மேஜிக்கல் பாண்ட்..மகன் புகைப்படத்தை பதிவிட்ட ரோஜா ஹீரோ சிபு சூர்யன்
சென்னை: அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான மேஜிக் பந்தம் என்று தனது மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் ரோஜா சீரியல் ஹீரோ சிபு சூர்யன். அந்த போட்டோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் தற்போது சின்னத்திரையில் டாப் சீரியலில் ஒன்றாக இருந்து வருகிறது. வாரம்தோறும் டிஆர்பியில் எப்படியாவது இடம் பிடித்து விடும்.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

ரோஜா அர்ஜூன்
சீரியலில் ரோஜா கர்ப்பமாக இருக்கிறார். அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். ரோஜாவிற்கு பழைய சம்பவங்கள் மறந்து விட்டது. மனைவிக்காக ஏங்கி தவிக்கிறார் அர்ஜூன்.
அர்ஜூனாக நடிக்கும் நடிகர் சிபு சூர்யன் சீரியலை விட்டு கிளம்புகிறேன் என அறிவிப்பு வெளியிட்டு அந்த முடிவை கடைசியில் ரசிகர்களுக்காக மாற்றிக் கொண்டார். அந்த அளவுக்கு இந்த சீரியல் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

சிபு சூர்யன்
சிபு சூர்யன், பிரியங்கா இருவருமே தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வைத்துள்ளனர். சிபு சூர்யன், அர்ஜூன் ரோலுக்காக 2 முறை சன் டிவி விருதையும் கைப்பற்றியுள்ளார். இவருக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பலரும் சிபுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி இருந்தனர். ஆனால் மகனின் புகைப்படத்தை சிபு சூர்யன் வெளியிடவில்லை.

மகனின் புகைப்படம்
இந்நிலையில் முதன்முறையாக தனது மகனின் கைவிரலை பிடித்திருக்குபடியான புகைப்படத்தை சிபு சூர்யன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஃபோட்டோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. இத்துடன் " நாம் ஒன்றாக இணைந்தால் எல்லாம் சிறப்பாக இருக்கும்.தந்தைக்கும் மகனுக்கும் இடையில் மேஜிக்கல் பாண்ட்" என்ற கேப்ஷனையும் சிபு சூர்யன் பதிவு செய்துள்ளார்.

கலக்கல் ஹீரோ
கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார் சிபுசூர்யன். ரோஜா சீரியலுக்குப் பிறகு தான் எந்த புது சீரியலில் நடிக்க மாட்டேன் என அவர் ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இனி அவர் சினிமாவில்தான் கவனம் செலுத்தப் போகிறாராம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications