ரோபோ சங்கர் வீட்டில் அடுத்த மகிழ்ச்சி செய்தி.. இந்திரஜா பகிர்ந்த போஸ்ட்.. குவியும் வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்து இப்போது சினிமாவில் கலக்கி கொண்டு இருக்கும் ரோபோ சங்கரின் ஒரே மகள் இந்திரஜா தன்னுடைய வீட்டில் நடந்த மகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை பதிந்து இருக்கிறார். அதாவது இந்திரஜாவின் மகன் நட்சத்திரன் பிறந்து நூறாவது நாள் அதை சிறப்பாக குடும்பத்தோடு கொண்டாடி இருக்கிறார்கள்.
சின்னத்திரையில் இருந்து ஒரு சிலர் வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்து கலக்கி கொண்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் ரோபோ சங்கர். ரோபோ சங்கருக்கு அறிமுகமே தேவையில்லை. அவர் சினிமா மற்றும் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கிறார். ரோபோ சங்கர் சோசியல் மீடியா பக்கங்களில் அதிகமாக போஸ்ட் போடவில்லை என்றாலும் அவர் பற்றிய செய்திகள் மட்டும் அடிக்கடி இணையத்தில் ட்ரெண்டாகி விடுகிறது.

உடல்நிலை பிரச்சனை
ரோபோ சங்கர் உடல் எடை குறைந்த புகைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு? என்று கேள்வி பலருக்கு இருந்தது. அதே நேரத்தில் பலர் அவர் மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும் என்று கூறி வந்தவர். சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஷால் திரைப்பட பிரமோஷனில் கலந்து கொண்ட போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அதை பார்த்து எந்த அளவிற்கு ரசிகர்கள் பீல் பண்ணி பேசினார்களோ அதே போலத்தான் ரோபோ சங்கருக்கும் அந்த நேரத்தில் அதிகமான கமெண்ட்ஸ் இருந்தது. ஆனால் சிலர் வழக்கம் போல ரோபோ சங்கரை பற்றி தவறாகவும் பேசிக் கொண்டிருந்தனர்.

இந்திரஜாவின் திருமணம்
ஆனாலும் தன்னுடைய குடும்பத்தினரின் அன்பு மற்றும் அரவணைப்பால் ரோபோ சங்கர் மீண்டும் பழைய நிலைக்கு வந்து தன்னுடைய ஒரே மகளான இந்திரஜாவிற்கு அவருடைய உறவினரான கார்த்திக் என்பவருடன் திருமணம் செய்து வைத்தார். அவருடைய திருமண வீடியோக்கள் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் அதிகமாக ட்ரெண்ட் ஆனது. அந்த நேரத்தில் ரோபோ சங்கர் குடும்பம் youtube சேனல்களுக்கு அதிகமாக பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

இந்திரஜாவின் குழந்தை
இதனால் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டனர். சிலர் பாராட்டிக் கொண்டிருந்தனர். இப்படியாக சமூக வலைத்தளத்தில் எப்போதுமே ரோபோ சங்கர் குடும்ப செய்திகள் இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ரோபோ சங்கரின் சினிமா குருவான கமல்ஹாசன் நட்சத்திரன் என்ற பெயர் வைத்திருந்தார். தன்னுடைய மகனின் புகைப்படங்களை இந்திரஜா அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

நூறாவது நாள்
இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திரஜா தன்னுடைய மகன் பிறந்த 100 வது நாள் விழாவாக கொண்டாடி இருக்கிறார்கள். அப்போது ரோபோ சங்கர் குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்களை இந்திரஜா பகிர்ந்து இருக்கிறார். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications