ரோபோ சங்கர் உடல் எடை குறைந்ததற்கு காரணம் இதுதானா? மனைவி சொன்ன பதில்.. வெளிவந்த உண்மை
நடிகர் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
சென்னை: காமெடி நடிகர் ரோபோ சங்கர் திடீரென உடல் எடை குறைந்து மாறி இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
ரோபோ சங்கருக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டு உள்ளதா? அதனால் இப்படி மாறிவிட்டாரா? என்று பல்வேறு கேள்விகள் சமூக வலைதளத்தில் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்த காரணத்தை பற்றி அவருடைய மனைவி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

கிளியால் வந்த பிரச்சனை
சமூக வலைத்தளத்தில் சில மாதங்களாக ரோபோ சங்கர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே அவருடைய வீட்டில் வளர்ந்த கிளியால் அவருக்கு பெரும் தொகையை பைஃனாக கட்டி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் பல பேருக்கு வீட்டிற்கு கிளி வளர்த்தால் அதற்கு முறையாக அனுமதி வாங்க வேண்டும் என்பது தெரியாமல் இருந்த நிலையில் ரோபோ சங்கரின் ஒரே ஒரு ஹோம் டூரால் லட்சக்கணக்கில் பைஃன் கட்டி பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டார். அதைத் தொடர்ந்து தற்போது ரோபோ சங்கரின் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

விஜய் டிவியில் பிரபலம்
ரஜினிகாந்த் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படையப்பா திரைப்படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிக்க தொடங்கிய ரோபோ சங்கர் ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் முகம் காட்டி இருந்தாலும் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரொம்பவே பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் அவருக்கு கிடைத்த ஹீட் காரணமாகவே ஜோடி நம்பர் உட்பட பல கேம் ஷோகளில் விளையாடி ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்து விட்டார்.

வெள்ளி திரையிலும் கலக்கல்
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்தவர்களில் ஒரு சிலர்தான் அங்கே ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது சிம்மாசனம் இட்டு ரோபோ சங்கரும் அமர்ந்திருக்கிறார். தற்போது பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். குறிப்பாக மாரி திரைப்படத்தில் ரோபோ சங்கரின் அல்டிமேட் காமெடி அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு ஒரு தூணாக அமைந்திருந்தது.

வெளியான புகைப்படம்
இந்த நிலையில் இயல்பாக வெயிட்டாக இருக்கும் ரோபோ சங்கர் தற்போது உடல் எடை குறைந்து இருக்கும் புகைப்படம் வெளியான நிலையில் இருந்து அவரைப் பற்றி மீண்டும் பல்வேறு கேள்விகளும், யூகங்களும் ரசிகர்களின் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதில் ரோபோ சங்கரின் முகத்தில் களை இழந்து விட்டது அதனால் அவருடைய உடல் நலத்தில் ஏதேனும் பிரச்சனையாக இருக்குமோ? அதுவாக இருக்குமோ? இதுவாக இருக்குமோ? என்று ரசிகர்கள் கேள்விகளை அள்ளித் தெளித்து சமூக வலைத்தளத்தில் பரப்பி வர தற்போது ரோபோ சங்கரின் மனைவி விளக்கம் கொடுத்ததாக ஒரு வீடியோவும் வலம் வருகிறது.

காரணம் இதுதானாம்
அந்த வீடியோவில் என்னுடைய கணவருக்கு ரசிகர்கள் பயப்படுற மாதிரி எந்த ஒரு நோயும் இல்லை. அவர் திரைப்படத்தில் அவருடைய கேரக்டருக்காக உடல் எடையை குறைத்து இருக்கிறார். வேறொன்றும் இல்லை. உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று எப்போதும் என்னுடைய கணவர் கூறுபவர். அதனால் தான் திரைப்பட வாய்ப்புக்காக தன்னுடைய கேரக்டருக்காக தன்னுடைய உடல் எடையை குறைத்து இருக்கிறார். ஆனால் அவர் நலம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் பலர் தொடர்ந்து கூறி வருவது மகிழ்ச்சி ஆனால் ரசிகர்கள் பயப்படுற மாதிரி ஒன்றுமில்லை என்று அந்த வீடியோவில் விளக்கம் கொடுத்திருக்கப்பட்டிருக்கிறது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications