ரோஜா...தொட்டிலையும் கட்டறா.. பிள்ளையையும் கிள்றாளே...ஆனா உண்மையை மட்டும்....!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சன் டிவியின் ரோஜா சீரியலில் இளமை, துள்ளல், குதூகலம் எல்லாமே நிறைஞ்சு இருக்கு.

யார் என்ன ரொமான்ஸ் செய்தாலும், ரோஜாவும் அர்ஜுனும் ரொமான்ஸ் பண்ணுவது பார்க்க கொஞ்சம் ஸ்பெஷலாத்தான் இருக்கு.

கட்டிப் பிடிக்கறது ,முத்தம் கொடுப்பது என்று இல்லேன்னாலும் , ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கற பேச்சில ரொமான்ஸ் தெறிக்குது..

சொல்லமாத்தானே

சொல்லமாத்தானே

அர்ஜுன் சார்கிட்ட காதலை சொல்லணும்னு பைக்ல அர்ஜுனை கட்டிக்கிட்டு போகணும்னு ஆசைப்படறா ரோஜா.கார் சாவியை ஒளிச்சு வச்சுக்கிட்டு, அர்ஜுன் சாவியைத் தேட ,பைக்ல போலாம்னு சொல்றா ரோஜா. இப்படி தன் ஆசையை நிறைவேத்திக்கறா ரோஜா.

குங்குமம் இல்லை

குங்குமம் இல்லை

கோயிலில் அர்ஜுன் சாரிடம் நான் காதலை சொல்லப் போறேன்.. எனக்கு வரம் குடு தாயேன்னு குங்குமம் கேட்க, விபூதி வருது. ரோஜா அழ.. ரெண்டிலும் நான்தான் விபூதி வச்சேன்னு சொல்றான் அர்ஜுன். ரோஜா அவனை செல்லமா கடிந்து நீங்க வெளிய போங்க சார்னு சொல்லிட்டு, அவ சாமி கும்பிடறா.

ஆசை தொட்டில்

ஆசை தொட்டில்

கோயிலில் தொட்டில் கட்ட ஆசை வருது ரோஜாவுக்கு. கடையில் போயி ஒரு தொட்டில் வாங்கிட்டு வந்து மரத்தில் கட்ட எக்கி எக்கி பார்க்கறா முடியலை. அர்ஜுன் இதை பார்த்துகிட்டே நிக்கறான். முன்பு ஒரு முறை ரோஜாவை தொட்டில் கட்ட அவன் தூக்கி விட்டது நினைவுக்கு வருது.

டின்னின் மேல்

டின்னின் மேல்

அருகில் இருந்த ஒரு டின்னை எடுத்து அதன் மேல் நின்று, நீதான் இப்போ எனக்கு அர்ஜுன் சார்.. நான் கீழ விழாமல் தாங்கிப் புடிச்சுக்கணும். நான் இன்னிக்கு அர்ஜுன் சார்கிட்ட லவ்வை சொல்லிடணும்..நானும் அவரும் புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்து எங்களுக்கு குழந்தை பிறக்கணும்னு வேண்டிக்கிட்டு டின் மேல ஏறி தொட்டிலை கட்டறா.

அர்ஜுன் பிடிக்கறான்

அர்ஜுன் பிடிக்கறான்

ரோஜா எக்கி எக்கி தொட்டிலை கட்ட... டின் சாயுது. ஓடிவந்து அர்ஜுன் பிடிச்சுக்கறான். என்ன ரோஜா எதுக்கு இப்போ தொட்டில் கட்டினேன்னு கேட்க...சேச்சே... இல்லை சார்.. யாரோ கட்டின தொட்டில் கீழே விழுந்து கிடந்தது..பாவம் என்ன வேண்டுதலோ அவங்களுக்குன்னு அதை எடுத்து கட்டினேன் அவ்ளோதான்னு சொல்றா..

தொட்டில் நீ வாங்கலியா

தொட்டில் நீ வாங்கலியா

அப்போ தொட்டில் நீ வாங்கி கட்டலியான்னு கேட்கறான். நான் எதுக்கு சார் தொட்டில் கட்டணும்னு சொல்லிட்டு வாங்க சார் போலாம்னு சொல்றா. ரெண்டு பேரும் போகும்போது ஏம்மா தொட்டில் வாங்கிட்டு, மீதி காசை வாங்காம போறியேம்மான்னு கடைக்காரம்மா காசை கூப்பிட்டு கொடுக்கறாங்க.

ரோஜா..அப்போ நீதான் தொட்டில் வாங்கி காட்டினியான்னு அர்ஜுன் கேட்கறான்.. சார் வீணா பேசிக்கிட்டு நிக்காதீங்க சார்.. போயி பைக்கை எடுத்துக்கிட்டு வாங்கன்னு சொல்லி சமாளிக்கறா..

இதெல்லாம் பார்க்க இளமைத் துள்ளலா இருக்கு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+