35 வருஷமா நான் ரசிகன்.. அவர் என்னத்த கிழிச்சாரு? கமல்ஹாசன் பற்றி ரோபோ சங்கர் ஓபன் டாக்
சென்னை: இணையத்தில் சமீப காலமாக பிரபலமாக இருக்கும் நடிகர் ரோபோ சங்கர் தற்போது நடிகர் கமல்ஹாசன் பற்றி பேட்டி ஒன்றில் சில தகவல்களை ஓபன் ஆக கூறி இருக்கிறார்.

சமீபத்தில் தான் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்து இருந்தது குறித்து பல வதந்திகள் பரவி இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கு திரும்பி தான் போட்டிகளில் பங்கேற்று இருக்கும் புகைப்படத்தை வெளியிட அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் பற்றியும் தான் அவருக்கு 35 வருடங்களாக ரசிகராக இருப்பது குறித்து சில தகவல்களை ரோபோ சங்கர் கூறி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் ரோபோ சங்கர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமாகி இப்போது பல முன்னணி நடிகர்களோடு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் வளர்த்த கிளியால் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டது. கிப்ட்டாக வந்த கிளியால் ஏற்பட்ட பண இழப்பு பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்போது மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ரோபோ சங்கர் மாதிரி இருந்தார்.
அதைத் தொடர்ந்து இப்போது தன்னுடைய தீவிரமான உடற்பயிற்சி மற்றும் மன தைரியத்தின் காரணமாகவே மீண்டும் பழைய நிலைக்கு மாறி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பேசி இருக்கிறார். அப்போது நான் உலக நாயகன் கமல்ஹாசன் மணிரத்தினம் கூட்டணியில் வெளியாக இருக்கும் திரைப்படத்தை பிரமாண்ட விழாவாக நான் எடுத்து நடத்த போகிறேன்.
கமல்ஹாசன் எல்லாம் நம்ம ஊரில் இருக்க வேண்டிய ஆளே கிடையாது. அவருடைய திறமையை ஒவ்வொரு நாளும் நான் பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன். கமல்ஹாசனின் நிழலை கூட யாராலும் தொட முடியாது. நான் அவருடைய ரசிகராக 35 வருடங்களாக இருக்கிறேன் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கும் போது அவரிடம் பத்திரிகையாளர்கள் கமல் சார் லியோ படத்தில் கொடுத்த வாய்ஸ் ஓவர் வைத்து சிலர் ட்ரோல் செய்து வருகிறார்களே அதை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு ரோபோ சங்கர் கமல்ஹாசன் என்ன கிழிச்சாருன்னு கேக்குற தகுதி யாருக்கும் இல்லை. லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமல் சாரின் வாய்ஸ் கேட்டவுடன் திரையரங்கம் அதிர்கிறது. அதுக்குமேல் என்ன சொல்ல? என்று ரோபோ சங்கர் பேசியிருக்கிறார். இந்த வீடியோக்களை கமல் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அதோடு சமீபத்தில் தான் கமல்ஹாசனை ரோபோ சங்கர் தன்னுடைய குடும்பத்தோடு சென்று சந்தித்து வந்திருந்தார்.

அப்போது கூட ரோபோ சங்கரின் மகளின் திருமணத்திற்காக கமல்ஹாசனை அழைத்துவிட்டு வந்திருக்கிறாரா? என்ற கேள்விகள் எழும்பி வந்தது. அது போல இந்த சீசனில் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கர் கலந்து கொள்வாராக இருக்கும் அதற்காக கமல்ஹாசனிடம் ஆசீர்வாதம் வாங்கி விட்டு வந்திருக்கிறாரா? என்றெல்லாம் பல வதந்திகள் பரவி வந்தது.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications