அடடே.. விஜய் டிவியில் பிரசவ வார்டு ரெடியாகுதாமே...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒரு பிரசவ வார்டு ரெடியாகிட்டு இருக்கு என்று ரோபோ ஷங்கர் விளையாட்டாக சொன்னார். டான்சிங் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார் ரோபோ ஷங்கர்.

நேற்று ஞாயிறு மாலை டான்சிங் சூப்பர் ஸ்டார் ஃபினாலே நிகழ்ச்சி நடைப்பெற்றது. அப்போது நடுவர்களின் ஒருவராக பங்கேற்று வந்த ஆல்யா சஞ்சீவுக்கு விஜய் டிவி சார்பாக வளைகாப்பு நடத்தி வச்சு கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியின் போது வாழ்த்துக்கள் சொல்லிய ரோபோ ஷங்கர், விஜய் டிவியில் பிரசவ வார்டும் ரெடியாகுதாம் என்று கிண்டல் அடித்தார். ஆல்யாவின் பெற்றோரும் தமது மக்களின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விஜய் டிவிக்கு வந்து சிறப்பித்தனர்.

விஜய் டிவி கோர்த்து விடும்

விஜய் டிவி கோர்த்து விடும்

விஜய் டிவியே சீரியலில் சேர்த்து நடிக்க வச்சு கரெக்ட் பண்ணி விட்ருவாங்க. அப்புறம் கல்யாணம் செய்து வைப்பாங்க. அடுத்ததா வளைக்காப்பும் செய்து வச்சுருவாங்க. இன்னும் பிரசவம் மட்டும்தான் பார்க்கலை. அதுக்கும் பிரசவ வார்டு தயாகிராகி வருதாம்.. பிரசவமும் விஜய் டிவியே பார்த்துருவாங்க என்று கிண்டலாகப் பேசினார்.

அறந்தாங்கி நிஷா

அறந்தாங்கி நிஷா

அறந்தாங்கி நிஷாவுக்கு அண்மையில்தான் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவும் விஜய் டிவியில் சார்பாக நடத்தி வைக்கப் பட்டது. மணிமேகலை, உசேன் இருவருக்கும் ஊரறிய கல்யாணம் பண்ணி வச்சும் அழகு பார்த்தது விஜய் டிவி. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் டிடியின் கல்யாண நலுங்கு வைபோகத்தையும் சிறப்பாக செய்து முடித்தது விஜய் டிவி.

சஞ்சீவ் உருக்கம்

சஞ்சீவ் உருக்கம்

ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் பேசுகையில் திட்டமிடாமல்தான் எங்களுக்கு பாப்பா உண்டாச்சு. ஆல்யா இந்தப் பாப்பாவை நான் பெத்துக்கிட்டு அடுத்துதான் கெரியர் எல்லாம் பார்ப்பேன்ன்னு சொல்லிட்டாங்க. நான் எதுவும் கேட்கலை... ஆனால், அவங்க டெடிகேஷன் எனக்கு ரொம்ப பிடிச்சது. ஆல்யா வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்று கூறினார். எத்தனையோ பெரிய வாய்ப்புக்கள் எல்லாம் வந்துச்சு.. ஆனா, இவங்க பாப்பாதான் ஃபர்ஸ்ட் என்பதில் உறுதியா இருந்தாங்க என்றும் கூறினார்.

வளையல் பரிசு

வளையல் பரிசு

தங்க வளையல் ஒன்றை வாங்கி அணிவித்த சஞ்சீவ், தங்கச்சியை ரொம்ப மிஸ் பண்றதா ராத்திரியில் அழுவாங்க.. அம்மாவையும் மிஸ் பண்றதா சொல்லுவாங்க.. இப்போ என்ன பண்ணலாம் என்று ஆல்யாவை கேட்க, அவர் ஒன்றும் சொல்லாமல் இருந்தார். உடனே சர்ப்ரைஸாக ஆல்யாவின் அம்மா, அப்பா, தங்கை மூவரும் வந்து நின்றதை பார்த்த ஆல்யா பேச முடியாமல் அழுதார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+