காலில் விழுந்து கெஞ்சினேன்.. காலை தடவ ஹன்சிகா விடவே இல்லை.. ரோபோ சங்கர் சர்ச்சை பேச்சு
சென்னை: காலில் விழுந்து கெஞ்சியும் ஹன்சிகா காலை தடவ விடவில்லை என நடிகர் ரோபோ சங்கர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகளில் வளர்க்க தடை செய்யப்பட்ட வெளிநாட்டு கிளியை வளர்த்த விவகாரத்தில் கிளியை பறிமுதல் செய்த வனத்துறையினர் அந்த கிளியை வளர்த்த குற்றத்திற்காக அவருக்கு ரூ 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. அடுத்ததாக ரோபோ சங்கரின் உடல் எடை வெகுவாக குறைந்து காணப்பட்டார். இதனால் அவரது உடல்நிலைக்கு அந்த பிரச்சினை, இந்த பிரச்சினை என பலர் வதந்திகளை பரப்பினர்.

இதெல்லாம் வதந்தி என அவருடைய மகளும், மனைவியும் , அண்ணன் மகளும் ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு என்பதை விளக்கினர். அந்த வகையில் ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை வந்ததாகவும் அதற்கு சிகிச்சை எடுத்து வருவதால் அவரது உடல் மெலிந்து காணப்படுகிறது என தெரிவித்தனர்.
மேலும் நெட்டிசன்கள் கூறுவதை போல் மோசமான வியாதி ஏதும் அவருக்கு இல்லை என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில் ஒரு கல்லூரி விழாவுக்கு வந்த ரோபோ சங்கர், நான் குடிக்கு அடிமையாகி, அந்த குடி இல்லாவிட்டால் இரவில் தூங்க முடியாமல் தவித்தேன். ஒரு முறை தற்கொலை செய்து கொள்ள கூட முடிவு செய்தேன். எனவே மாணவர்கள் யாரும் மது, போதை பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம் என தெரிவித்திருந்தார்.
இநத நிலையில் ஆதி ஹீரோவாக நடித்துள்ள பாட்னர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். இந்த படத்தில் யோகிபாபு, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாக தொடங்கியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது.
அப்போது அந்த விழாவில் ரோபோ சங்கர் பேசுகையில் பாட்னர் படத்தில் உள்ள கிஸ் சீனை ரொம்ப ரசித்து என்ஜாய் செய்வீங்க. தனிமையில் உட்கார்ந்து பார்ப்பதற்கு ஆவலை தூண்டக் கூடிய காட்சி அது. அதே மாதிரி ஹன்சிகா, முதல்ல வாம்மா நீ உண்மையில் ஒரு மெழுகு பொம்மை. மைதா மாவை உருட்டி சுவற்றில் அடித்தால் ஒட்டிக் கொள்ளும் அந்த மாதிரிதான் அவங்க.
ஹன்சிகா காலை தடவுற மாதிரி ஒரு சீன் படத்துல இருந்தது. ஒரு பொருளை தேடி முட்டிக்கு கீழ் கால தடவ வேண்டும். அந்த காட்சியில் நடிக்க வைக்க நானும் போராடி பார்த்தேன். ஆனால் முடியவே முடியாதுனு சொல்லிட்டாங்க. நானும் டைரக்டரும் கால்ல விழுந்தெல்லாம் கெஞ்சினோம்.
கட்டவிரலையாச்சும் தடவிக்கிறேனு கேட்டோம். முடியாதுனு சொல்லிட்டாங்க. ஹீரோ ஆதியை தவிர வேறு யாரும் என்னை தொடக் கூடாதுனு சொல்லிட்டாங்க. அப்போதான் நெனச்சேன். ஹீரோ ஹீரோதான், காமெடியன் காமெடியன்தான் என பேசிவிட்டு இதெல்லாம் நகைச்சுவைக்கே என கூறினார். எங்கோ விமானத்தில் செல்ல நேரமானதால் அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்,. ஆனால் ரோபோவின் பேச்சுக்கு அங்கிருந்த பத்திரிகையாளர் கண்டனம் தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications