ரோபோ சங்கர் மறைவுக்கு பிறகு கிடைத்த விருது.. மேடையில் மனைவி பிரியங்கா செய்த செயல்! மருமகன் உருக்கம்
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் காலமானார். அவருடைய மறைவுக்கு பிறகு அவருக்கு சமீபத்தில் விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதை அவருடைய குடும்பத்தினர் பெற்றிருக்கின்றனர். அப்போது எடுத்த வீடியோவை ரோபோ சங்கரின் மருமகன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து சில விஷயங்களை உருக்கமாக குறிப்பிட்டு இருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து ஒரு சிலர் மட்டுமே வெள்ளித்திரைக்கு போய் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அதில் ஒருவராக இருந்தவர்தான் ரோபோ சங்கர். தன்னுடைய அடையாளமான ரோபோ கெட்டப் போட்டு விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலக்கி வந்த ரோபோ சங்கர் வெள்ளித்திரையில் அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார். அதிலும் குணசித்திர வேடங்களிலும் காமெடியானாகவும் இவர் நடித்த நடிப்புக்கு பலர் ரசிகர்களாக இருந்தனர்.

புகழின் உச்சத்தில் இருக்கும் போது ரோபோ சங்கரை எதிர்பாராத மரணம் வந்து தழுவியது. சில வருடங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட போது அவர் நிலைமை இனி அவ்வளவுதான் என்று பலர் கூறி வந்தனர். ஆனாலும் அப்போது கூட தன்னுடைய விடா முயற்சியால் பழைய நிலைக்கு மீண்டு வந்தார்.
உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாமல் இருந்த ரோபோ சங்கர் பிறகு படிப்படியாக முன்னேறி தன்னுடைய பழைய மாதிரியாக கெத்தாக வந்தார். ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து திடீரென மயக்கம் போட்டு விட பிறகு அவரை மருத்துவமனையில் சேர்த்தபோது அங்கு சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் இறந்து போயிருந்தார். அவர் இறந்து சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அவருடைய குடும்பத்தினர் இன்னும் அந்த சோகத்தில் இருந்து மீண்டு வராமல் தான் இருக்கின்றனர்.
ரோபோ சங்கர் குறித்து ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா மற்றும் மகள் இந்திரஜா இருவருமே அடிக்கடி தங்களுடைய வருத்தங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ரோபோ சங்கருக்காக கொடுக்கப்பட்ட விருதை அவருடைய குடும்பத்தினர் வாங்கி இருக்கின்றனர். அது பற்றி ரோபோ சங்கர் மருமகன் கார்த்திக் வெளியிட்ட பதிவில், எங்கள் அன்பான ரோபோ சங்கரின் நினைவாக 2025 ஆம் ஆண்டுக்கான 7 ஸ்டார் விருதுகளில் இருந்து தமிழ் சினிமாவின் ஐகானிக் காமெடியன் அஞ்சலி விருதை ஆழ்ந்த உணர்ச்சியுடன், ஆழ்ந்த மரியாதையுடன் ஏற்றுக்கொண்டோம்.

ரோபோ சங்கர் இனி நம்முடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் மில்லியன் கணக்கானவர்களுக்கு அளித்த சிரிப்பு தமிழ் சினிமாவில் என்றென்றும் எதிரொலிக்கும். இந்த விருது அவருக்கு பெயராக மாறிய திறமை தனித்துவமான ஆற்றல் மற்றும் மறக்க முடியாத பாத்திரங்களுக்கு ஒரு அழகான மற்றும் பொருத்தமான அங்கீகாரம் ஆகும்.
ரோபோ சங்கரின் மரபை உயிருடன் வைத்திருக்கும் இந்த மனமார்ந்த அஞ்சலிக்கும் 7ஸ்டார் குழுவுக்கு நன்றி. அவர் மக்களை சிரிக்க வைக்க வாழ்ந்தார். மேலும் இந்த விருது ஒரு நல்ல வாழ்க்கைக்கு மிகப்பெரிய உற்சாகம்" என்று ரோபோ சங்கர் மருமகன் குறிப்பிட்டு இருக்கிறார். அதுபோல அந்த வீடியோவில் ரோபோ சங்கரின் மனைவியிடம் தான் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது.
பிறகு ஒரு புகைப்படத்தையும் கொடுத்திருந்தனர். அதில் கமல்ஹாசன் ரோபோ சங்கருக்கு விருது கொடுப்பது போன்று இருந்தது. அதை பார்த்ததும் ரோபோ சங்கரின் குடும்பத்தினர் எமோஷனல் ஆகியிருக்கின்றனர்.. காரணம் கமல்ஹாசனின் தீவிரமான ரசிகரான ரோபோ சங்கர் மறைந்த பிறகும் இது போன்ற புகைப்படத்தை கொடுத்தது ரோபோ சங்கருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவருடைய உணர்வுகளை புரிந்தது போலவும் இருப்பதாக பலர் கமாண்ட் கொடுத்திருக்கின்றனர். அதோடு ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கும் ரசிகர்கள் பலரும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications