பஞ்சுமிட்டாய் பஞ்சுவாச்சு... பட்டர் பிஸ்கட் பட்டுவாச்சு... ரொமான்ஸ் போச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பஞ்சுமிட்டாய், பட்டர் பிஸ்கட் ரொமான்ஸ் கூட கம்மியாயிருச்சுங்க.

கடும் வெயிலில் கிரியேட்டர் டீம் மண்டை காய்ஞ்சு போயி இருக்காங்க போலிருக்கு. மினிஸ்டர் சகுந்தலா தேவி கோவத்துல பொரியறதும், மகாலட்சுமி வீட்டில் இருக்கும் உமாவின் கோவத்தை அடக்கறதும்னு கதை போகுது.

Romance gone in Lakshmi stories

பட்டர் பிஸ்கட் ரவி கிரிக்கெட் பிளேயர். ரஞ்சி டிராஃபில செலெக்ட் ஆகணும்ன்றது ரவியின் கனவு. அதுக்கு கோயிலில் வந்து வேண்டிக்கிட்டு போறா பாக்கிய லட்சுமி. வேண்டிகிட்ட மாதிரி ரவி செலெக்ட் ஆகிடறான்.

நேர்த்தி கடனை செலுத்த ரெண்டு பேரும் கோயிலுக்கு வர்றாங்க.பஞ்சுன்னு ரவி கூப்பிட, சொல்லுங்க பட்டுன்னு சொல்றா பாக்கியலட்சுமி. பட்டுவான்னு ரவி கேட்க.. ஆமாம். நீங்க மட்டும் என்னை சுருக்கி பஞ்சுன்னு கூப்பிடலாமா..அதன் நானும் சுருக்கிட்டேன்னு சொல்றா.

ரஞ்சி டிராஃபில செலக்ட் ஆனதுக்குத்தான் நேர்த்தி கடன் செய்தாச்சே.. இன்னும் என்ன கேட்க போறே பஞ்சுன்னு கேட்கறான். செலெக்ட் ஆயிட்டீங்க.. உங்க டீம் ஜெயிக்க வேணாமா.. அதுக்குத்தான் இன்னொரு அப்ளிகேஷன்னு சொல்றா.

நானும் உன்கிட்ட ஒரு அப்ளிகேஷன் போடணும்னு இருக்கேன் பஞ்சு.. அதை எப்படித்தான் சொல்ல போறேனோன்னு ரவி முணுமுணுக்கறான். வேலைக்காரியா வர்ற பொன்னம்மாவின் வெள்ளந்தியான நடிப்பு அருமை.

கதைக்குத் தகுந்த மாதிரி லொகேஷன்ஸ், செட்டிங்ன்னு லட்சுமி ஸ்டோர்ஸ் தூள் கிளப்பறாங்க. இதுல தொய்வடையாம, கதையையும் கவனிச்சு சீரியலை கொண்டு போனா லட்சுமி ஸ்டோர்ஸ் சக்சஸ்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+