அவர் கையை புடிச்சுட்டு, சுமங்கலியா சாகணும்! எனக்கு ரோபோ சங்கர் மட்டும் தான்! பிரியங்காவின் ஆசை! பரிதாபம்
சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தார். அவரது மரணம், திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரோபோ சங்கரின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி பிரியங்கா சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று இப்போது மீண்டும் வைரலாகி, பார்ப்போரின் கண்களைக் கலங்க வைத்துள்ளது.

மனைவி நடத்திய போராட்டம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரோபோ சங்கர் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, மிகவும் மோசமான நிலைக்குச் சென்றார். அவரது உடல் எடை நாளுக்கு நாள் குறைந்து வந்ததால், பிரியங்கா அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அப்போதுதான், அவருக்கு மஞ்சள் காமாலை இருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்க்குமாறு சொன்ன போது, ரோபோ சங்கர் மருத்துவமனையில் இருக்க முதலில் மறுத்துவிட்டாராம்.
அதனால், அவரை வீட்டுக்கே அழைத்து வந்து, மருத்துவர்கள் சொன்ன அனைத்து மருந்துகளையும், உணவுகளையும் பிரியங்கா வழங்கியிருக்கிறார். வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டுப் பழகிய ரோபோ சங்கருக்கு, பத்திய சாப்பாடு சாப்பிட முடியவில்லை. இதனால், கணவன் மனைவிக்கு இடையே தொடர்ந்து சண்டைகள் வந்தன.
அந்தச் சமயத்தில் ஒரு டாக்டர், "இந்த நேரத்தில் அவர் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அன்பை மட்டுமே கொடுத்து அவரை நம்முடைய வழிக்குக் கொண்டு வர வேண்டும்"என்று பிரியங்காவிடம் அட்வைஸ் செய்தாராம்
பிரியங்காவின் கவலை
டாக்டர் ரொம்ப சங்கருடைய நிலைமையை பற்றி சொன்னதும் பிரியங்கா வரை வேறு விதமாக தான் நம்முடைய வலிக்கு கொண்டு வரணும் என்று ரோபோ சங்கரிடம் அன்பாகப் பேசத் தொடங்கினாராம். "நீ இல்லைனா இந்தக் குடும்பத்துக்கு யார் இருக்கா? என்னையும், பாப்பாவையும் யார் பார்த்துப்பா? கடைசி வரைக்கும் சுமங்கலியாகவே இருக்க வேண்டும். உங்க கையைப் பிடித்துக்கொண்டே என்னுடைய வாழ்க்கையும் முடிய வேண்டும். கடைசி வரைக்கும் நீ என்கூட இருக்கணும், எனக்கு நீ, உனக்கு நான், என்னை ஏமாத்திடாதே" என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.
பிரியங்காவின் இந்த வார்த்தைகளைக் கேட்டு ரோபோ சங்கர் மனம் உருகி, அவர் கொடுத்த மாத்திரைகள், உணவுகள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டாராம். தொடர்ந்து நான்கு மாதங்கள் பிரியங்கா பெரிய போராட்டத்தைச் சந்தித்திருக்கிறார். "எப்படியாவது இவரை மீட்டுக் கொண்டு வர வேண்டும்" என்ற ஒரே எண்ணம் மட்டுமே தான் அவருக்கு இருந்ததாம். அதன் பலனாக, அந்தப் போராட்டத்தில் அவர் வென்று, ரோபோ சங்கரை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வந்தார்.
அப்போது பிரியங்கா பேட்டியில், "பல போராட்டங்களைக் கடந்து இவரை எப்படியோ மீட்டுக் கொண்டு வந்து விட்டேன்" என்று சந்தோஷமாகப் பேசி இருந்தார். ஆனால், காலம் வேறுவிதமாக முடிவு செய்துவிட்டது.
உடல் தகனம், மீள முடியாத சோகம்
ரோபோ சங்கரின் மறைவுக்கு, நடிகர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தனது அன்பு கணவருக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய ஒரு மனைவி, அவரை மீட்டு வந்துவிட்டதாக நம்பிய நிலையில், மீண்டும் ஒருமுறை இதே வலியைச் சந்தித்தது பெரும் சோகம்.
ரோபோ சங்கரின் இழப்பு, அவரது குடும்பத்தினருக்கு மீள முடியாத சோகத்தைக் கொடுத்துள்ளது. அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ரோபோ சங்கரனுடன் பல வருடங்கள் வாழ வேண்டும் என்று ஆசையோடு காத்திருந்த அவருடைய மனைவிக்கு நேற்று நடந்தது பெரிய அதிர்ச்சியான சம்பவம்தான். நான் சுமங்கலியாக சாக வேண்டும் என்று ஆசையோடு இருந்த ரோபோ சங்கர் மனைவி நேற்று ரோபோ சங்கரின் உடல் முன்பு அவருக்கு சடங்குகள் செய்யும்போது கதறி அழுதது பார்ப்போரை கலங்க வைத்தது. பிரியங்காவிற்கு தலையில், பூ வைத்து கை நிறைய வளையல்கள் போட்டு சடங்குகள் செய்யும் போது அவர் தன்னுடைய நிலைமையையும், நிறைவேறாத ஆசைகளையும் சொல்லி அழுது கொண்டே இருந்தார்.












Click it and Unblock the Notifications