அது மட்டும் இல்லை என்றால் நான் அனாதை தான்.. உருக்கமாக வீடியோ வெளியிட்ட ரோபோ சங்கர் மனைவி
சென்னை: ரோபோ சங்கர் மனைவியான பிரியா சங்கர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கணவரோடு எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே ரோபோ சங்கர் பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் ரோபோ சங்கரின் அன்பு குறித்து அவருடைய மனைவி உருக்கமான பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் ரோபோ சங்கர் மனைவிக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.

திறமையால் ஜொலிப்பு
பொதுவாக ஒருவர் நல்லா இருந்தாலும் உலகம் அவரைப் பற்றி தூற்றும் ஒருவர் திடீரென்று கஷ்டப்பட்டு விட்டாலும் அவரைப் பற்றி பேசும் இது இயல்பானது தான். அதுபோல தன்னுடைய இயல்பான காமெடியின் மூலமாக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களை கவர்ந்த ரோபோ சங்கர் அதற்குப் பிறகு தன்னுடைய விடா முயற்சியால் அடுத்தடுத்து திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். முன்னணி நடிகர்களோடு ரோபோ சங்கர் இப்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பூதாகரமான பிரச்சனை
இந்த நிலையில் ரோபோ சங்கர் உடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து சில பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இது எல்லோருடைய வாழ்க்கையில் ஏற்படுவது போன்றது தான். ஆனால் பெரியதாக திரித்து பலரும் பூதாகரமாக ஆக்கி வருகின்றனர். அந்த வகையில் ரோபோ சங்கருடைய வீட்டில் கிப்டாக வளர்த்த கிளியால் அவருக்கு ஃபைன் கட்டும் நிலைமை ஆகிவிட்டது. அந்த நேரத்தில் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ரோபோ சங்கருக்கு அபராதம் விதித்ததை பற்றிய செய்திகளும் வைரலாகி வந்தது.

திடீர் உடல் எடை குறைவு
இந்த நிலையில் அதைத்தொடர்ந்து அவர் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட புகைப்படம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ரோபோ சங்கர் சற்று உடல் எடை கூடுன அளவில் இருந்தாலும் திடீரென்று இவர் இப்போது உடல் எடை குறைந்து இருக்கும் புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் அவருக்கு அந்த நோயாக இருக்கும் அதனால் தான் இப்படி, இந்த நோயாக இருக்கும் இதனால் தான் இப்படி என்று பல்வேறு தகவல்களை பரப்பி வருகிறார்கள். இது குறித்து சமூக வலைதளத்தில் அவருடைய மனைவி மற்றும் மகள் சில விளக்கங்களையும் கொடுத்திருந்தனர்.

நடிகர் போஸ் வெங்கட் விளக்கம்
ரோபோ சங்கர் உடைய நண்பனும் உறவினருமான போஸ் வெங்கட் சமீபத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். அதில் ரோபோ சங்கருக்கு உடல்நிலை சரியில்லை என்பது உண்மைதான் ஆனால் அவருக்கு பயப்படுகிற அளவிற்கு பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் அதை சமூக வலைதளத்தில் தான் பூதாகரமாக ஆக்கி வருகிறார்கள். இதை படிக்கும் போது அவருடைய மனநிலை என்னவாக இருக்கும் என்பதை யாரும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். எதற்காக தான் இப்படி செய்கிறார்களோ ஆனால் விரைவில் ரோபோ சங்கர் தன்னுடைய பழைய நிலைக்கு வந்துவிடுவார். அவருடைய திறமை அவரை விட்டு என்றும் போகாது என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

மனைவியின் அன்பு வார்த்தை
இந்த நிலையில் ரோபோ சங்கர் உடைய மனைவி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ரோபோ சங்கருடன் எடுத்த வீடியோ ஒன்றை எடிட் செய்து போஸ்ட் செய்து இருக்கிறார். அதில்," நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி" எனும் பாடலை பேக்ரவுண்ட் பாடலாக ஒலிக்கவிட்டு, அதற்கு" உன் விழி பார்த்த அந்த முதல் நிகழ்காலமும் சரி, எதிர்காலமும் சரி அது உன்னோடு என்றே வாழ்கிறேன். ஆயிரம் உறவு அன்பு காட்டினாலும் உன் அன்பு இல்லை எனில் நான் ஒரு அனாதை தான் அன்பே" என்று பதிவு வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் அவருக்கு தொடர்ந்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications