ரூ.200 கோடி.. தியேட்டரில் கட்டப்பட்ட ஆட்டுக்கார அலமேலு "ஆடு".. ரஜினியை இப்படி பேசுறாரே இந்த பிரபலம்
சென்னை: "ஆட்டுக்கார அலமேலு படத்தில் வந்த ஆட்டுக்கும், ரஜினிக்கும் எனக்கொன்றும் பெரிய வித்தியாசம் தெரியல.. ஆட்டையும் கும்பிடுகிறான், ரஜினியையும் கும்பிடுகிறான் ரசிகன்" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.
அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்து, சமீபத்தில் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அரசியல் தொடர்பான செய்திகளை தன்னிடம் கேட்க வேண்டாம் என்று கூறியிருந்தார். இதுகுறித்து BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பாண்டியன் ஒரு பேட்டி தந்துள்ளார்.

அதில்,"ஆட்டுக்கார அலமேலு என்ற படத்தில் ஆடுதான் மெயின் கேரக்டர்.. ஆடு பெயர் ராமு.. ஸ்ரீபிரியாவுக்கும் சிவக்குமாருக்கும் காதல் கடிதம் கொண்டுபோவது இந்த ஆடுதான்.. இந்த ஆட்டை வைத்துதான் தேவர் படம் எடுத்தார்..
பிறகு அந்த ஆட்டை கொண்டுபோய் சினிமா தியேட்டர் வாசலில் கட்டிப்போட்டு, அதற்கும் இலையும், தழையும் போட்டுட்டாரு.. மக்களை ஏமாற்றுவதற்காக, ஊர் ஊராக கொண்டுபோய் சினிமா தியேட்டர் வாசலில் இப்படி கட்டிப்போட்டார். கடைசியில் சினிமா பார்க்க வந்தவர்கள் எல்லாம் அந்த ஆட்டை அன்று தொட்டு கும்பிட்டாங்க.. முட்டாள்காரர்கள் மொத்த பேரும் இருக்கிற நாடே, சினிமாக்காரர்கள் இருக்கிற இந்த தமிழ்நாடுதான்.
ஆட்டுக்கார அலமேலு: ஆட்டுக்கார அலமேலு படத்தில் வந்த ராமு என்ற ஆடு மக்களால் கும்பிடப்பட்ட நிலையில், மற்ற ஆடுகள் அனைத்தும் பிரியாணி போடப்பட்டது.. உடனே இன்குலாப் எழுதினார், "ஆடு கம்பீரமாக இருக்கிறது, ஆட்டை பார்க்க வந்த மனிதன்தான் நிலைகுலைந்து போய்விட்டான்" என்று எழுதினார்.
இந்த ஆட்டுக்கும், ரஜினிக்கும் எனக்கொன்றும் பெரிய வித்தியாசம் தெரியல.. ஆட்டையும் கும்பிடுகிறான், ரஜினியையும் கும்பிடுகிறான் ரசிகன்.. ஸ்ரீபிரியாவுக்கும், சிவக்குமாருக்கும் காதல் கடிதம் பரிமாறிய அந்த ஆடு, கடைசியில் தேவர் வீட்டில் பிரியாணியாக்கப்பட்டது. இதுதான் ரஜினியும்.
ஹாலிவுட்: சினிமாக்காரர்களில் எம்ஜிஆரை தவிர, வேறு யாருமே ஏழை எளிய மக்களுக்கு ஒரு பைசாவை கூட கிள்ளி போட மாட்டாங்க. ஆனால் படத்துக்கு 150 கோடி வாங்குறாங்க.. எதுக்கு இந்த 150 கோடி? வங்காள சினிமாவில், குஜராத் சினிமாவில், பஞ்சாப் சினிமாவில் 150 கோடி ரூபாய் வாங்குற நடிகர்கள் யாருமே இல்லை.. ஹாலிவுட்டில் மட்டும் இருக்காங்க. அதுக்கப்புறம் இங்கே தமிழ்நாடுதான்.
ரஜினியை பொறுத்தவரை, ஒரு கூத்தாடி மட்டுமே.. கூத்தாடிக்கான அந்தஸ்து மட்டும்தான் அவருக்கு உள்ளதே தவிர, அரசியல் அந்தஸ்து கிடையாது. காரணம், மக்கள் நல பிரச்சனையில் தன்னை மறைத்து கொள்வார். அண்ணா பல்கலை மாணவி விவகாரம் ஊருக்கே தெரியும். ஆனால், இதுகுறித்து கருத்து கேட்கும்போது தனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டார். காரணம், ஏதாவது கேள்வி எழுப்பிட்டால், இவருடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தை திமுக இடிச்சிடும் என்று நினைக்கிறார்.
ஜெயிலர் படம்: உபி முதல்வரை, தன்னுடைய "காவாலா காவாலா" டான்ஸ் பார்க்க கூப்பிடறார்.. தான் ஒரு சாமியார், தன்னால் வரமுடியாது, துணை முதல்வரை அழைத்துட்டு போங்கன்னு யோகி சொல்லிட்டாரு.
எதுக்கு வடமாநிலம் போகணும்? "வடஇந்தியாவில் 200 கோடி வியாபாரம் இருப்பதால், யாரெல்லாம் காவி வேட்டி கட்டியிருக்கிறார்களோ, அவங்க காலில் விழுந்துடுங்க, ஜெயிலர் படத்தை வியாபாரம் செய்தால் அதில் 10 சதவீதம் கமிஷன் தருகிறோம்" என்று ன் பிக்சர்ஸ் சொல்லியிருக்கிறது. உடனே லதாவும் இதுகுறித்து அழுத்தம் தந்தாதால், உபி சென்றுவிட்டு வந்தார் ரஜினி.
ரஜினி எப்போதுமே மக்கள் நல சேவகரும் அல்ல, மக்கள் நல காவலரும் அல்ல. இமயமலை போனால் யாரும் அவருக்கு காசு தரமாட்டாங்க, திருவண்ணாமலை போனாலும் ரஜினிக்கு யாரும் காசு தர மாட்டாங்க.. அதனல் அம்பானி வீட்டு கல்யாணத்தில் குடும்பத்துடன் போய் குத்தாட்டம் போட்டாரு.. 2 கோடி ரூபாய் சம்பளம் வேற.
கால்ஷீட்: ரஜினியை டான்ஸ் ஆட சொல்லி, பணத்தை லதா வசூல் செய்துட்டு வந்தாச்சு. தன்னால் நடக்க முடியல என்று ரஜினி சொல்லியும்கூட, "கால்ஷீட் இருக்கு" என்று லதா தயாரிப்பாளர்களிடம் பேசி, ரஜினியை ஒரு ஏடிஎம் மிஷினாக பயன்படுத்தி வருகிறார்" என்றெல்லாம் சொல்லி வருகிறார்.












Click it and Unblock the Notifications