புடவையை காற்றில் பறக்கவிட்ட ரோஷ்னி ஹரிப்ரியன்.. பார்த்ததும் பதறிப் போன ரசிகர்கள்!
சென்னை : முந்தானை சேலையை காற்றில் பறக்க விட்டபடி, தன்னுடைய முழு அழகையும் காட்டி, மயக்கும் பார்வையால் ரசிகர்களை கலங்க வைத்திருக்கும் ரோஷ்னி ஹரிப்ரியனின் வீடியோ தான் தற்போது இன்ஸ்டாகிராமில் செம வைரலாக பரவி வருகிறது.
இது யாரு நம்ம கண்ணம்மா வா நாங்க கூட ஒரு நிமிஷம் செஞ்சு வச்ச செப்பு சிலையோ என்று பயந்து விட்டோம் என்று பார்ப்பவர்கள் எல்லாம் பதறி வருகிறார்களாம்.
இடுப்பை அந்தப் பக்கமும்இந்தப் பக்கமும் ஆட்டியபடி இவர் சிரிக்கும் சிரிப்பை எத்தனை முறை என்றாலும் பார்க்கலாமே என்று ஏங்கும் ரசிகர்கள் குதூகலிக்கின்றனர்..

கண்ணால கலக்குகிறார்
பச்சை வண்ணப் புடவையில் அடடா என்று சொல்லும் வகையில் நம்ம பாரதிகண்ணம்மா சீரியலின் கண்ணம்மா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு விட்டார். இவருடைய க்யூட்டான சிரிப்பை பார்த்து பல ரசிகர்கள் பேச வார்த்தை இன்றி தவித்து வருகிறார்கள். அதனால் தான் இவருடைய வீடியோவுக்கு கூட அவர்களால் எந்த மாதிரி கமெண்டுகளை போட வேண்டும் என்று தெரியாமல் ஹாட்டின்களையே அதிகமாக பறக்க விடுகிறார்கள். கமெண்ட்டுகளில் மட்டுமல்லாமல் இவருடைய வீடியோவை பார்த்து நிஜத்திலும் பலருடைய மனதும் பறந்து விட்டதாம் அந்த அளவிற்கு இவர் க்யூட் எக்ஸ்பிரஷனாலும், அந்த துரு துரு பார்வையாலும் பார்ப்பவர்கள் அனைவரையும் பசக்கென்று இழுத்துவிட்டார்.

கவிதை பாடும் பேரழகு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியலின் கண்ணம்மா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் ரோஷ்னி ஹரிப்ரியன் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவை பார்த்து அவருடைய ரசிகர்கள் கமெண்ட்களில் காதல் மழை பொழிகின்றனர். தங்களுடைய பாசத்தை பிழிந்து கசக்கி போட்டுவிட்டார்கள். இந்த அளவிற்கு ரசிகர்கள் இவரை நேசிக்கிறார்கள் என்று அனைவருக்கும் ஷாக்காக தான் இருக்கிறது. பாரதிகண்ணம்மா சீரியலின் மூலமாக பெரும் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கும் கண்ணம்மா தற்போது ரசிகர்களின் செல்ல மகளாகவும் மாறி விட்டாராம். இவருக்கு சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. பொதுவாக நடிகைகள் பலரும் நடிப்பை தாண்டியும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் ஆக்டிவாக இருக்கின்றனர். அதில் நானும் சளைத்தவரல்ல என்று ரோஷ்னியும் கலக்கி வருகிறார்.

அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்
ரோஷ்னி ஹரிப்ரியன் சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக மாற ஆரம்பித்தார் என்று இல்லை. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்த காரணத்தினால் தான் இவருக்கு இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் காலேஜ் முடித்ததும் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறார். வேலைகளுக்கு இடையில் இவர் ஒரு சில போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுக் கொண்டிருப்பது இவருடைய ஹேபிட்டாக இருந்திருக்கிறது. ஒரு சில நேரங்களில் ஆபீசில் இவர் ஜாலியாக பேப்பர் போட்டுவிட்டு சென்று விடுவேன் என்று கூறிக்கொண்டு இருப்பாராம். ஒருநாள் இவர் விளையாட்டாக சொல்கிறது படியே நடந்தும் விட்டதாம். திடீரென்று இவரை இவருடைய மேனேஜர் திட்டியதற்காக லெட்டர் போட்டு விட்டு வந்து விட்டார். இவர் ரீசைன் செய்த பிறகு வேற எந்த வேலையும் செட் ஆகாததால் முழுநேரமாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக மாற ஆரம்பித்து விட்டார். இவர் தன்னை தானே போட்டோக்களை எடுத்து அதை எடிட் செய்து வீடியோக்களாக, போட்டோக்களாகவும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது தான் இவருக்கு பாரதிகண்ணம்மா சீரியலுக்காண வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலின் ஆடிஷனில் கலந்து கொள்ள வருமாறு அவருக்கு அழைப்பு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதை முதலில் நம்பாத இவர் ஒரு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதே வாய்ப்பு வர சரி போய் தான் பார்ப்போமே என்று போயிருக்கிறார்.

சாக்லேட் நிற பேபி
ஆரம்பத்திலிருந்தே கருப்பாக இருப்பதால் பல வாய்ப்புகள் இவரை விட்டு விலகி போய் இருந்தாலும் இந்த சீரியலில் அதே கருப்பான அழகை வைத்து தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் தன்னம்பிக்கையோடு காத்திருந்தால் வெற்றி நமது வீட்டு வாசலை தட்டும் என்பது இவருடைய தீர்க்கமான நம்பிக்கை. அதனால் தான் இவரை பார்த்து பல பெண்களும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் பல போராட்டங்களை கடந்து தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். ஆரம்பத்தில் சீரியலில் நடிக்கிறார் என்று தெரிந்ததும் பலரும் இவரா கதாநாயகி என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் இவருக்குள் பெரிய தாழ்வு மனப்பான்மை வந்து கொண்டிருக்குமாம், ஆனால் அதையும் தகர்த்தெறிந்து விட்டு தன்னுடைய நடிப்பை காட்டியதால் தான் என்னால் இந்த நிலைக்கு வர முடிந்திருக்கிறது என்று அனைவருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார்.

வாழ்வு கிடைத்தது இங்குதான்
சீரியலில் இவர் எவ்வளவுதான் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னும் அதே இன்ஸ்டாகிராமில் போட்டோஸ்கள் போடுவதையும் வீடியோக்களை வெளியிடுவதிலும் இவர் பின்வாங்கவில்லை. தற்போதும் கூட கலக்கலான புடவையில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் எந்த மேக்கப்பும் இல்லாமல் க்யூட்டான கருப்பு தேவதையாக இவருடைய அழகைப்பார்த்து ரசிகர்களால் ரசிக்காமல் இருக்கவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் இந்த வீடியோவை பார்த்து வருகிறோம் என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தினமும் இதுபோலவே வீடியோக்களை வெளியிடுங்கள் பார்ப்பதற்கும், மனதுக்கும், கண்களுக்கும் அழகாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள். ஆமாம் இந்த மாதிரி ஒரு க்யூட்டாக ஒரு அழகு தேவதையின் தரிசனம் கிடைத்தால் விட்டு வைப்பார்களா அதனால்தான் விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications