உயில் பத்திரத்தோடு வந்த பிரபு.. அன்னை இல்லம் விடுங்க, கட்சிக்காக கரைந்த சிவாஜியின் சொத்து: பிரபலம்
சென்னை: "பெரிய நடிகர்கள் நடித்து சிவாஜி வீட்டு கடனை அடைக்க முடியாது.. ஏனென்றால், சினிமாவே இப்போது மாறிவிட்டது.. பல கோடி சம்பாதிக்கிறார்கள் என்று பொய் பேசிக்கொண்டு திரிகிறார்கள்.. புஷ்பா படம் 1000 கோடி வசூல் என்றார்கள்.. ரெயிடு விட்டதுமே, அவ்ளோ ஒன்றும் வசூல் இல்லை என்று உடனே கதறிவிட்டு வந்துட்டாங்க.. சினிமா இடங்களின் இடத்தை சீரியல்கள் பிடித்து கொண்டன.. சினிமாக்களும் ஓடிடியில் வந்துவிட்டன" என்று டாக்டர் காந்தராஜ் கூறியிருக்கிறார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் நடிகர் பிரபு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "நடிகர் சிவாஜி கணேசன், உயிருடன் இருந்தபோதே, அன்னை இல்லம் வீட்டை தனக்கு உயில் எழுதி வைத்துள்ளதாகவும், இதற்கு தனது சகோதரரும், சகோதரிகளும் ஒப்புக் கொண்டதை அடுத்து தனது பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அன்னை இல்லம் - பத்திரப்பதிவு
தனது பெயரில் அன்னை இல்லம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சகோதரர் ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லாததால், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்ததரவை நீக்க வேண்டும்" எனக் கோரியுள்ளார். இந்த மனு, அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் BBT cinema யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், "சிவாஜியின் கலையுலக வாரிசாக பிரபு வந்தார்.. சிவாஜியின் மகனாக இருந்தாலும், பிரபுவை வைத்து, ஏவிஎம், ஜெனிமி, பிரசாத் போன்ற பெரிய நிறுவனங்கள் எதுவுமே படம் தயாரிக்கவில்லை.. புதுசா வருபவர்கள், சின்ன சின்ன தயாரிப்பாளர்கள்தான் பிரபுவை வைத்து படம் எடுத்தார்கள்.. நீணட காலம் கழித்துதான் ஏவிஎம்மின் அஙகீகாரம் பிரபுவுக்கு கிடைத்தது.
கலையுலக வாரிசு பிரபு
அந்தவகையில், பிரபு கடினமாக மேலே வந்தவர். பிரபுவாலதான் இன்று வாழ்க்கை நடக்கிறது என்று ஒருமுறை சிவாஜி சொன்னார். ஆனால், சிவாஜி காலத்தில் இருந்தது 3 நடிகர்கள்தான்.. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி ஆகியோர்தான்.. இதில், ஜெமினி பெரிய அளவுக்கு டானமினேட்டிங் இல்லை.. பிரபு நடிக்க வரும்போது, நூற்றுக்கணக்கானோர் நடிக்க இருந்தனர்.. போட்டிகள் அதிகமாக இருந்தது.
எங்க வீட்டு பிள்ளை படத்துக்கு எம்ஜிஆர் வாங்கிய சம்பளம் இரண்டரை லட்சம் ரூபாய்.. இதைத்தவிர வீடு ஒன்றும் எம்ஜிஆருக்கு தந்தார்கள். இதுதான் எம்ஜிஆரின் உச்சபட்ச சம்பளம். அதேபோல, சிவாஜியின் அன்று உயர்ந்த சம்பளம் 2 லட்சம் ஆகும்.. அதுவே அப்போது பெரிய தொகை..
சிவாஜியின் சொத்துக்கள்
சிவாஜியின் சொத்துக்களை எடுத்துக் கொண்டால், சென்னை, தஞ்சை, சூரக்கோட்டை,, இங்குள்ள சொத்துக்களை கணக்கிட்டால், அது மிகப்பெரிய சாம்ராஜ்யம் ஆகும்.. இப்போதுள்ள டிஎல்எப் அருகில் சிவாஜியின் தோட்டம் இருந்தது. ஒரு மினி ஸ்டுடியோ அங்கிருந்தது. வாடகைக்கு விடும் குதிரைகள்கூட அங்கே நிறுத்தி வைத்திருப்பார்கள்.
மன்னன் படத்தில் ஒரு பெரிய வீடே அங்கு கட்டினார்கள். பெரும்பாலான சீன்கள் அந்த வீட்டில் எடுத்தார்கள்.. கிளைமேக்ஸில், அந்த வீட்டை, படத்தின் சீனுக்காக எரிக்கப்போவதாக சொன்னதுமே, எங்களுக்கு அதிர்ச்சியாகிவிட்டது.. அந்த வீட்டை யாருக்காவது வாடகைக்கு விட்டிருக்கலாமே என்றேன்.. அவ்ளோ அழகாக இருந்தது. நான் அந்த வீட்டை எரிக்கும் காட்சியை பார்க்க நான் போகவே இல்லை.
சிவாஜி ஐயாவின் அரசியல்
மாபெரும் தவறு ஒன்றை சிவாஜி செய்தார்.. அவர் ஒரு அரசியல் கட்சியை துவங்கினார்.. கப்பலை ஓட்டுவதற்கும், அரசியல் கட்சி நடத்துவதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.. கடலில் கப்பலை இறக்கிவிட்டாலே, அது ஓடாவிட்டாலும்கூட, அடுத்த செகண்டே செலவுகள் வந்துவிடும். அப்படித்தான் சிவாஜி ஐயாவுக்கும் நேர்ந்தது. தேர்தலிலும் நின்றார்.. தஞ்சாவூரில் டெபாசிட் வாங்கினதே பெரிய விஷயமா போச்சு..
உடனே பிள்ளைகள் எல்லாரும் சேர்ந்து "நீங்கதான் சம்பாதிக்கிறீங்க, நீங்களே அதை அழிக்காதீங்க, உங்க பிள்ளைகளை நீங்களே பிச்சை எடுக்கும்படி செய்துவிடாதீங்க" என்று சொன்னார்கள்.. அதற்கு பிறகுதான், கட்சியை அவர் மூடினார்..
அதுக்குள்ளே அவரது சொத்துக்கள் நிறைய போய்விட்டது. தஞ்சையில் சாந்தி உள்ளிட்ட 2 தியேட்டர்கள், டிஎல்ப் பில் உள்ள சொத்துக்கள் எல்லாம் போய்விட்டது. இப்போது ஏற்பட்டுள்ள 9 கோடி கடன் விவகாரம் சரியாகிவிடும். ஆனால், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய மாட்டார்கள், 100க்கு மேல் வீட்டை, ஜப்தி வரை கொண்டுவர மாட்டார்கள். வேறு ஏதாவது ஏற்பாட்டை செய்து கொள்வார்கள்.
சிவாஜியின் அன்னை இல்லம்
பெரிய நடிகர்கள் நடித்து சிவாஜி வீட்டு கடனை அடைக்க முடியாது.. ஏனென்றால், சினிமாவே இப்போது மாறிவிட்டது.. பல கோடி சம்பாதிக்கிறார்கள் என்று பொய் பேசிதிரிகிறார்கள்.. புஷ்பா படம் 1000 கோடி வசூல் என்றார்கள்.. ரெயிடு விட்டதுமே, அவ்ளோ ஒன்றும் வசூல் இல்லை என்று கதறிவிட்டு வந்துட்டாங்க.. சினிமா இடங்களின் இடத்தை சீரியல்கள் பிடித்து கொண்டன.. சினிமாக்களும் ஓடிடியில் வந்துவிட்டன. அப்படியிருக்கும்போது, சினிமா நடித்து, கடனை அடைப்பார்கள் என்று சொல்ல முடியாது.
சிவாஜி ஐயா இருந்தபோது, அன்று எல்லாரும் கூட்டுக்குடும்பமாக இருந்தார்கள்.. பிறகு தங்கவேலு குடும்பம் தனியாக போய்விட்டார்கள்.. சண்முகம் குடும்பமும் அப்போதே அமெரிக்கா போய்விட்டார்கள்.. சிவாஜியின் பெண்களும் தனியாக செட்டிலாகிவிட்டார்கள். இங்கே பிரபு, ராம்குமார் குடும்பங்கள் மட்டும் ஒன்றாக இருந்தன. இவ்வளவு பெரிய வீட்டை மெயின்டெயின் செய்வது கடினமாக இருப்பதாக அப்போதே கூறினார்கள்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications