ஹனிமூனுக்கு அம்மாவுடன் கிளம்பிய சரோஜா தேவி.. ரூ.1000 கோடி சொத்து சரோஜாதேவிக்கு? இதுவே முதல் சம்பளம்
சென்னை: எம்ஜிஆருடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் நடித்தவர் சரோஜாதேவி.. 50 ஆண்டுகால திரை வாழ்வில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்... அவரது நினைவை பலரும் பாராட்டி பேசி வருகிறார்கள். இந்நிலையில், சரோஜாதேவி முதல் படத்தில் பெற்ற சம்பளம் என்ன? என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவக்குமார் நேற்றைய தினம் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில், "கடைசிவரைக்கும் கிளாமராகவே நடித்தவர் சரோஜாதேவி.. 87 வயதென்றாலே, நடிகைகள் வாய்ப்புகளை இழந்து, வறுமையில் வாடி, கஷ்டப்படுவார்கள் என்று சொல்வார்கள்.. ஆனால், கடைசிவரை கோடீஸ்வரியாக வாழ்ந்துள்ளார் நடிகை சரோஜாதேவி" என்று பெருமிதம் தெரிவித்திருந்தார்.

எப்போதுமே ஷூட்டிங்கில் ஒழுங்கு, காலம் தவறாமை போன்றவற்றுக்கு புகழ்பெற்றவர் சரோஜா தேவி.. அன்றைய ஹீரோயின்களில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர். அதாவது, சூப்பர் ஸ்டார்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவராம் நடிகை சரோஜாதேவி.
1000 கோடி சொத்து
கோடீஸ்வரியாக வாழ்ந்திருக்கிறார், அதிக சம்பளம் பெற்றவர் என்றெல்லாம் கூறப்பட்டு வரும் நிலையில், சரோஜாதேவி வாங்கிய முதல் சம்பளம் குறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Arrowroots Tamil என்ற யூடியூப் சேனலில், "1000 கோடி சொத்து, தனிமை வாழ்க்கை" என்ற தலைப்பில், மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி தந்துள்ளார்..
முதல் சம்பளம்
அதில், "கன்னடத்தில் முதன்முறையாக கே.சுப்பிரமணியம் சரோஜாதேவியை அறிமுகப்படுத்தினார்.. பிறகு எம்ஜிஆரிடம், வாய்ப்புக்காக பரிந்துரை செய்யப்பட்டது.. திருடாதே என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்யப்பட்டார்.
அப்போது சரோஜாதேவிக்கு 2500 ரூபாய் சம்பளம்.. பிறகு 5000, 7000, 7500, 10000 ரூபாய் சம்பளத்தில் அடுத்தடுத்த படங்கள் சரோஜாதேவிக்கு புக்காயின. முதல் படம் தாமதமாகி விட்டதால், நாடோடி மன்னன் படம் ரிலீஸானது.. அதில், 2ம் பாகம் மட்டும் கலர் படமாக இருக்கும். காட்டுவாசி பெண் கெட்டப்பில் கலர்ஃபுல்லாக காணப்பட்டார் சரோஜாதேவி.. இந்த படம் வெளிவந்ததுமே, ஓவர்நைட்டில் 20 படங்களில் புக் ஆனார்.
எம்ஜிஆர் என்னுடைய தெய்வம், என்னுடைய பெயர் புகழுக்கு காரணமே எம்ஜிஆர்தான் என்று கடைசிவரை சொல்லிக் கொண்டிருந்தார் சரோஜாதேவி.. அவர் சொல்வது உண்மையும்கூட.. எம்ஜிஆருடன் மட்டுமே 26 படங்கள் இணைந்து நடித்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்
அம்மாவுடன் ஹனிமூன்
அதேபோல, Galatta Pink என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள ஏல்எஸ் பட தயாரிப்பாளர் ஜெயந்தி கண்ணப்பன், "ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடித்துவிட்டு, சரோஜா தேவி வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவரது அம்மா திருஷ்டிக்காக பூசணிக்காய் உடைப்பார்..
சரோஜா தேவிக்கு திருமணம் முடிந்து ஹனிமூன் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மணமக்களுடன், சரோஜா தேவியின் அம்மாவுக்கும் சேர்த்து டிக்கெட் புக் செய்யப்பட்டதாம். இதை கண்டு திடுக்கிட்ட சரோஜாதேவி கணவர், என்னாது 3 டிக்கெட் இருக்கே? என்று கேட்டுள்ளார்.
அதற்கு சரோஜாதேவியின் அம்மா மெல்ல தயங்கி சொன்னாராம், "என் மகளுக்கு சின்ன சின்ன வேலைகளைகூட செய்துக்க தெரியாது.. நான்தான் அனைத்தையும் செய்து பழகிட்டேன்.. நீங்க தவறாக நினைக்க வேண்டாம் என்று சொன்னாராம். அப்போதுதான், மகள் மீதுள்ள பாசத்தை கண்டு மாப்பிள்ளை அசந்துவிட்டாராம்.
கணவர் இறந்ததும் நிலைகுலைந்து போய்விட்டார் சரோஜாதேவி.. அதை பற்றி ஒருநாள் என்னிடம் சொன்னார்,
"வாழ்க்கை பயணத்தில் நான் உயர்ந்து கொண்டே இருந்தேன்.. எனக்கு சறுக்கல் வரவேயில்லை.. என்னுடைய கணவரின் இழப்புதான் என்னை சுக்குநூறாக போட்டுவிட்டது.. எனக்கு அப்போது ஆறுதல் சொன்னது, தமிழக ரசிகர்கள்தான்.. என்னுடன் நடித்த சக நடிகர்கள், நடிகைகள் பெங்களூருவுக்கே வந்து ஆறுதல் சொல்லி கொண்டிருந்தார்கள்" என்று நன்றி மறவாமல் பேசியதாக நினைவுகூர்ந்துள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications