ரோபோ சங்கருக்கு என்னாச்சு.. அவர் உடல் மெலிந்து காணப்பட காரணம் என்ன.. சீக்ரெட்டை உடைத்த மகள்
சென்னை: ரோபோ சங்கர் ஏன் ஒல்லியாகவிட்டார் என்பது குறித்து உண்மையை உடைத்த ரோபோ சங்கரின் அண்ணன் மகள் இந்து சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தனது மிமிக்ரி, காமெடியால் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ரோபோ சங்கர், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவருடைய மகள் இந்திரஜாவும் தற்போது நடித்து வருகிறார். அவருடைய மனைவி பிரியங்காவும் குக் வித் கோமாளி உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொள்கிறார்.
அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு கிளிகள் வளர்த்து வந்ததாக சர்ச்சை கிளம்பியது. அந்த வெளிநாட்டு கிளிகள் வளர்த்து வந்ததை அடுத்து அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்து அதற்கு ரூ 5 லட்சம் அபராதமும் விதித்தனர்.

ரோபோ சங்கர்
இந்த நிலையில் ரோபோ சங்கர் எடை குறைந்து காணப்படுகிறார். அவருக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டதாக நெட்டிசன்கள் பேசி வந்தனர். இந்த நிலையில் அவரது எடை குறைப்புக்கு ஒரு காரணத்தையும் ரோபோ மனைவி பிரியங்கா விளக்கியிருந்தார். இதுகுறித்து ரோபோ சங்கரின் அண்ணன் மகள் இந்து சிவராமன் என்கிற பொன்னழகி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 8 ஆண்டுகளாக சித்தப்பா ரோபோ சங்கருடன் இருக்கிறேன். நான் ஒரு பிசினஸையும் செய்து வருகிறேன்.

சிபாரிசு இல்லை
நான் யாருடைய சிபாரிசும் இல்லாமல் என் வாழ்க்கையில் முன்னேறி வருகிறேன். சித்தப்பாவுக்கு ஒரு மகளா, இரு மகள்களா என மற்றவர்கள் கன்பியூஸ் ஆகும் அளவுக்கு எனக்கும் சித்தப்பா- சித்திக்கும் நிறைய பாண்டிங் இருக்கிறது. மேலும் இந்திரஜா என அவருடைய பெண்ணின் பெயர் இருப்பதால் எனது பெயர் இந்து என்பதால் பல குழப்பமடைவர்.

அண்ணன் தம்பிகள்
என் அப்பாவுடன் சேர்த்து 4 பேர் அண்ணன் தம்பிகள். பெரியப்பா டாக்டர், இரண்டாவது என் அப்பா, 3ஆவது ஒரு சித்தப்பா, 4 ஆவதுதான் ரோபோ சங்கர். சித்தப்பாவுக்கு கல்யாணம் ஆகும் வரை நாங்கள் மதுரையில்தான் இருந்தோம். அதன்பின்னர் அவர் சென்னை வந்துவிட்டார். என் அப்பா சிவகாசிக்கு சென்றார். அங்கு அவர் பேப்பர் பிசினஸ் செய்து வருகிறார்.

சிவகாசி
நான் சிவகாசியில்தான் படித்தேன். தற்போது இங்கே வந்துவிட்டேன். எனக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் வாய்ப்பு தானாக வர வேண்டும், நானாக போய் நான் ரோபோவின் அண்ணன் மகள் என கூறி வாய்ப்பு கேட்க எனக்கு பிடிக்கவில்லை. நடுவுல ஒரு படத்திற்காக சித்தப்பா வெயிட் லாஸ் செய்தார். அது மட்டுமல்லாமல் ஒரு ஆண்டாக வெயிட் லாஸில்தான் இருந்தார்.

மஞ்சள் காமாலை
ஒரு ஈவன்ட்டிற்காக வேறு வேறு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லைட்டாக ஜான்டிஸ் வந்ததை நாங்கள் கவனிக்கவில்லை. அதனால் அவர் பார்ப்பதற்கு கொஞ்சம் டிரையாக இருப்பது போல் இருக்கிறது. மற்றபடி நெட்டிசன்கள் கிளம்பும் ரூமரை போல் அவருக்கு உடல்நலக் குறைவு எல்லாம் இல்லை. நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறார். எனக்கு டிரஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.

ஓசியில் வந்த கிளி
அதனால் டிரஸ் பிசினஸ் செய்து வருகிறேன். 2000 ரூபாய்க்கு கீழ் நல்ல டிசைன், நல்ல குவாலிட்டியில் கொடுத்து வருகிறேன். என் அம்மாவின் இடத்தை நிரப்பியர் பிரியங்கா சித்தி. அந்த கிளிகளை ஒரு ஆன்டி கொடுத்தார். அதை நாங்கள் வளர்த்து வந்தோம். அது வளர்க்கக் கூடாது என எங்களுக்கு தெரியாமல் வளர்த்தோம். கடைசியில் ஓசியில் வந்த கிளிக்கு லட்சக்கணக்கில் அபராதம் செலுத்தினோம். இவ்வாறு இந்து சிவராமன் தெரிவித்தார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications