ரோபோ சங்கர் மகள் ரிசப்ஷனுக்கு மட்டும் இத்தனை கோடியா? சொன்னதை விட அதிகமாக இவ்வளவு பேரு வந்தாங்களா?
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கருக்கு அவருடைய மாமன் கார்த்திக் உடன் கடந்த வாரத்தில் திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இந்த தம்பதியின் ரிசப்ஷன் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இது குறித்து ரோபோ சங்கர் பேசிய வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ரோபோ சங்கர் வீட்டு விசேஷம் முழுக்க முழுக்க தனியார் யூட்யூபில் ரெக்கார்டு செய்து வெளியிடப்பட்டு கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அந்த வீடியோவில் ரோபோ சங்கர் தன்னுடைய மகள் கல்யாணத்திற்கு தாங்கள் 3000 பேருக்கு அழைப்பு விடுத்திருந்தோம் ஆனால் வந்தது ஒன்பதாயிரத்திற்கு மேலே நபர்கள் வந்திருந்தார்கள் என்று சந்தோசமாக பேசியிருக்கிறார்.

சமூக வலைத்தளத்தை திறந்தாலே ஒரு சில நாட்களாகவே ரோபோ சங்கர் வீட்டு திருமண புகைப்படங்கள் மற்றும் அதை சார்ந்த வீடியோக்கள் தான் அதிகமாக வைரலாகி கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் ரோபோ சங்கரின் ரசிகர்கள் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் நெகட்டிவ் ஆக கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
ஆனாலும் சமூக வலைத்தளத்தில் இருந்த வீடியோஸ் மற்றும் புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டு கொண்டிருக்கிறது. ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிவடைந்து இருந்தது. நிச்சயதார்த்தத்திற்கு பிறகு தங்களுடைய மகளின் திருமணத்திற்கு பிரபலங்கள் பலருக்கும் குடும்பத்தோடு சென்று ரோபோ சங்கர் இன்விடேஷன் கொடுத்து வரவேற்று இருந்தார்.
அது குறித்த புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோபோ சங்கரின் மகள் மற்றும் மனைவி வெளியிட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் ரோபோ சங்கர் எதிர்பார்த்ததுபடியே தன்னுடைய மகளின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி முடித்து இருக்கிறார். மதுரையில் திருமணம் நடைபெற்று இருந்தாலும் சென்னையில் திரை பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்காக பெரிய அளவில் ரிசப்ஷன் நடத்தப்பட்டது.
அதில் அதிகமானோர் கலந்து கொண்டனர். அது பற்றி ரோபோ சங்கர் பேசுகையில், "இந்த பங்க்ஷனுக்கு வந்த அனைவருக்கும் நன்றி. நான் எதிர்பார்க்கவே இல்லை இப்படி இருக்கும் என்று... இது கல்யாண பங்க்ஷன் போன்று இல்லை. திருவிழா போன்று இருந்தது. நான் சினிமாவில் பணத்தை சம்பாதித்ததை விடவும் உங்கள் அன்பை அதிகமாக சேர்ந்துள்ளேன். நாங்கள் எதிர்பார்த்தது 3000 பேர்தான். ஆனால் இங்கே ஃபங்ஷனுக்கு வந்தது 9 ஆயிரத்திற்கு மேற்பட்டோர்."
அதனால் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டது. ஆனாலும் நாங்கள் நிகழ்ச்சியை கவனிக்க ஒப்படைத்திருந்தவர்கள் திறமையாக அதை கையாண்டு விட்டார்கள். ஆனால் மேடைதான் இரண்டு முறை உடைந்து போய்விட்டது. மேடையில் எல்லோரும் ஏறி போனதால் மேடை இரண்டு முறை சரி செய்ய வேண்டிய நிலைமை ஆகிவிட்டது என்று அந்த வீடியோவில் ரோபோ சங்கர் பேசி இருக்கிறார்.
இது குறித்து ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் ரோபோ சங்கர் மகளின் ரிசப்ஷனுக்கு மட்டுமே கிட்டதட்ட 1 1/2 கோடி செலவாகி இருக்கலாம் என்று கூறி வருகின்றனர். ஆனால் இந்த செலவுகள் குறித்து ரோபோ சங்கர் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
அதே நேரத்தில் இதுபோலத்தான் ரோபோ சங்கரின் மகள் நலங்கு பங்க்ஷனுக்கும் 2 கோடி செலவு ஆனது என்று இணையத்தில் அதிகமான கருத்துக்கள் குவிந்து வந்த நிலையில் அது குறித்தும் ரோபோ சங்கரின் மனைவி விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில் இரண்டு கோடி செலவு என்று சொல்கிறார்கள் இங்கு இரண்டு தெருகோடி வேணா இருக்கு, இரண்டு கோடி எல்லாம் இல்ல என்று அதற்கு கிண்டலாக அவர் பதில் கொடுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications