திடீரென்று டிரெண்டாகும் ரோபோ சங்கர் போட்டோ.. சட்டசபையில் ராஜ்மோகன் லுக்.. பின்னணி இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் உடை, ஹேர்ஸ்டைல், உடல் மொழியை பார்த்துவிட்டு ரோபோ சங்கர் இருந்து இருந்தால் இந்த சீனை வேற லெவலுக்கு கொண்டு போய் இருப்பார் என்று நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதோடு ரோபோ சங்கர் நடித்த பழைய காட்சிகளையும் புகைப்படங்களையும் தேடிப்பிடித்து சோசியல் மீடியாவில் மீண்டும் வைரல் ஆக்கி வருகின்றனர்.

அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் பேசும் விதம் சில நேரங்களில் அவர் காட்டும் ஆக்ரோஷமான உடல்மொழி என சமீப காலமே சோசியல் மீடியாவில் கவனிக்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில் ஒரு விவாகரத்தில் அடிக்க கை ஓங்குகிறார், பாய்ந்து வருகிறார் என ஆவேசமாக பேசிய சம்பவம் வைரல் ஆனது. அப்போது அவருடைய சமீபத்திய தோற்றத்தை வைத்து இது ரோபோ சங்கர் ஸ்டைல் என்று மீம்ஸ்கள் பறக்க ஆரம்பித்து விட்டன.

Robo Shankar Raj mohan

ராஜ்மோகனை வைத்து கலாய்ப்பு

இதற்காகவே ரோபோ சங்கர் நடித்த படங்களில் இருந்தும் விதவிதமான காட்சிகளை ரசிகர்கள் எடுத்து அமைச்சரை கலாய்க்க ரோபோ சங்கரை விட்டால் வேற யாரு என்று அளவுக்கு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அதிலும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ரோபோ சங்கர் தற்பெருமை பேசும் காட்சிகளை வைத்து அமைச்சர் ராஜ்மோகனை கலாய்க்கிறார்கள்.

Robo Shankar Raj mohan

ரோபோ சங்கரின் ஆரம்பம்

இன்று ஒரு மீம் மெட்டீரியலாக சோசியல் மீடியாவில் சுற்றிக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர் ஒரு காலத்தில் சின்னத்திரையில் தொடங்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர் சின்ன வயதிலேயே மிமிக்ரி செய்து பிரபலமானார். அதில் தனக்கென ஒரு பெயரை வாங்கி விட்டார். பிறகு மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் ரோபோ கெட்டப் போட்டு வித்தியாசமான கலைஞரானார்.

தனித்துவமான நடிப்பு

அதற்கு பிறகு தான் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு உட்பட ஒரு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அதிலிருந்து தீபாவளி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வேலையில்லா பட்டதாரி, வீரம், மாரி, பாயும் புலி என பல படங்களில் தனது காமெடி மற்றும் உடல்மொழியால் கவனம் பெற்றார். அதுபோல சோசியல் மீடியாவில் ரோபோ சங்கர் மற்றும் அவருடைய குடும்பத்தை பற்றிய பேச்சு இருந்து கொண்டிருந்தது.

Robo Shankar Raj mohan

ரோபோ சங்கர் மறைவு

ஆனால் கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் உடல்நிலை குறைபாடால் காலமாகி விட்டார். அதற்குப் பிறகு அவருடைய நடிப்பை ரசிகர்கள் மிஸ் பண்ணி வந்தாலும் இப்போது சட்டப்பேரவையில் ராஜ்மோகன் கொடுத்த ரியாக்ஷன் மூலமாக மீண்டும் ரோபோ சங்கர் வைரலாக பேசப்பட்டு வருகிறார். ஒருவேளை ரொம்ப சங்கர் உயிருடன் இருந்திருந்தால் என்ன சார் என்னை மாதிரியே டிரஸ் பண்ணிட்டு சட்டசபைக்கு வந்துட்டீங்களே என்று அமைச்சரையே வைத்து ஒரு ரீல் போட்டு இருப்பாரோ என்னவோ..! என்று ரசிகர்கள் கிண்டல் செய்கிறார்கள். ஏனென்றால் இருவருடைய நட்பும் அந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தது தான் காரணம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+