விஜய் லக்கில் ஜெயித்து விட்டார் என்று சொன்ன ரோஜா.. இந்த மாற்றம் நடக்குமா? என ரசிகர்கள் கேள்வி!
சென்னை விஜய் அரசியலுக்கு வந்தபோது இருந்த எதிர்பார்ப்பும் அவர் தற்போது முதலமைச்சராக இருக்கும் நிலை.. இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் கடந்த சில மாதங்களில் தமிழக அரசியலில் நடந்த மாற்றம் ரொம்பவே பெரியது. ஒரு நடிகராக பல வருடங்கள் ரசிகர்களை வைத்து இருந்த விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலில் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் பதவிக்கு வந்திருக்கிறார். இப்போது வந்த ஆட்சியின் ஆரம்ப கட்டம் குறித்து விவாதங்களும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா விஜயின் அரசியல் பயணம் பற்றி பேசி இருக்கும் சில கருத்துக்கள் சோசியல் மீடியாவில் மீண்டும் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. ரோஜா சொன்னதில் முக்கியமான விஷயம் விஜய் உடனடியாக அமைச்சராகி விட்டதால் அரசியலில் ஒரு கட்சியாக பெரிய கஷ்டத்தை அனுபவிக்கவில்லை, அவர் இந்த முறை தோற்று இருந்தால் 5 வருடங்கள் கட்சியை எப்படி காப்பாற்றுவது என்று ரொம்பவே கஷ்டப்பட்டு இருப்பாரு.

விஜய் அரசியல் பற்றி ரோஜா
அதோடு அவர் லக் இருந்ததால் முதல் முறையே முதலமைச்சர் ஆகிவிட்டார் என்றும் ரோஜா சொல்லியிருந்தார். இதுதான் இப்போது விஜய் ஆதரவாளர்கள் மற்றும் அவரை விமர்சிப்பவர்கள் மத்தியில் வேறு ஒரு விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ரோஜா பேசியதில் சாரம்சம் என்னவென்றால் விஜய் தேர்தலில் தோல்வியடைந்து எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் அடுத்த 5 ஆண்டுகள் கட்சியை எப்படி நடத்துவது? தொண்டர்கள் எப்படி தக்க வைப்பது? தொகுதி வாரியாக மக்களை எப்படி சந்திப்பது என நிறைய கஷ்டங்களை சந்தித்து இருப்பார்.
ஆனால் முதல் தேர்தலில் முதலமைச்சர் ஆகிவிட்டதால் அந்த அரசியல் போராட்டத்தை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்படவில்லை என்று கூறினார். இன்னொரு முக்கியமான விஷயத்தையும் அவர் சுட்டிக் காட்டி இருந்தார். சினிமாவில் விஜய் வில்லனுடன் சண்டை போட்டு ஏழைகளுக்கு ஆதரவாக நிற்பதை பார்த்த மக்கள் நிஜ அரசியலிலும் அவர் அதே மாதிரி செயல்படுவார் என்று கற்பனையில் வாக்களித்திருக்கிறார். ஆனால் உண்மையில் எப்படி ஆட்சி செய்வார் என்பது தேர்தலுக்கு முன்பு யாருக்கும் முழுமையாக தெரியாது என்றும் சொல்லி இருந்தார்.
ரோஜாவின் கருத்தை ஏற்றுக் கொள்ளாத விஜய் ரசிகர்கள் மக்கள் சினிமா ஹீரோவை மட்டும் பார்த்து ஓட்டு போடவில்லை. விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவர் பேசிய கொள்கைகள், தவெக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள், மாற்று அரசியல் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றை பார்த்து தான் ஆதரவு கொடுத்தார்கள் என்று பலர் பதிலளித்து வருகிறார்கள். மேலும் முதல் தேர்தலிலே வெற்றி பெற்றது லக் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அதற்கு பின்னால் பல ஆண்டுகளாக இருந்த ரசிகர்கள் என்ற அமைப்பும் விஜயின் அரசியல் பயணமும் இருக்கிறது என்றும் சிலர் வாதிடுகின்றனர்.
ரோஜா பேசிய விஷயம்
ஆனால் ரோஜா பேசியதில் இன்னொரு விஷயமும் இப்போது கவனத்தை ஈர்த்து இருக்கிறது. தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பல இடங்களில் மக்கள் தனிப்பட்ட வேட்பாளரை விட விஜய் என்ற பெயரையே முன்னிலைப்படுத்தி வாக்களித்திருக்கலாம். எல்லா தொகுதிகளிலும் விஜயே போட்டியிடுவது போல மக்கள் பார்த்தார்கள். சில இடங்களில் தங்களுடைய வாக்காளர் யார் என்று கூட தெரியாமல் பல மக்கள் விஜய்க்காக வாக்கு செலுத்தி இருக்கிறார்கள். இது விஜய்க்கான அங்கீகாரம் தான்.
இது விஜய் மீது மக்கள் வைத்திருந்த அன்பு வெளிப்பாடு கூட காரணமாக இருக்கலாம் என்று அவர் சொல்லி இருக்கிறார். ஆனால் ரோஜா சொல்வது விமர்சனம் என்று பார்க்கின்றவர்களும் இருக்கிறார்கள் அரசியல் அனுபவத்திலிருந்து சொல்லும் ஆலோசனை என்று பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஏற்கனவே இருந்த கட்சிகள் ஆட்சி செய்தது போல தொடர்ந்து கொண்டிருந்தால் மக்களுக்கு இந்த ஆட்சியின் மீது அதிருப்தி ஏற்பட்டு விடும்.
மக்கள் கருத்து
கொலை, கொள்ளை, பாலியல் கொடூரங்கள் என இதற்கு முந்தைய ஆட்சிகளில் நடந்த சம்பவங்களை போலவே இப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பது பற்றியும் பலரும் பேசி வருகிறார்கள். இதை தடுப்பதற்கான முயற்சிகளை முறையாக செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு இதற்கு முந்தைய ஆட்சியில் நடக்கவில்லையா? என்று கேள்விகள் வராமல் இருந்தால் சரி என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.




Click it and Unblock the Notifications
