Roja Serial: வளைந்து நெளிந்து நிற்கும் ரோஜா இடுப்பில் சாவிக்கொத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் நாயகன் அர்ஜுன் அன்னபூரணி அம்மாவின் பேரனாக வந்து பாட்டி உட்பட அனைவரிடமும் லா பாயிண்ட் சொல்லி சொல்லி போட்டி போடுவதுதான் சுவையான கதை..

கிரிமினல் லாயர் அர்ஜுனுக்கு ஆஸ்ரமத்தில் வளர்ந்த ரோஜா முதலில் மனைவியாக நடிக்க வந்து, இப்போது உண்மையான மனைவியாகிட பாட்டிக்கு ரோஜாவை பிடிக்கலை. என்ன குலமோ, கோத்திரமோ என்று எப்போதும் அவளை வீட்டு மனுஷியாக பாட்டி ரோஜாவை சேர்ப்பதில்லை.

பேத்தி அணுவை கல்யாணம் செய்துக்காமல், ரோஜாவை கல்யாணம் செய்துகிட்டு வந்ததில் பாட்டிக்குப் பேரன் அர்ஜுன் மீது கோபம்.அந்த கோபத்தின் வெளிப்பாடுதான் வீட்டில் நடக்கும் போட்டிக்கு காரணம்.

கிடைத்தது வைரஅட்டிகை

கிடைத்தது வைரஅட்டிகை

25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர அட்டிகையை காணோம். அதை ரோஜாதான் எடுத்து இருப்பான்னு போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கறாங்க பாட்டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தா வந்து ரோஜாவை விசாரிக்க , அவ நான் எடுக்கலை எடுக்கலைன்னு சொல்லியும் அவளை கடுமையாக விசாரித்துவிட்டு, அவளது அறையில் தேடினால் இல்லை. பிறகு அனுவின் அறையில் தேட அங்கு வைர அட்டிகை கிடைக்கிறது.

அணு வாதாடியும்

அணு வாதாடியும்

பாட்டி அந்த நகையை நான் எடுக்கலை பாட்டி.அது எப்படி என் ரூமுக்கு வந்துச்சுன்னு தெரியாதுன்னு அணு சொல்லிட்டு அழறா. அணுவின் ஜிமிக்கி ஒண்ணு பாட்டியின் பீரோவுக்கு அடியில் கிடைக்க, அந்த குளூவை வச்சு, அணுவை பிடிக்கறாங்க போலீஸ் இன்ஸ்பெக்டர். நினைத்த மாதிரி அவளது அறையில் வைர அட்டிகை கிடைக்கிறது. இப்போ பாட்டி கேஸை வாபஸ் வாங்கிக்கறேன்னு சொல்றாங்க. அர்ஜுன் விட மாட்டேங்கிறான்.

ரோஜா புகார்

ரோஜா புகார்

பாட்டி என் பொண்டாட்டி ரோஜா பேரில் போலீஸ் புகார் கொடுத்து இருக்காங்க. அட்டிகை ரோஜா ரூமில் இருந்தால் சும்மா விட்டு இருப்பாங்களா.. அவங்க புகாரை வாபஸ் வாங்கினாலும் நான் என் பொண்டாட்டி சார்பா மான நஷ்ட வழக்கு போடுவேன்னு அர்ஜுன் பாட்டியை மிரட்ட, அனுவுக்கு போலீசுடன் விசாரணைக்கு போவதைத் தவிர வேறு வழியில்லை.ஒவ்வொருத்தரிடமும் போய் எடுக்கலை எடுக்கலைன்னு கெஞ்சறா. யாரும் ஒண்ணும் செய்ய முடியாத நிலை. அர்ஜுன் அப்போதுதான் ஒரு உடன்படிக்கைக்கு வர்றான்.

ரோஜாவிடம் கொடு

ரோஜாவிடம் கொடு

நான் பாட்டி கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக்கட்டும் நான் ஒண்ணும் செய்யலை. ஆனால் ,பதிலுக்கு ஒரு திருடி இடுப்பில் வீட்டின் கொத்து சாவி தொங்கலாமா? அணு அதை ரோஜாகிட்ட கொடுக்கட்டும்.நான் பாட்டி சொல்றதை கேட்கிறேன்னு சொல்றான்.

உடனே அணு ரோஜாவிடம் சாவிக் கொத்தை கொடுத்து, எனக்கு வேணாம் ரோஜா நீயே இதை வச்சுக்கோன்னு கொடுக்கிறாள்.அப்போதுதான் ரோஜா, அய்யயோ அணு எனக்கு வேணாம் நீயே வச்சுக்கோ..எனக்கு அவ்ளோ பெரிய பொறுப்பு வேணாம்னு பிகு பண்றா. இல்லை ரோஜா இது உன்கிட்டத்தான் இருக்கணும்னு அணு கட்டாயப்படுத்த, இல்லை அணு இனிமேல் சாவிக் கொத்தை கையில் தொட மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டேன்.

நீயே என் இடுப்பில் செருகிவிட்டுடுன்னு வளைந்து நெளிந்து நின்று இடுப்பை காண்பிக்கிறாள் ஸ்டைலாக... அணுவும் அவளது இடுப்பில் சாவிக் கொத்தை தொங்கவிடுகிறாள்.இந்த எபிசோட் காட்சிகள் சூப்பர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+