ஒருவர் மீது ஒருவர் விழுந்து.. முகத்தோடு முகம் உரசி.. எழுந்திரு ரோஜா எழுந்திரு!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் நதியா வந்துட்டு போனபிறகு சீரியலுக்கு பார்வையாளர்கள் கண்ணாபின்னான்னு அதிகமாகி இருக்காங்க.
நதியா வந்து போயி ரெண்டுக்கும் அதிகமான வாரம் ஆகியும் சீரியல் ரேட்டிங் குறையலையாம்.. இருந்தாலும், இன்னும் சில கெஸ்ட் ரோல்களுக்கு நதியா மாதிரி ஸ்டார் காஸ்ட் உள்ள வேற யார் யாரை இழுக்கலாம்னு கதைக்குழு விவாதிச்சுக்கிட்டு இருக்காங்க.
ஒவ்வொருத்தரையா இப்படி களம் இறக்கி, கடைசியில் அர்ஜுன் ரோஜா நிஜமான கல்யாணத்துல எல்லா ஸ்டார்களும் ஒண்ணு கூடற மாதிரி கதையை கொண்டு போலாமான்னு யோசிக்கறதாம் கதைக்குழு.

அர்ஜுன் ரோஜா
நதியா வந்துட்டு போன பிறகும் சீரியல் நல்லாத்தான் போயிகிட்டு இருக்கு.பார்க்க ஜாலியா, சந்தோஷமா இருக்கு. ரோஜா தான் வளர்ந்த ஆஸ்ரமத்துக்கு போயி, அங்க இருக்க ஃபைலை எடுத்து பார்த்தா ரோஜா யாருன்ற உண்மை தெரியும்.. கண்டுபிடிக்கலாம் வான்னு அர்ஜுன் ரோஜாவை அரசு சீல் வச்ச ஆஸ்ரமத்துக்கு ராத்தியில அழைச்சுட்டு போறான்.

கல்யாண பொண்ணு மாதிரி
இப்படி கல்யாண பொண்ணு மாதிரி புடவை கட்டிக்கிட்டு நிக்கறியே, ஆசிரமத்து பின் சுவரை தாண்டித்தானே உள்ள போகணும்.. புடவை கட்டிக்கிட்டா எப்படி போக முடியும்னு கேட்கறான். சரி சார், ஜீன்ஸ், டி ஷார்ட் போட்டுக்கிட்டு வரேன்னு சொல்லி கிளம்பறா ரோஜா.

அஜீத் பாணியில்
வண்டி ஸ்டார்ட் ஆகலை..அட்டகாசம் படத்துல கருணாஸ் ஆட்டோ ஸடார்ட் ஆகாம தவிக்க , அஜீத் வந்து ரெண்டு பக்க கண்ணாடியையும் திருப்பிட்டு ஸ்டார்ட் பண்ண சொல்வார். ஆட்டோ ஸ்டார்ட் ஆயிரும். அதே பாணியை இப்போ ரோஜா செய்ய, டூ வீலர் ஸ்டார்ட் ஆகுது... எப்படி ரோஜான்னு அர்ஜுன் கேட்க.. அதெல்லாம் அப்படித்தான் சார்னு ரோஜா காலரைத் தூக்கிவிட்டுக்கறா.

அர்ஜுன்
ஆஸ்ரமத்தின் சுற்று சுவர் ரொம்ப உயரமா இருக்கு. அதை தான்ட எப்படி ரோஜா உன்னால முடியும்னு அர்ஜுன் சொல்றான். அப்போ இங்க ஒரு மரம் இருக்கும் சார்.. இப்போ அதை நம்பித்தான் வந்தேன்னு ரோஜா இழுக்கறா.

ஏறு
நான் குனிஞ்சு நிக்கறேன்.. என் மேல ஏறி, சுவர் மேல நின்னுக்கோன்னு சொல்றான். சார்.. நீங்க எவ்ளோ பெரிய லாயர்.. உங்க மேல போயி எப்படி சார்னு ரோஜா இழுக்க.. உன்னைப் பத்தின உண்மை உனக்கு தெரியனுமா வேணாமான்னு கேட்க... வேணும் சார்னு சொல்லிட்டு ஏறிக்கத் தயாராகறா..

அருமையா அர்ஜுன்
நிஜமாவே அர்ஜுன் இருக்கும் உயரத்துக்கு, ரோஜா கத்திரிக்கா மாதிரிதான் தெரியறா.. ஒட்டகம் மாதிரி நிக்கறான். முதலில் தொடையில் கால் வச்சு, முதுகில் ஏறி. ஒரு வழியா காம்பவுண்ட் சுவற்றில் ஏறி நிக்கறா.

கை குடுங்க
சார், கை குடுங்க சார்னு மேலே நின்னுகிட்டு கை குடுத்தவ, அர்ஜுனை மேல ஏத்திவிட்டு, இவ வெளியில விழுந்துடறா..அர்ஜுன் சிரிச்சுக்கிட்டே, மறுபடியும் அவளைத் தூக்கி விடறான்.

ஒருத்தர் மேல் ஒருத்தர்
ஆஸ்ரமத்தின் உள் ஒருவர் ,மேல் ஒருவராக ரெண்டு பேரும் விழுந்து, ஒருவர் முகம் ஒருவர் பார்த்து லயித்து கிடக்கறாங்க. சார், இப்படியே பார்த்துகிட்டு இருந்தா எப்படி...எழுந்திருங்க சார்னு ரோஜா சொல்றா. நீதான் ரோஜா என் மேல படுத்திருக்கே நீ எழுந்ததான்னு சொல்றான் அர்ஜுன்.

எழுந்துக்கறா
ரோஜா டக்குன்னு எழுந்துக்கறா.. ரெண்டு பேரும் ஆஸ்ரமத்துக்குள்ள போறாங்க. அப்போ டார்ச் வெளிச்சத்தில் ரோஜா முகத்தை பார்த்தபடியே நிக்கறான் அர்ஜுன். ரோஜாவும் அவனையே பார்க்க, பிறகு தன்னிலைக்கு வந்த ரோஜா, என்ன சார் அப்படி பார்க்கறீங்கன்னு கேட்கறா.. இந்த வெளிச்சத்துல நீ தேவதை மாதிரி இருக்க ரோஜான்னு சொல்றான் அர்ஜுன்..

ரொமான்ஸ்
இப்படித்தான் ரோஜா சீரியல் ஆரம்பத்தில் இருந்தே ஊடல், கூடல், சின்ன சின்ன ரொமான்ஸ், சில சமயம் அதிக ரொமான்ஸ். நடுவில் கதையும் நன்றாக இருக்கிறது என்பது போல இருக்கு. நல்ல என்டெர்டைன்மென்ட் கொடுக்கும் கதைக் குழுவை பாராட்டலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications