ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கிய நடிகை இவங்களா? தொட்டு நடிக்கக்கூடாதுனு கண்டிஷன்.. தெய்வீக காதல்: பிரபலம்
சென்னை: "காதலை எடுத்துக் கொண்டால், ஒருவருக்காக ஏங்குவது, ஒருத்திக்காக ஏங்குவது என்றிருப்பதற்கு இது ஒன்றும் தேவதாஸ் காலம் கிடையாது. ஆனால், சினிமாவில் காதலுக்காக தங்கள் வாழ்க்கையையே மாற்றிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.. அதற்கு 2 நடிகைகளை உதாரணமாக சொல்லலாம்" என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
Cineulagam என்ற யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த சபிதா ஜோசப், "பொதுவாக வடமாநிலத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு, இங்கு யாராவது ஒருவர் ஆதரவாக இருப்பார்கள்.. காரணம், வேறுவிதமான டார்ச்சர்கள் அவர்களுக்கு இருக்கக்கூடும் என்பதால், குறிப்பிட்ட பிரபலங்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக, அரணாக இருப்பார்கள்..
ரவுடிகள் தொந்தரவுகளிலிருந்து தப்பிக்க, வேண்டுமானால், பிரபல நடிகர்கள், அல்லது டைரக்டரகளுடன் இப்படி சில நடிகைகள் நட்பாக இருப்பது வழக்கம்.

பாதுகாப்பு - அரண்
உதாரணமாக, ரோஜாவுக்கு அன்று செல்வமணி இருந்தார்.. ரோஜா நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே செல்வாவை தான் காதலிப்பதாக கூறிவந்தார். அதனால்தான், மற்ற ஹீரோக்கள், டைரக்டர்கள் டார்ச்சர் இல்லாமல் இருந்தது என்று ரோஜாவே அப்போது சொல்லியிருந்தார். இப்படி வடமாநில நடிகைகள் சிலர் புளியங்கொம்பு போல பாதுகாப்புக்காக பிடித்து கொள்வார்கள்.
காதலை எடுத்துக் கொண்டால், ஒருவருக்காக ஏங்குவது, ஒருத்திக்காக ஏங்குவது போல இது தேவதாஸ் காலம் கிடையாது. ஆனால், சினிமாவில் காதலுக்காக தங்கள் வாழ்க்கையையே மாற்றிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.. உதாரணத்துக்கு கேபி சுந்தராம்பாளை சொல்லலாம்.
ஆண்கள் நெருங்க கூடாது
நாடக காலங்களில் கிட்டப்பாவை காதலித்தார்.. அவரையே திருமணமும் செய்து கொண்டார். 2 வருடங்களில் கிட்டப்பா இறந்துவிடவும், அதற்கு பிறகு கடைசிவரை விதவையாகவே, கிட்டப்பாவின் நினைவாகவே வாழ்ந்து முடித்தார்.
சினிமாவிலும், ஆண்கள்கூட நடிக்கவே மாட்டேன் என்று சபதமும் போட்டார்.. அதற்குபிறகு அவ்வையார் படத்தில் நடித்தார்.. அப்பவே அவருக்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது.. அந்த 1 லட்சம் ரூபாய் தரேன் சொன்னதால்தான், அவ்வையார் படத்தில் நடித்தார்.. அப்போதுகூட "ஆண்கள் யாருமே தன்னை தொட்டு பேசக்கூடாது, பக்கத்தில் வரக்கூடாது" என்றெல்லாம் கண்டிஷன் போட்டார். கிட்டப்பா மீதுள்ள காதலுக்காக துறவி போல வாழ்ந்து முடித்துவிட்டார்.
உண்மையான காதல்
சச்சு என்ற மூத்த நடிகையும், தன்னுடைய குடும்பத்துக்காகவே இன்றும் வாழ்ந்து வருபவர்.. ஆனால், அவருக்கு பின்னாடியும் ஒரு புனிதமான காதல் இருந்தது. ஒருவரை மானசீகமாக காதலித்தார், ஆனால், அந்த நடிகர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு போய்விட்டார்.. அந்த நடிகர் இன்றும் உயிருடன்தான் இருக்கிறார்.
ஆனாலும், தன்னுடைய உண்மையான காதலை நினைத்து, சச்சு வேறு யாரையும் திருமணம் செய்யாமல் அபபடியே வாழ்ந்துவிட்டார்.
இப்படி ஒருசில உதாரணங்களை மட்டுமே சினிமாவில் சொல்ல முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications