நான் செய்த செயலால் பரம்பரை மானமே போச்சுன்னு சொந்தக்காரங்க அம்மாவை திட்டினாங்க- ரோஜா சீரியல் வில்லி

வயதுக்கு வந்த பிறகு மேடையில் டான்ஸ் ஆடிய காரணத்திற்காக சொந்த பந்தங்கள் என்னுடைய அம்மாவை திட்டினார்கள் என ரோஜா சீரியல் வில்லி காவ்யா தெரிவித்திருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் சமீபத்தில் ரோஜா சீரியல் முடிவடைந்தது.

இந்த சீரியலில் வில்லியாக சீரியல் நடிகை காவ்யா வர்ஷினி நடித்திருந்தார்.

நடிகை காவியா ஒரு டான்ஸராகவும் ஒரு பாடகியாகவும் இருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய ஆரம்ப காலத்தை பற்றி முதல்முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

ரோஜா சீரியல்

ரோஜா சீரியல்

சன் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த ரோஜா சீரியல் இப்ப வரைக்கும் அதிகமான ரசிகர்களால் மிஸ் பண்ணுவதாக கூறி வருகின்றனர். இந்த சீரியலில் நடித்த நடிகர்களுக்கு தனியாக அதிக ரசிகர்கள் உருவாக தொடங்கிவிட்டனர். இந்த சீரியல் தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பான நிலையில் இந்த சீரியலின் கேரக்டர்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தனர். அது பாசிட்டிவ் கேரக்டராக இருந்தாலும் சரி, நெகட்டிவ் கேரக்டராக இருந்தாலும் சரி, அவர்களும் ரசிகர்களின் மத்தியில் பரீட்சையமாகி இருந்தனர்.

எதிர்பார்க்காத கேரக்டர்

எதிர்பார்க்காத கேரக்டர்

அந்த வகையில் ரோஜா சீரியலில் கதாநாயகன் அர்ஜுனின் அத்தையாகவும் யசோதா கேரக்டரில் நடிகை காவியா வர்ஷினி நடித்திருப்பார். இவர் 2001 முதல் 2022 வரைக்கும் இந்த கேரக்டரில் இவர் நடித்திருப்பார். இந்த சீரியலில் இவருடைய கணவராக பாலகிருஷ்ணன் என்ற பாலு கேரக்டரில் தேவ் ஆனந்த் நடித்திருப்பார். இந்த நிலையில் தன்னுடைய சிறுவயதில் சித்தி சீரியல் தனக்கு ரொம்பவே பிடிக்கும் என்று அந்த சீரியலில் தனது பிடித்த கேரக்டராக தேவ் ஆனந்த் இருப்பார் என்றும் அவரோடு தான் ரோஜா சீரியலில் நடிப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று மகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார்.

சின்ன வயது டான்ஸ்

சின்ன வயது டான்ஸ்

அது மட்டுமில்லாமல் சிறுவயதில் இருக்கும் போது இவருடைய உறவினர்கள் திருமணத்தில் இவரை ஆட சொல்லி இருக்கிறார்கள். அப்படி இவர் ஆடும் போது இவருடைய ஆட்டத்தை பார்த்து சில கல்யாண நிகழ்ச்சிகளிலும், கோவில் திருவிழாக்களிலும் ஆடுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது இனி பெரிய பெண்ணாக மாறிய பிறகு எப்படி ஆடுவது என்று இவர்கள் வீட்டில் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.அப்போதுதான் இவரை பாட்டு கத்துக்க சொன்னார்களாம்.

நிலைமை மாறி போச்சி

நிலைமை மாறி போச்சி

இவரும் தன்னுடைய முயற்சியினால் பாட்டு பாட தொடங்கி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தான் இப்போது இருக்கும் இந்த இடத்திற்கு சுலபமாக வந்துவிடவில்லை. பல கஷ்டங்களை தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்றும், இவர் மேடைகளில் பாட்டு பாடும் போது பல பிரபலங்கள் வருவார்களாம். அப்போது கூட்டம் அதிகமாக அவர்களை சூழ்ந்து கொள்வதால் இவர் மேடையில் பாட்டு பாடுவதால் தான் நம்மை பார்க்க முடியவில்லை என்று நினைத்திருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் இப்போ எந்த நிகழ்ச்சிக்கு செஞ்சாலும் பலர் என்னை பார்ப்பதற்கு வரும் போது எனக்கு சந்தோசமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

சொந்தக்காரர்களின் தொல்லை

சொந்தக்காரர்களின் தொல்லை

அது மட்டும் இல்லாமல் ஆரம்ப காலகட்டத்தில் பாட செல்லும்போது இவருடைய வீட்டிற்கு சொந்த பந்தங்கள் வருவதை தவிர்த்து விட்டார்களாம். வயதுக்கு வந்த பெண்ணை மேடையில் ஆட வைக்கலாமா? என்று இவருடைய அம்மாவிடம் கேட்பார்களாம். எவ்வளவு பணம் கஷ்டம் வந்தாலும் இப்படியா? ரோட்ல ஆட வைக்கிறது. உன்னோட பொன்னால எங்களுடைய பரம்பரை மானமே போய்விட்டது. என்றெல்லாம் இவருடைய அம்மாவிடம் பலர் கூறி இருக்கிறார்கள். ஆனால் இவருடைய அம்மா மிகவும் தைரியமான ஒரு பெண்ணாக இருந்திருக்கிறார். அவரைப் பார்த்து இவர் வளர்ந்ததால் பல சூழ்நிலைகளையும் பார்த்துக் கொள்ளும் தைரியம் எனக்கு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். வெறுத்த சொந்தங்கள் எல்லாம் இப்போது எங்களை கொண்டாடும் அளவிற்கு வளர்ந்து விட்டோம் என்று மகிழ்ச்சியாக கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+