ரோபோ சங்கர் மனைவி திடீரென்று வெளியிட்ட கடுமையான வார்னிங்.. காரணம் இதுதானா?
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா சங்கர் வதந்திகளை பரப்புவோர்களுக்கு சமூக வலைத்தளத்தில் திட்டி இருக்கிறார்.
ரோபோ சங்கர் உடல் எடை குறைந்தது குறித்து தகவல் சமூக வலைதளத்தில் பல வதந்திகள் பரவி வருகிறது.
வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரோபோ சங்கரோடு எடுத்த லேட்டஸ்ட் புகைப்படத்தையும் அவருடைய மனைவி பகிர்ந்து இருக்கிறார்.

விஜய் டிவியில் காமெடி கலைஞர் ஆக அறிமுகமாகி வெள்ளி திரையில் துணை கதாபாத்திரத்திலும் நடித்து வரும் நடிகர் ரோபோ சங்கரின் மனைவிதான் பிரியங்கா சங்கர். இவர் ஒரு நடன கலைஞராக இருந்து வருகிறார். கடந்த 2002 ஆம் ஆண்டு தான் ரோபோ சங்கர் மற்றும் பிரியங்காவிற்கு திருமணம் நடந்தது.
இந்த தம்பதியினருக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். அவர் பிகில் திரைப்படத்தில் நடித்திருப்பார். பிகில் திரைப்படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பு காமெடி கலந்த எமோஷனல் பலரையும் கவர்ந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ரோபோ சங்கர் குறித்து சமூக வலைத்தளத்தில் அதிகமான வதந்திகளும் செய்திகளும் பரவி வருகிறது

ரோபோ சங்கர் உடல் எடை குறைந்து இருக்கும் புகைப்படம் வெளியானது தான் தாமதம் உடனே அப்படி இப்படி என்று செய்திகள் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. நெட்டிசன்களின் கமாண்டுகள் ஒருபுறம் நெகட்டிவ் ஆகவே இருந்து வரும் நிலையில் அவருடைய தீவிரமான ரசிகர்கள் ரோபோ சங்கர் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
அடுத்தடுத்து தன்னைப் பற்றி பல்வேறு தகவல்கள் வதந்திகளும் பரவி வந்தாலும் ரோபோ சங்கர் தன்னுடைய பணியில் சிறப்பாக இருந்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக அவ்வபோது கலந்து கொண்டிருக்கிறார். இதே நேரத்தில் அடிக்கடி தன்னுடைய வீட்டில் டான்ஸ் ஆடியும் போட்டோ சூட் புகைப்படங்கள் எடுத்தும் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா சங்கர் பங்க்ஷன் ஒன்றில் தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்தப் பதிவில் இன்னைக்கும், என்னைக்கும் நல்லா இருப்பார். பேக் நியூஸ் போடும் நாய்களுக்கு என்று செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் பிரியங்கா சங்கரை டேக் செய்து போஸ்ட் செய்திருக்கிறார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications