ஜோவிகா பிக் பாஸில் வந்த ரூ.12 லட்சத்தில் படம் எடுத்தாரா? ரஜினிகாந்த் பொண்ணு படம் என்னாச்சு: பிரபலம்
சென்னை: நடிகர்கள், நடிகைகளின் வாரிசுகள் திரைத்துறைக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கும் நிலையில், அதுகுறித்து மூத்த வழக்கறிஞர் கீதா கருத்துக்களை தெரிவித்துள்ளார்.. எத்தனை சிபாரிசுகள் இருந்தாலும், அடையாளம் இருந்தாலும் திறமை இருந்தால், அவர்களாகவே தானாகவே மக்கள் மத்தியில் எடுபடுவார்கள் என்றும் பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.
நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.. இப்போது 2 படங்களில் நடிகையாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.. அத்துடன் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.

தயாரிப்பாளராக வனிதா இயக்கி நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் திரைப்படத்தினை வனிதா புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார். இதில், ராபர்ட் ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் உள்ளிட்ட பலரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.
வனிதா மகள் ஜோவிகா
இப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. படம் வெளியாக நாட்கள் நெருங்கியுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஆர்வம் காட்டி வருகிறது..
இந்த படத்தின் புரமோஷனில் ஜோவிகா பேசும்போது, "என்னுடைய சொந்த உழைப்பில், நான் சம்பாதித்த பணத்தில் எடுத்த படம் இது, இந்த வயதில், என்னை ஒரு படத்தின் தயாரிப்பாளராக்கியது விஜய் டிவி தான். நான் வெளிநாடு போனாலும், பலரும் என்னை உரிமையோடு அழைத்து போட்டோ எடுத்துக்கொண்டார்கள். அவர்களின் அன்பும் ஆதரவும் இல்லை என்றால், நான் பிக் பாஸ் வீட்டில் அத்தனை நாள் இருந்து இருக்கவே முடியாது" என்றெல்லாம் கூறியிருந்தார்.
12 லட்சம் போதுமா
பிக்பாஸ் வீட்டில் சம்பாதித்த பணம் என்று ஜோவிகா சொன்னதுமே, அந்த பணம் எவ்வளவு என்று நெட்டிசன்கள் கணக்கு போட துவங்கிவிட்டார்கள். அந்தவகையில் ஜோவிகாவுக்கு பிக்பாஸ் வீட்டில் வெறும் 12 லட்சமே கிடைத்திருக்கக்கூடும். இதை வைத்து ஒரு படத்தை எடுக்க முடியுமா? என்று இணையவாசிகள் சந்தேகத்தை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், Reflect Lifestyle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள வழக்கறிஞர் கீதா, "படத்தின் உண்மையான பட்ஜெட் என்னவென்று எனக்கு தெரியாது.. ஒருவேளை படத்துக்கான பட்ஜெட் வெறும் 12 லட்சம் என்றால், அது பொய்யான விஷயம்.. இதற்கு சாத்தியமே கிடையாது..
சுத்த பொய் - சாத்தியமில்லை
சொந்த பணமே இருந்தாலும்கூட, பைனான்சியரிடம் கடன் வாங்கிதான் பலரும் படங்களை எடுக்கிறார்கள்.. ஜோவிகா எடுத்துள்ள இந்த படத்தின் ஷூட்டிங் பாங்காக்கில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.. என்னுடைய நண்பர் ஒருவரும் அதில் நடித்துள்ளார்..
காஸ்ட்லியாக படத்தை எடுத்துள்ளதாகவும், நிறைய வீண் செலவு செய்கிறார்கள் என்றும் என்னிடம் சொன்னார்.. எனவே 12 லட்சத்தில் இந்த படம் எடுக்கப்பட்டதாக சொன்னால், அது சுத்த பொய்.
இப்போது வாரிசுகள் ஒவ்வொருவராக சினிமா துறைக்கு வந்துவிட்டார்கள்.. ஜோவிகா மட்டுமல்ல, விஜய் சேதுபதி மகன் சூர்யா, விஜய் மகன் சஞ்சய் என அனைவரும் திரைத்துறைக்கு வந்துவிட்டார்கள்.. இதை எதிர்க்க யாருக்கும் உரிமையில்லை.. ஆனால், அவர்களிடம் திறமையிருந்து வெற்றி பெற்றால், அதை நாம் பாராட்டியே ஆக வேண்டும். திறமையில்லாவிட்டால் யார் உயர்த்திவிட்டாலும், பிரபலமாக முடியாது..
ரஜினிகாந்த் 2 மகள்கள்
ரஜினிகாந்த்தின் 2 மகள்களும், சினிமா எடுத்தார்கள்.. அவர்களுக்கு என்ன திறமை இருந்தது? தாங்கள் எடுத்த படங்களில் என்ன கருத்து சொல்லியிருந்தார்கள்? அந்த படங்கள் மக்களிடம் ஓடியதா? அந்த படங்கள் ஏற்படுத்திய தாக்கம் என்ன? என்று எதுவுமே தெரியவில்லை.. ஆனால், ரஜினிகாந்த்தின் மகள்கள், படங்களை எடுத்தார்கள் என்று மட்டும் வெளியே தெரிந்தது.
சிவாஜியின் மகன் ராம்குமார் பிரபலமாகவில்லை, ஆனால், பிரபு சக்ஸஸ் பெற்றார்.. ஆனால், விக்ரம் பிரபு சறுக்கிவிட்டார்.. விஜய்க்கு அவரது அப்பா உதவினார்.. ஆனால், அஜீத்துக்கு யாருமே உதவவில்லை.. யார் தயவுமின்றி சொந்தமாக உழைத்து வந்தார்.. நாகார்ஜூனா தன்னுடைய பிள்ளைகளை, தானே முன்னுக்கு கொண்டுவர முயன்று கொண்டிருக்கிறார்கள்.
வாரிசுகள் என்பதற்காகவே யாரையும் குறை சொல்லிவிட முடியாது.. திறமை மட்டுமே இங்கு பேசப்படும்.. தனுஷ் நன்றாக நடிக்கிறார்.. விஜய் மிகச் சிறந்த நடிகர் கிடையாது என்றாலும், தனுஷைவிட நிறையவே அதிர்ஷ்டம் அடித்தது. ஆனால், இவர்கள் எல்லாரையும்விட திறமையானவர் சிம்பு.. அவருக்கான வாய்ப்பு இங்கு குறைவாக உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications