மாமியாருக்கு முத்தம் கொடுத்தது ஏன்? விளக்கம் கொடுத்த ரோபோ சங்கர் மருமகன்.. நடந்தது இதுதானாம்
சென்னை: காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையில் வைத்து திருமணம் நடைபெற்றது. அதற்கு பிறகு ரிசெப்ஷன் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது ஃபோட்டோ ஷூட் நடைபெறும் போது ரோபோ சங்கர் மனைவிக்கு அவருடைய மருமகன் உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இது குறித்து சில நாட்கள் கழித்து இப்போது ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக் அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ரோபோ சங்கர் ஆரம்ப காலகட்டத்தில் மேடை நிகழ்ச்சி கலைஞர் ஆக இருந்து பல போராட்டங்களுக்கு பிறகு படிப்படியாக தன்னுடைய திறமையின் காரணமாக முன்னணி நடிகர்கள் பலரோடு இப்போது முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ரோபோ சங்கரின் ஒரே மகளான இந்திரஜா சங்கர் "பிகில்" திரைப்படத்தின் மூலமாக பாண்டியம்மா கேரக்டரில் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதைத் தொடர்ந்து பெரிய அளவில் திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் ஒரு சில சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவருடைய மாமா கார்த்திக்குடன் அவருக்கு எங்கேஜ்மென்ட் முடிவடைந்தது.
எங்கேஜ்மென்ட் நேரத்தில் தன்னுடைய அப்பாவிற்கு உதட்டில் முத்தம் கொடுத்தது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. அது குறித்து இந்திரஜா சங்கர் நான் குழந்தையாக இருக்கும்போது இருந்து எங்களுடைய அப்பாவுக்கு அப்படித்தான் முத்தம் கொடுப்பேன். ஆனால் அதை தவறு என்றும் ஆபாசம் என்றும், சிலர் பேசி வருகிறார்கள். அதைப் பற்றி எனக்கு கவலை கிடையாது என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
அதைத் தொடர்ந்து இந்திரஜாவின் திருமணம் மதுரையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சென்னையில் ரிசப்ஷன் நடைபெற்றது. திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ரோபோ சங்கர் வீட்டில் திருமண பங்க்ஷன் தொடங்கிவிட்டது. அதுவும் ஹல்தி, மெஹந்தி பங்க்ஷன் போன்றவை இந்திரஜா திருமணத்தில் இடம் பெற்றுள்ளதால் அதுவும் அதிகமாக விமர்சிக்கப்பட்டது.
ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இந்திரஜாவின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் போட்டோ எடுக்கும் போது ரோபோ சங்கரின் மனைவிக்கு அவருடைய மருமகன் உதட்டில் முத்தம் கொடுப்பது போன்று ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது. இது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
மாமியாருக்கு மருமகன் உதட்டில் முதல் முத்தம் கொடுப்பது எந்த கலாச்சாரம் என்று பலர் கேள்வி எழுப்பி திட்டி வருகிறார்கள். இந்த நிலையில் ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக் இதுகுறித்து முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில், நான் என்னுடைய அக்காவுக்கு (மாமியார்) கன்னத்தில் முத்தம் கொடுக்கப் போனேன்.
அப்போது அவர் எதிர்பாராத விதமாக திரும்பியதால் அந்த போட்டோவில் அந்த மாதிரி வந்துவிட்டது. ஆனால் ப்ளான் பண்ணி நான் உதட்டில் முத்தம் கொடுத்து நாங்கள் புகைப்படம் எடுக்கவில்லை என்று விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications