Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்க வளையலை ரோபோ சங்கருக்காக கழட்டிய பிரியங்கா.. கோடி ரூபாய் வீட்டுக்கு EMI கட்ட.. அட தங்கமான குணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரோபோ சங்கர் இறக்கும் தருவாயில் அவரது குடும்பம் கடன் சுமையில் சிக்கிவிட்டதாக, அவர்களது குடும்பத்துக்கு நெருக்கமான நண்பர் ஒருவரே, காணொளி ஒன்றில் கூறியிருக்கிறார். ஆனால் அதையெல்லாம் கேட்கவே ஆச்சரியமாக இருக்கு.. காரணம், ரோபோ சங்கரை எப்போது பார்த்தாலும் கலகலவென்று சிரித்து கொண்டுதான் இருப்பார்.. அவருக்குள் இவ்வளவு வேதனைகள் இருந்ததா? என்று வியப்பாக உள்ளது என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Media CIrcle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "ரோபோ சங்கரின் மரணத்துக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன.. குறிப்பாக 1000-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் உடலில் பெயிண்டை தடவி நடித்ததால்தான், உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு ரோபோ சங்கர் இறந்ததாக பலரும் காரணங்களை சொல்லியிருந்தனர்.. ஆனால், அவரது மகள் அதனை மறுத்துள்ளார்.. உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக விளக்கம் தந்துள்ளார்,.. அதேபோல ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் மனைவி நடனமாடியது சர்ச்சையை கிளப்பியிருந்தது,.

robo shankar priyanka gold bangles

பிரியங்கா ஆடிய டான்ஸ்

இதற்கும் அவரது மகள் இந்திரஜா விளக்கம் தந்துள்ளார்.. அப்பா, அம்மா இருவருமே நடன கலைஞர்கள்.. காதலித்து திருமணம் செய்ததற்கு காரணமாக இருந்ததே நடனம்தான்.. எப்போதுமே வீட்டில் இருவரும் நடனமாடி கொண்டேயிருப்பார்கள்.. அப்பாவுக்கு நடனமாடுவது பிடிக்கும் என்பதால், அவரது மரணத்தில் நடனமாடியிருந்தார்.. இதுகுறித்து பலரும் பேசிய வீடியோக்களை பார்த்தோம். ஆனால், நாங்கள் அதை குறித்து எதுவும் பேச விரும்பவில்லை.

ரோபோ சங்கர் இறக்கும் தருவாயில் அவரது குடும்பம் கடன் சுமையில் சிக்கிவிட்டதாக, அவர்களது குடும்பத்துக்கு நெருக்கமான நண்பர் ஒருவரே, காணொளி ஒன்றில் கூறியிருக்கிறார். ஆனால் அதையெல்லாம் கேட்கவே ஆச்சரியமாக இருக்கு.. காரணம், ரோபோ சங்கரை எப்போது பார்த்தாலும் கலகலவென்று சிரித்து கொண்டுதான் இருப்பார்.. அவருக்குள் இவ்வளவு வேதனைகள் இருந்ததா? என்று வியப்பாக உள்ளது.

கழுத்திலிருந்த தங்க நகை, வளையல்

ரோபோ சங்கரை பெருங்குடியில் மருத்துவமனையில் அனுமதித்திருந்தபோது, நிலைமை கவலைக்கிடமாகிவிட்டது. அதனால் கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.. அந்த நேரத்தில் மருத்துவமனை பில், இறுதிச்சடங்கு செய்வதற்கான பணம் எதுவும் இல்லாமல், ரோபோ சங்கர் மனைவி தன்னுடைய கழுத்திலிருந்த செயின், வளையலை கழட்டி, ஒரு சின்னத்திரை கலைஞரிடம் தந்து விற்க சொல்லி உள்ளார்.. மேலும் பணம் பற்றாததால், இந்திரஜாவும், தன்னுடைய நகைகளை கழட்டி தந்துள்ளார்.

உடனே அந்த சின்னத்திரை கலைஞர், தாலிக்கொடி மட்டும் கழட்டி தர வேண்டாம் அக்கா.. அண்ணன் உயிருடன்தானே இருக்காரு? அதனால் தாலிக்கொடியை தராதீங்க என்று சொல்லி உள்ளார். அதற்கு பிறகு தான் நகைகளை விற்று செலவு செய்துள்ளனர்.

ஓடி ஓடி உதவிய ரோபோ சங்கர்

இதுகுறித்து இதெல்லாம் உண்மையா என்று விசாரித்தால், உண்மைதான் என்று தகவல்கள் கூறுகின்றன.. ஏனென்றால், எப்போதுமே ரோபோ சங்கர் நிகழ்ச்சி செய்ய போனால், உங்களைவிட பிரபலமானவர்களை நிகழ்ச்சிக்கு கூட்டிட்டு வாங்க, அப்போதுதான் உங்களுக்கு பேமெண்ட் என்று சொல்லிவிடுவார்களாம்.

உடனே ரோபோ சங்கரும், வாய்ப்பு கிடைக்காமல் நிகழ்ச்சி செய்யாமல் உள்ளவர்கள் யார் யார் என்று விசாரித்து, வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுகிறவர்களை அழைத்து நிகழ்ச்சி செய்திருக்கிறார்... இப்படி பல பேருக்கு ரோபோ சங்கர் உதவியிருக்கிறார்..

அதேபோல கொரோனா காலகட்டத்தில் பல உதவி இயக்குனர்களுக்கு உதவியிருக்கிறார்.. கதை சொல்வதற்கு டைரக்டர்கள் யாரையாவது சிபாரிசு செய்யும்படி வந்து கேட்டிருக்கிறார்கள்.. அத்தனை உதவி இயக்குனர்களுக்கும், சிபாரிசு செய்து உதவியுள்ளார். அதுமட்டுமல்ல, கொரோனா நேரத்தில் வருமானமின்றி இருந்ததால், நூற்றுக்கணக்கான உதவி இயக்குனர்களுக்கு ரீ-சார்ஜ் செய்துவிடுவாராம் ரோபோ சங்கர்.

வளசரவாக்கம் 2 கோடி வீடு

ஒரு லட்சம் மேடை நிகழ்ச்சிகளை செய்திருக்கிறார் ரோபோ சங்கர்.. தான் புகழ் பெற துவங்கியதுமே சொந்தமாக வீடு வாங்கியிருக்கிறார்.. அந்த வீட்டுக்கு மாதம் ஒன்றரை லட்சம் இஎம்ஐ கட்ட வேண்டியிருந்தது..

தொடர்ந்து பணம் கட்டி வந்த நிலையில்தான், 2 வருடங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார்.. அப்போது சிகிச்சைக்கு செலவுகள் ஆயின.. சிகிச்சை முடிந்து வந்தபிறகும்கூட முன்புபோல் ரோபோவுக்கு வாய்ப்புகள் கிடைக்கல..

இதனால் 7 மாதங்களுக்கு இஎம்ஐ கட்டாமல் இருந்துள்ளார்.. இறுதியில் இறப்பதற்கு ஒரு வாரம் முன்புதான், தான் பிரியப்பட்டு வைத்திருந்த இன்னோவா காரை 17 லட்சத்துக்கு விற்றுள்ளார்.. தற்போது வளசரவாக்கத்தில் உள்ள அந்த வீடு ஒன்றரை, இரண்டு கோடி பெறும் என்கிறார்கள்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+