையும் வருத்தமான கேப்ஷனையும் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ரோபோ சங்கரின் அண்ணன் குடும்பம் சிவகாசியில் தான் வசித்து வருகிறார்களாம். அங்கு பிறந்த இந்து ரோபோ சங்கர் மூலமாகத்தான் சென்னைக்கு வந்திருக்கிறார். காலேஜ் படித்து முடித்ததுமே கல்யாணம் ஏற்பாடு வீட்டில் நடந்திருக்கிறது. அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று ரோபோ சங்கரிடம் சொல்ல அதற்கு அவரும் உன்னுடைய திறமைக்கு தகுந்த வேலையை பாரு, அதற்கு நான் உதவியாய் இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
விஸ்லாம் படித்த இவர் அதற்கு பிறகு தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். சோஷியல் மீடியாவிலும் பிரபலமாக இருக்கிறார். அடிக்கடி ரோபோ சங்கருடன் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் இவருக்கு விரைவில் திருமணம் இருக்கிறதாம். தன்னுடைய வருங்கால கணவரோடு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.
மேலும் தன்னுடைய அம்மாவோடு எடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்து திருமண பங்க்ஷன் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதை பார்த்த பலரும் ரோபோ சங்கரின் குடும்பத்தினர் யாரும் வரவில்லையா? இந்திரஜா மற்றும் பிரியங்கா இருவரையுமே உங்களுடைய ஃபங்ஷனில் காணவில்லையே என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications