Roja Serial: புருஷன்னா அர்ஜுன் மாதிரி இருக்கணும்! அவன் இல்லேன்னுதானே....!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் ஒரு அனாதை பெண்ணை கல்யாணம் செய்துக்கொண்டால் அவள் அந்த வீட்டில் என்ன கஷ்டங்களை அனுபவிப்பாள் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது.

அதே சமயம் அப்படிப்பட்ட ஒரு பெண்ணை விரும்பி கல்யாணம் செய்துகொண்ட கணவன் எத்தனை கடமை பொறுப்பு உணர்ச்சியோடு, அந்த மனைவியை பார்த்துக் கொள்கிறான் என்பதையும் எல்லாரும் ரசிக்கும்படியும், புரிந்து கொள்ளும் படியும் சீரியலை எடுத்திருக்கிறார்கள்.

ரோஜாவாக நடித்து இருக்கும் பிரியங்காவும், அர்ஜூனாக நடித்து இருக்கும் பையனும் அப்படியே வாழ்ந்து மனதை கவர்ந்து இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்..

ரோஜா அணு

ரோஜா அணு

அணுவும் ரோஜாவும் ஓர் ஆஸ்ரமத்தில் வளர்கிறார்கள். அணு ஆஸ்ரமத்தில் பிரச்சனைகள் வந்துட, எல்லாருமே வெளியில் வந்துட நேர்ந்துருது. அணு சாமர்த்தியமாக ரோஜாவின் சிறு வயது உடைகள், போட்டோக்களை திருடி தான்தான் அன்னபூரணி அம்மாவின் மகள் வயிற்று பேத்தி என்று சொந்தம் கொண்டாடி வீட்டுக்குள் புகுந்துடறா

அர்ஜுன் அணு

அர்ஜுன் அணு

அணுவை அர்ஜுனுக்கு கல்யாணம் செய்து வைக்கணும் என்று பாட்டி, விரும்ப அர்ஜுனுக்கு கல்யாணம் என்றாலே பிடிக்கலை. அப்போதுதான் தன்னிடம் ஆஸ்ரம கேஸ் விஷயமாக வந்த ரோஜாவை மனைவியா ஒரு வருஷத்துக்கு நடிக்க அக்ரிமெண்ட் போட்டுக்கிட்டு அவளை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்துடறான்.

உண்மையாக ரோஜாவை

உண்மையாக ரோஜாவை

ரோஜாவை ஒரு காலக் கட்டத்துக்குப் பிறகு உண்மையாக காதலிக்க ஆரம்பிச்ச அர்ஜுன், அவளும் தன்னை காதலிப்பதை அறிந்து உண்மையான கணவன் மனைவியாக வாழ்கிறார்கள்.இதிலும் அர்ஜுன் ஒரு கண்ணியவானாக நடந்துக்கறான். ரோஜா உன் அம்மா அப்பா யாருன்னு தெரிஞ்ச பிறகு நம்ம புருஷன் பொண்டாட்டியா வாழலாம். அதில் எனக்கு ஒண்ணும் கஷ்டமில்லை என்று ஒரு பெண்ணின் அதுவும் தனது மனைவியின் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடந்துக்கறான்.

ரோஜா அன்னபூரணி

ரோஜா அன்னபூரணி

ரோஜா வீட்டுக்கு வந்ததில் இருந்தே அவள் குலம் என்ன,கோத்திரம் என்னன்னு திட்டி கொண்டு இருக்கும் அன்னபூரணி அம்மா, ஒரு சண்டையில் ரோஜாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்றாங்க. அர்ஜுன் இல்லாத அந்த நேரத்தில், அவரை விட்டு போக மாட்டேன் என்று அடம் பிடித்து நிற்கும் ரோஜாவை கதற கதற வீட்டை விட்டு துரத்தறாங்க.

அர்ஜுன் தைரியம்

அர்ஜுன் தைரியம்

இதை கேள்விப்பட்டு வர்றான் பாருங்க நம்ம ஹீரோ...வந்து ரோஜாவின் கண்ணீரைத் துடைத்து, அவளை அணைத்தபடி,நான் வந்துட்டேன்ல... பயப்படாத ரோஜான்னு வீட்டுக்கு உள்ளே அழைச்சுட்டு போறான். நடு ஹாலில் நின்று அன்னபூரணி என்று கத்த அனைவரும் ஹாலுக்கு வருகிறார்கள்.இன்னிக்கு அர்ஜுனின் மீதி ஆட்டத்தைப் பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+