ரூ.1000 கோடி அடிக்கும் கூலி.. ரஜினி & கோ இது செய்தால் போதும்.. 11 டிரஸ்? மலைக்க வைத்த கமல்: பிரபலம்
சென்னை: கூலி படத்துக்காக ரஜினிகாந்த் ரூ.280 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.. அதேபோல, லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான லியோவுக்கு கலவையான வரவேற்பு கிடைத்ததையடுத்து, இந்த கூலி படம் மூலம் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில், கூலி படம் ரூ.1000 கோடியை வசூல் செய்யும் என்று இப்போதே சோஷியல் மீடியாவில் கருத்துக்கள் பதிவாகி கொண்டிருக்கின்றன. இதுகுறித்து தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர்களில் ஒருவரான தயாரிப்பாளர் தனஞ்செயன் கருத்து கூறியிருக்கிறார்.
Media Circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள தனஞ்செயன், "தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி ரூபாய் படம் கூலிதான் என்று சொல்லி வருகிறார்கள்.. இந்த 1000 கோடி எடுக்க வாய்ப்பும் உள்ளது.. ஆனால் அதை எட்டிப்பிடிக்க நிறைய உழைப்பு தேவைப்படுகிறது..

பிரபலங்கள் நடித்துள்ள படம்
அமீர்கான், நாகார்ஜூனா, உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பதாலேயே இந்த படத்துக்கு 1000 கோடி வந்துவிடும் என்று சொல்ல முடியாது.
இதையெல்லாம் தாண்டி மக்களை அது சென்றடைய வேண்டும். இதற்கு புரமோஷன் கட்டாயம் வேண்டும்.
டூரிஸ்ட் ஃபேமிலி படம் நன்றாக ஓடுகிறது என்பதற்காக யாருமே வீட்டிலேயே உட்கார்ந்துவிடவில்லை. தினமும் ஏகப்பட்ட புரமோஷன்களை செய்து கொண்டிருக்கிறார்கள். மாமன் படக்குழுவும் தற்போது நன்றாக புரமோஷன் செய்து கொண்டிருக்கிறார்கள்-- திருச்சி, பாண்டிச்சேரிக்கு சென்று மக்களை சந்திக்கிறார்கள்.. எனவே, ஒரு படம் மாபெரும் வெற்றியை அடைய வேண்டுமானால் புரமோஷன் அவசியமாகும்.
ரூ.1000 கோடி வசூல்
கூலி படம் 1000 கோடியை அடிக்க வேண்டுமானால், புரமோஷன் அதிகமாக வேண்டும்.. அதிலும் வடமாநிலங்களுக்கு சென்று புரமோஷன் செய்ய வேண்டும். வெறும் சோஷியல் மீடியாவில் மட்டுமே புரமோஷன் செய்தால், 60 கோடியுடன் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான் ஜெயிலர் படம் மாதிரி.
தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் புரமோஷனுக்கு படக்குழு சரியாக பிளான் செய்தாலே போதும். வணிக ரீதியான வெற்றியை பெற்றுவிடலாம்.
வியக்க வைத்த கமல்
தக் லைஃப் படத்துக்கு, ஆந்திரா, தெலுங்கானாவிலிருந்து 11 யூடியூப் சேனல்களை ஃபிளைட்டில் வரவழைத்துவிட்டு, இங்கே அவர்களுக்கு பேட்டிகளை தந்தார் கமல் சார்.. அதிலும், தனித்தனி சேனல்களுக்கு, விதவிதமான காஸ்ட்யூம்களை போட்டுக்கொண்டு பேட்டி தந்து வியப்பை தந்திருந்தது.. இப்படியெல்லாம் பேட்டிகளை தந்து ஆந்திரா, தெலுங்கானாவில் ஒரு பரபரப்பையே உண்டாக்கினார் கமல் சார் இதுபோல புரமோஷன்கள் இருக்கணும்" என்றெல்லாம் சொல்லி வருகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications