Roja Serial: இப்படியேத்தான் இருப்பாங்களா அன்னபூரணி அம்மா?
சென்னை: எப்போ பார்த்தாலும் என்ன குலமோ கோத்திரமோன்னு ரோஜாவை கரிச்சு கொட்டிக்கிட்டே இருக்காங்களே.. இப்படியேத்தான் இருப்பாங்களா அன்னப்பூரணி அம்மா?
சன் டிவியில் மாலை 7 : 00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் ரோஜாவை அனாதை பெண் என்று கூடப் பார்க்காமல் எப்போதும் குலம் கோத்திரம் தெரியாத பெண் என்று சொல்வது...
பெத்தவ யாரோ என்ன கோத்திரமோ என்று சொல்வது இதெல்லாம் பெரியவங்களுக்கு அழகா என்றெல்லாம் தெரியவில்லை.

அன்னபூரணி வடிவுக்கரசி
வடிவுக்கரசி அன்னப்பூரணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். என்னதான் இருந்தாலும் அவரின் கண்டிப்பான நடிப்பு பாராட்டத்தான் வைக்கிறது. இருந்தாலும் அனாதை பெண் ரோஜா என்று தெரிந்துமா இப்படி எப்போதும் அந்த பெண்ணை கரிச்சு கொட்டிக்கிட்டு இருப்பாங்க வீட்டு பெரியவங்க?

வீட்டு மருமகளை
வீட்டு மருமகள் பேரனின் மனைவி என்றாலும் உரிமையோடு அல்லாமல் அனாதை பெண் என்கிற அருவெறுப்பில் அவளை கை நீட்டி வீட்டு பெரிய மனுஷி அடிக்கடி அடிப்பது... சுடு சொற்களால் பேசுவது என்பதெல்லாம் கதைக்கு என்றால் கூட ஓவராகத்தான் இருக்கிறது.

லதா நதியா
ரோஜா சீரியல் நல்ல ரேட்டிங்கில் இருந்த போது நதியா வந்து இன்னும் ரேட்டிங்கை உயர்த்தினார். அதே ரேட்டிங்கில் இருந்தபோது லதா வந்து நடித்தார். இப்போது ரோஜா சொல்லிக் கொள்ளும்படி ரேட்டிங்கில் இல்லை. ஆனால், ஸ்டார் காஸ்ட் இல்லை.

காணாமல் போனார்
லதா நடித்துவிட்டு போன கையோடு வடிவுக்கரசியும் சிறிது நாட்கள் சீரியலில் காணாமல் போயியிருந்தார். பாட்டி ஊருக்கு போயிருக்கார்.. கோயிலுக்கு போயிருக்கார்னு கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். காமாட்சி அதாவது லதாவுடன் என்னை வம்புக்கு இழுத்து பேசி சண்டை மூட்டி ஊருக்கு அனுப்பி வைத்து விட்டீர்கள் என்று சொல்லியபடி அண்மையில் வந்து இருக்கார் வடிவுக்கரசி.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications