குழந்தையை வச்சு ப்ரோமோஷன் வீடியோ பண்றது தப்புனு இந்திரஜாகிட்ட சொன்னேன்! ஒன்னும் கேட்கலை! ரோபோ சங்கர்
சென்னை: சின்ன குழந்தையை வச்சு புரமோஷன் செய்யுறது தப்புனு என் மகள் இந்திரஜாவுக்கு போன் போட்டு சொன்னேன் என நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார். தனது 6 மாத குழந்தையின் அறிவை தூண்டும் பயிற்சியை இந்திரஜா அளித்தது குறித்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
மிமிக்ரி, ஸ்டான்ட் அப் காமெடி உள்ளிட்டவைகளில் கலக்கிய ரோபோ சங்கர் அண்மையில் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில், "குழந்தையை வச்சு தப்பான ப்ரோமோஷன் பண்ணிட்டாங்கனு சர்ச்சையானதும் என் பொண்ணுக்கு போன் செய்து "ஏம்மா குழந்தையை வச்சி இப்படி பண்றீங்களே தப்பாச்சேன்னு கேட்டேன்.

அதற்கு என் மகள், இதுக்கு சரியான சான்றிதழ் எல்லாம் இருக்குப்பா. அதெல்லாம் இல்லாம நான் எதையும் ப்ரோமோஷன் செய்யமாட்டேன். நான் உங்கள் பொண்ணு" என்று சொன்னாள். அதன் பிறகு நான் அவளிடம் எதையும் கேட்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மஞ்சள் காமாலை
அது போல் தான் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட போது உயிரிழந்துவிட்டதாகவே வதந்திகள் பரவின என தெரிவித்தார். மேலும் அவர் தொடர்கையில், "நான் மருத்துவமனையில் இருந்த போது சிலர் நான் இறந்துவிட்டதாக நினைத்து என் வீட்டுக்கு மாலையுடன் வந்தார்கள்.
யூடியூப் சேனல்கள்
செய்தி சேனல்களிலும் யூடியூப் சேனல்களிலும் நான் இறந்துவிட்டதாகவே தகவல்கள் வெளியாகின. இதை கேள்விப்பட்டு பலர் மாலையுடன் வந்த போது என் மனைவி எனக்கு போன் செய்து அழுதார். அப்போது நான், "மாலை கொண்டு வந்தவர்களிடம் மாலையை வாங்கி அவர்களுக்கே போட்டு அனுப்பு, நான் இப்போது வருகிறேன்" என சொல்லியிருந்தேன் என சங்கர் தெரிவித்தார்.
மகள் மீது சர்ச்சை
அது போல் தனது மகள் மீதான சர்ச்சை குறித்தும் ரோபோ சங்கர் பதிலளித்திருந்தார். இவரது மகள் இந்திரஜா தனது மாமாவையே திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நட்சத்திரன் என்ற குழந்தை உள்ளது. இவரது திருமணம் தொடங்கி வளைகாப்பு, டெலிவரி வரை அனைத்தும் வீடியோவாக வெளியானது.
இந்திரஜா
இவற்றில் சில நிகழ்வுகளின் வெளியீட்டு உரிமைகளை யூடியூப் சேனல்களுக்கு வழங்கியதாக சொல்லப்படுகிறது. யூடியூப், சமூகவலைதளங்களை திறந்தாலே இந்திரஜாதான் வருகிறார் என்பதால் அவர் குடும்பம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
ப்ளூசட்டை மாறன்
மேலும் ப்ளூசட்டை மாறன் கூட, ரோபோ சங்கரை விமர்சித்திருந்தார். மேலும் பலர் "இவர்களுக்கு வேலை வெட்டியே இல்லையா, மலம் கழிக்கும் வீடியோவை கூட காண்பிப்பார்கள் போலயே" என கடுமையாக விமர்சித்திருந்தனர்.
ப்ரோமோஷன்
இந்த நிலையில் குழந்தை பிறந்த பிறகும் இவர்களது வீடியோக்கள் நிற்கவில்லை. அதிலும் அவர் ஒரு நிறுவனத்திற்கு ப்ரோமோஷன் செய்வது போல் வீடியோ போட்டதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஹீகுரு நிறுவனம்
ஹீகுரு என்ற நிறுவனம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை தூண்டும் பயிற்சியை கொடுக்கிறதாம். இந்த நிறுவனத்திற்கு தனது 6 மாத குழந்தை நட்சத்திரனையும் அழைத்துச் சென்று அவருக்கும் பயிற்சி கொடுத்தார். 6 மாத குழந்தைக்கு மூளையை வளர்க்கும் பயிற்சியா என பலர் கண்டனம் தெரிவித்தனர்.
6 மாத குழந்தைக்கு டார்ச்சர்
6 மாத குழந்தையை இப்படி பாடுபடுத்துவதா, இப்போதே அதனை படிக்க வைப்பதா என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இதற்கு விளக்க வீடியோ போட்ட இந்திரஜாவும் அவரது கணவர் கார்த்திக்கும் தமிழக அரசின் கண்டனத்தையும் பெற்றனர்.
20 ஆண்டுகள்
அவர்கள் கூறுகையில் தமிழகத்தில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளதாகவும் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்தனைத் திறன் வெகுவாக குறைந்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிப்பதாக இவர்கள் தெரிவித்திருந்தனர். இது தவறான தகவல் என தமிழக அரசு தெரிவித்தது.
தமிழக அரசு ஃபேக்ட் செக்
அது போல் ஹெகுரு என்ற கல்விமுறை/பயிற்சியைப் பற்றி மத்திய அரசு நவ்சேத்னா என்ற வழிகாட்டும் நெறிமுறையை வெளியிட்டுள்ளது. அதை அடிப்படையாக வைத்து தான் இந்த பயிற்சி மையம் செயல்படுகிறது என தெரிவித்திருந்தனர்.
தவறான தகவல்
இதுவும் தவறான தகவல் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை வெளியிட்ட Navchetana - National framework for early childhood stimulation for children from birth to three years, 2024. இது குழந்தை நலன் மற்றும் பராமரிப்பு குறித்த கட்டமைப்பு தொடர்பான ஆவணம். இதில் ஹெகுரு குறித்தோ, Right-Brain activation குறித்தோ எந்த தகவலும் இல்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications