கர்ப்பத்தை அறிவித்த இந்திரஜா.. விஜய் டிவியில் எமோஷனலாக ரோபோ சங்கர் சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா அவருடைய கணவர் உடன் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த ரோபோ சங்கர் எமோஷனலாகி சில வார்த்தைகளை பேசி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் கலக்கி கொண்டு இருப்பவர்தான் ரோபோ சங்கர். இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கி பல கஷ்டங்களை தாண்டி இன்று புகழின் உச்சத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Television Robo Shankar

அதுபோல அவருடைய மகளான இந்திரஜா சங்கர் 2019 ஆம் ஆண்டு வெளியான விஜயின் பிகில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமடைய தொடங்கி இருந்தார். அந்த திரைப்படத்தில் பாண்டியம்மா என்ற இவருடைய கேரக்டர் பெரிய அளவில் பிரபலமானது. அதற்குப் பிறகு பெரிய அளவில் இவரும் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் அவருடைய மாமாவான கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கடந்த மார்ச் மாதம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரோபோ சங்கரின் சினிமா குருவான கமல்ஹாசன் மட்டுமின்றி நயன்தாரா, சூர்யா, ஜோதிகா என்று அதிகமான பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Television Robo Shankar

அவர்களுடைய திருமணம் பெரிய அளவில் பிரபலமாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திரஜா மற்றும் கார்த்திக் ஜோடி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது வெளியான பிரமோவில் ஒரு நல்ல விஷயம் ஒன்று இந்திரஜா வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது இந்திரஜா கர்ப்பமாக உள்ள நிலையில் நானும் என்னுடைய கணவரும் அப்பா அம்மா ஆகிவிட்டோம் என்று அதில் சொல்ல, அதைக் கேட்டு நடுவராக இருக்கும் ராதா உட்பட எல்லோரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறுகின்றனர். பிறகு அங்கு வந்த ரோபோ சங்கர் சின்ன வயதிலேயே தாத்தாவான பிரபலம் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Television Robo Shankar

பிறகு விஜய் டிவி மேடையில் இந்திரஜாவிற்கு சடங்குகள் நடத்தி அழகு பார்க்கப்பட்டுள்ளது. இந்திரஜா அவருடைய கணவரை திருமணம் செய்யும்போது அவர்களுடைய திருமணம் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. இவர்களுடைய திருமண வீடியோக்கள் இணையத்தில் அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரோபோ சங்கர் கோடிக்கணக்கில் தன்னுடைய மகளுக்கு செலவு செய்கிறார், ஆனால் இந்த திருமணம் பல நாட்கள் நிலைக்காது என்றெல்லாம் சிலர் தவறாக பேசி வந்தனர்.

ஆனால் அதற்கெல்லாம் ரோபோ சங்கர் அவருடைய குடும்பத்தோடு பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இப்போது இவர்கள் கர்ப்பமாக இருப்பதை அறிவுத்திருக்கும் நிலையில் இந்திரஜா மற்றும் கார்த்திக் தம்பதிக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+