Roja Serial: இந்தா தம்பியும் ஆரம்பிச்சுட்டான்ல ரொமான்ஸை!
சென்னை: காதல், ரொமான்ஸ், ஊடல், கூடல் இல்லாத வாழ்க்கை, என்ன வாழ்க்கை. ஆனால், பாவம் காதலர்கள் இதை செய்தால் அந்த வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வசைபாடி, காதலர்களையே பிரித்து விடுகிறார்கள்.
அர்ஜுன் ரோஜா ரொமான்ஸ் படு பிரசித்தி. எப்படித்தான் இப்படி எல்லாம் கதை எழுதுகிறார்கள், அதற்கேற்ப அர்ஜுனும், ரோஜாவும் நிஜமாகவே ரொமான்ஸ் செய்வது போல நம்ப வைத்து விடுகிறார்கள்.
இப்போது அன்னபூரணி அம்மாவை ரொமான்ஸ் செய்து கடுப்பேத்த அர்ஜுன் தம்பியை காதலிக்கும் பூஜாவும் சேர்ந்துக்கிட்டா. இருவரும் இறுகக் கட்டிக்கொண்டு கண் மூடி நின்று கொண்டு இருப்பதை அன்னபூரணி அம்மா பார்த்துடறாங்க.

என்ன சீச்சீ
சீச்சீ... என்ன கர்மம் இது... நடு வீட்டில் யாரும் பார்க்கறாங்கன்னு கூட நினைக்காம இப்படி நிக்கறதுங்கன்னு சத்தம் போட இருவரும் விலகிக் கொள்கிறார்கள். அவளை திட்டி மாடியிலிருந்து கீழே கொண்டு வந்து பாட்டி சத்தம் போட, வீடே ஹாலில் கூடி விடுகிறது. இந்த பொண்ணு நம்ம அஷ்வினை நடு வீட்டில் கட்டிகிட்டு நிக்குது மருமகளேன்னு அன்னபூரணி அம்மா சொல்றாங்க.

அத்தை ஐயையோ
ஐயையோ அத்தை எனக்கு எதுவும் தெரியாது அத்தை. இந்த பொண்ணு அர்ஜுனகிட்டே இன்டர்ன் பண்ண வந்ததா சொன்னாங்க. அவ்ளோதான் அத்தை எனக்கு தெரியும்னு சொல்றாங்க கல்பனா. அவளை அடிச்சு வெளியில துரத்து யசோதான்னு மகளை அன்னபூரணி அம்மா சொல்ல, பூஜா வீட்டை விட்டு போக மாட்டேன்னு அடம் புடிக்கறா. அடிக்க வந்த யசோதா கையை பிடிச்சு முருக்கறா பூஜா.

பூஜா ரோஜா
கையை விட்டுடுன்னு இன்னொரு கையை ஓங்க.. ஏய்.. அவ மேல கையை வச்சேன்னு ரோஜாவும் சேர்ந்துக்கிட்டு மிரட்டறா. மருமகளே என்ன பார்த்துகிட்டு இருக்கேன்னு அன்னபூரணி அம்மா கேட்க, என்ன என்ன செய்ய சொல்றீங்க அத்தை. அவ உங்களையே மரியாதையை இல்லாம பேசறா.முதலிலாவது ரோஜா மட்டும்தான்..இப்போ பூஜாவும் சேர்ந்துக்கிட்டா..என் மரியாதை எனக்கு முக்கியம் அத்தைன்னு சொல்றாங்க கல்பனா.

முடியலடா ரொமான்ஸ்
அப்பப்பா.. ஏற்கனவே அர்ஜுன் பண்ற ரொமான்ஸ் தாங்க முடியலை.இப்போ அஷ்வின் பணக்கார பையன்னு இவ கைக்குள்ள போட்டுக்கிட்டு, நடு வீட்டில் கட்டிப் பிடிச்சுக்கிட்டு காதல் பண்றாங்க. தோ வந்துட்டான் பாரு உன் முதல் பையன்னு சொல்றாங்க.

ரோஜா முகத்தை
அதே போலஅர்ஜுன் வந்து ரோஜாவின் முகத்தை இரு விரல்களால் தடவி பூ பூக்கறதை பூக்காதேன்னு சொல்ல முடியுமா? பூத்துதானே ஆகும்னு ரோஜா முகத்தை தாங்கிப் பிடிக்க .. அடுத்த ஷோ இவன் ஆரம்பிச்சுட்டான்னு சலிச்சுக்கறாங்க பாட்டி. அது எப்படி முடியாதோ, அது மாதிரிதான் இந்த காதலும். அஷ்வினும் பூஜாவும் காதலிச்சா ரெண்டு பேரும் மேஜர்.ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்றான் அர்ஜுன்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications