நிச்சயம் செய்துவிட்டு விட்டு சென்ற நடிகர்.. திருமணம் முடிந்த அடுத்த நாளே பிரியங்கா வெளியிட்ட வீடியோ
சென்னை: சன் டிவி ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்கரிக்கு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
பிரியங்கா நல்கரி ஏற்கனவே காதலித்து நிச்சயதார்த்தம் முடிந்து விட்டு பிறகு பிரிந்து போன அதே நடிகரை தற்போது திருமணம் செய்து இருக்கிறார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு நன்றி கூறி பிரியங்கா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ரோஜா சீரியல் கதாநாயகி
நடிகை பிரியங்கா நல்கிரி கோவிலில் மிகவும் எளிமையான முறையில் தனது திருமணத்தை முடித்து இருக்கிறார். சன் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ரோஜா சீரியல் கதாநாயகியாக நடித்தவர்தான் பிரியங்கா நல்கிரி. இவர் கிட்டத்திட்ட 4 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியலில் ரோஜாவாகவே தொடர்ந்து வந்தார். சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவடைந்தது. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் என்ற சீரியலில் நாயகி ஆக நடித்து வருகிறார்.

நிச்சயதார்த்தம்
கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் என்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "எப்படா வருவ? நான் உனக்காக காத்துட்டு இருக்கேன் டா" என்று ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டு இருந்தார். இது குறித்து இணையத்தில் அந்த நேரத்தில் அதிகமான கருத்துக்கள் இருந்தது. இந்த நிலையில் நடிகை பிரியங்காவிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நிச்சயதார்த்தம் முடிந்து இருந்தது. அவர் தெலுங்கு சீரியல் நடிகர் ராகுலை கடந்த சில மாதங்களாக காதலித்து நிச்சயதார்த்தம் செய்திருந்தார்.

கருத்து வேறுபாடு
பிரியங்கா மற்றும் ராகுல் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில் இவர்கள் திருமணம் நின்று போனதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து பேட்டியில் ஒன்றில் கூட பிரியங்கா எங்களுக்கு கடத்த ஆண்டு நிச்சயதார்த்தமானது. ஆனால் ஒரு சில காரணங்களால் கல்யாண தேதி தள்ளிக் கொண்டே போனது. மேலும் எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு தீர்க்க முடியாத அளவிற்கு பெரியதாகி விட்டது என்று கூறியிருந்தார்.

விரத்தியில் முடிவு
ஹைதராபாத்தில் இருந்து மலேசியா சென்ற ராகுல் என்ன இதுவரை தொடர்பு கொள்ளவே இல்லை. கடைசியாக முயற்சி செய்து மிகவும் கஷ்டப்பட்டு அவரை ஃபோனில் தொடர்பு கொண்டேன். ஆனால் அப்போதும் எந்த பயனும் இல்லை. இனிமேல் எங்களுக்குள் எதுவும் கிடையாது. நிச்சயதார்த்தம் கூட முடிஞ்சிடுச்சு அவரவர் வாழ்க்கையை பார்த்து செல்ல வேண்டியது தான் என்று கூறியிருந்தார்.

முதல் வீடியோ
சமீபத்தில் தான் பிரியங்காவின் சகோதரிக்கு திருமணம் முடிந்திருந்தது. பிரியங்கா இருக்கவே அவருடைய தங்கச்சிக்கு திருமணம் முடிந்திருக்கிறது. அப்போ பிரியங்காவிற்கு திருமணம் எப்போது என்று ரசிகர்கள் அதிகமாக கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு விரைவில் நல்ல செய்தி சொல்லுகிறேன் என்று பிரியங்கா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இவருக்கும் ராகுலுக்கும் திருமணம் படு சிம்பிளாக நடைபெற்று இருக்கும் புகைப்படத்தை அவரே வெளியிட்டு இருக்கிறார். அதற்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது தனக்கு வாழ்த்து கூறும் ரசிகர்களுக்கு உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதுபோல இன்னொரு வீடியோவில் தன்னுடைய கணவர் தனக்கு சாப்பாடு ஊட்டி விடுவதையும் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications