ஆறு மாத குழந்தையின் மூளைக்கு ஸ்பெஷல் எஜுகேஷன்.. இந்திரஜா வெளியிட்ட வீடியோ.. குவியும் கமெண்ட்ஸ்!
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கர் தன்னுடைய ஆறு மாத மகனுக்கு மூளை வளர்ச்சிக்காக ஸ்பெஷல் ஆன ட்ரைனிங் கொடுக்கும் ஸ்கூல் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இது ப்ரோமோஷன் வீடியோவாக இருந்தாலும் இணையத்தில் அது அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. 6 மாத குழந்தையை இப்படி ஒரு டிரெய்னிங் கொடுத்து கொடுமைப்படுத்தணுமா? என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
இன்றைய அவசரமான உலகத்தில் கல்வியின் அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கல்வி என்பது படிப்பறிவோடு மட்டுமல்லாமல் உலகத்தையும் சேர்ந்த படிக்கும்போது தான் மற்றவர்களோடு போட்டி போட்டு நம்மால் முன்னேற முடியும் என்பதற்காக பலரும் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த குழந்தைகளோடு நம்முடைய குழந்தைகள் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று மனநிலை எல்லா பெற்றோர்களுக்கும் இருக்கிறது.

அதிகரிக்கும் தனியார் பள்ளி
அதனாலேயே இப்போது தெருவுக்கு நான்கு பிளே ஸ்கூல், தனியார் கல்லூரிகளும், பள்ளிகளும் முளைத்து கொண்டிருக்கிறது. இதில் இலட்சக்கணக்கில் பீஸ் பற்றி படிக்க வைப்பதற்கு பெற்றோர்களும் தயாராகி விட்டார்கள். நாம் பட்ட கஷ்டத்தை நம்முடைய குழந்தை பட்டு விடக்கூடாது, இந்த உலகத்தில் நம்முடைய குழந்தை வாழ வேண்டும் என்றால் படிப்பை கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை தான் பெற்றோர்களுக்கு வருகிறது.
படிப்பு இப்போது வியாபாரம்
அதன் காரணமாக சிலர் கோடிக்கணக்கில் லாபங்களும் அடைந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு கட்டத்தில் சில இன்ஃபின்ஸர்களும் குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் பெற்றோர்களின் மனதையும் மூளையையும் சலவை செய்துவிட்டு விடுகிறார்கள். அதுபோலத்தான் இப்போது நடிகர் ரோபோ சங்கரின் மகள் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதை சிலர் பாராட்டி வருகிறார்கள், சிலர் விமர்சித்து வருகிறார்கள்.
ரோபோ சங்கர் குடும்பம்
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். பிகில் திரைப்படத்திற்கு பிறகு அவர் பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ரோபோ சங்கர் குடும்பத்தினரை அடிக்கடி youtube சேனல்களில் பேட்டி கொடுத்து கொண்டு இருந்தனர். இது அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வந்தாலும் அதை பற்றி அவர்கள் கண்டு கொள்வது கிடையாது.
6மாச குழந்தைக்கு brain tuning training ஆம்..🤦♂️🤦♂️
— James Stanly (@JamesStanly) June 25, 2025
pic.twitter.com/SVda7D29xy
இந்திரஜா வெளியிட்ட வீடியோ
இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி மாதத்தில் ரோபோ சங்கர் மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நடிகர் கமல்ஹாசன் தான் நட்சத்திரன் என்ற பெயர் சூட்டியிருந்தார். இந்த நிலையில் குழந்தை பிறந்து ஆறு மாதத்தில் அந்த குழந்தைக்கு பிரெயின் டெவலப்மென்ட் சிறப்பாக இருக்க தன் மகனை ஸ்கூலில் சேர்த்திருக்கும் வீடியோ ஒன்றை இந்திரஜா வெளியிட்டிருக்கிறார். இது பிரமோஷன் வீடியோ தான் ஆனாலும் இதை பார்க்கும் பலரும் கலாய்த்து வருகிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications