ரூ.200 கோடி ரஜினி சம்பளம்.. கூலி படத்தை பார்த்து அசந்த பிரபலம்.. லோகேஷூக்கு மகிழ்ச்சி.. இதான் ஹைலைட்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கூலி படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது.. எனவே, இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.. சமீபத்தில் பாதி படத்தை போட்டு பார்த்துவிட்டு, மிகுந்த குஷியாகிவிட்டாராம் ரஜினிகாந்த்.. இதை பற்றின செய்திகளைதான் மூத்த பத்திரிகையாளர்களும், பிரபலங்களும் யூடியூப் சேனல்களில் பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபுவும் கூலி படம் குறித்த தன்னுடைய பாசிட்டிவ் கருத்துக்களை கூறியிருக்கிறார்.
லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கி வரும் படம் கூலி.. இதனை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது..

நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, ஷோபின் ஷபீர் என பெரிய நட்சத்திர கூட்டமே இதில் நடித்திருக்கிறார்கள். டி.ராஜேந்தர் - அனிருத் பாடிய பாட்டு, படத்துக்கே ஹைலைட் விஷயமாக இருக்க போகிறது என்கிறார்கள்..
இப்படத்தின் முதல் பாதியை ரஜினிகாந்த் பார்த்து, முழு திருப்தியடைந்துள்ளாராம்.. அத்துடன் மகிழ்ச்சியும் அடைந்திருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார். இதே கருத்தை பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபுவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சியில் ரஜினி
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, கூலி படத்தின் முதல் பாகத்தை ரஜினிகாந்த் பார்த்தார்.. அவருக்கு மிகவும் பிடித்து போய்விட்டது.. பிரம்மாதமாக படம் வந்திருக்கிறது என்று சொல்லி, லோகேஷ் கனகராஜை தட்டிக்கொடுத்து பாராட்டி இருக்கிறார்..
உண்மையிலேயே கூலி படத்தின் மேக்கிங் வேற லெவலில் உள்ளது.. விக்ரம் படத்துக்கு பிறகு லோகேஷூக்கு பெரிய பெயர் உள்ளது.. படங்களை சிறப்பாக லோகேஷ் எடுக்கிறார்.. பெரிய பெயரும் கிடைத்துவிட்டது.. லியோ படம் மட்டும் கன்டன்ட் குறைவு, ஆனால் டெக்னிக்கலாக சூப்பராக இருந்தது.
ரஜினிகாந்த் உழைப்பு
கமலை வைத்து எப்படி விக்ரம் படத்தை வெற்றிகரமாக்கி காட்டினாரோ, அதுபோல பல மடங்கு ரஜினியை வைத்து இந்த படத்தை வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.. இதற்காக நிறைய உழைத்துள்ளார்.. பாட்டு, டான்ஸ், சண்டை என எல்லாவிதமான மசாலாக்களும் கூலி படத்தில் உண்டு..
ரஜினிகாந்த் படமாகவும், லோகேஷ் படமாகவும் சேர்ந்து பிரம்மாண்டமான படமாக கூலி அமைய போகிறது.. கதை சொல்லும்போதே ரஜினி சாருக்கு பிடித்துவிட்டது.. இதை படமாக எடுத்து பார்த்தபோது, அதைவிட பிடித்து போய்விட்டது..
அனிருத், மற்ற நடிகர்களைவிட ரஜினிக்கு சூப்பராக பாடல்களை போடுவார்.. இந்த படத்திலும் அப்படியேதான் பாடல்கள் நன்றாக அமைந்துள்ளன.. அதிலும் டி.ராஜேந்தரும் அனிருத்தும் சேர்ந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். இந்த பாடல்தான் முதலில் ரிலீஸாக போகிறது.. இந்த பாட்டு நிச்சயம், அதிரிபுதிரியாக இருக்க போகிறது.
அதுதான் சூப்பர் ஸ்டார்
வேலைன்னு வந்துவிட்டால், முழு நேரமும் இறங்கி அர்ப்பணிப்புடன் செய்யக்கூடியவர் ரஜினிகாந்த்.. தாம் நடித்த அருணாசலம், பாட்சா, போன்ற படங்கள் வெற்றியடைந்ததுபோல, தற்போது நடிக்கும் படங்களும் வெற்றியடைய வேண்டும் என்று நினைப்பவர்.. தாம் ஒரு சூப்பர் ஸ்டார், சும்மா ஸ்கிரீனில் வந்து நிற்காமல் வெற்றிப்படம் தர வேண்டும் என்று நினைக்கிறார்.
நட்சத்திர இயக்குனர் லோகேஷின் ஐடியாலஜி வேறு மாதிரியாக இருக்கிறது.. இன்றைய இளைஞர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார்.. அதற்கேற்றவாறு, ரஜினியை சரியாக இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.
ரஜினி கேரியரிலேயே
ரஜினி கேரியரிலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கூலி படம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், ரஜினி படத்தில் ரஜினிதான் ஹீரோவாக இருப்பார்.. பான் இந்தியா படங்களை இன்று அனைவரும் எடுக்க தொடங்கிவிட்டார்கள்..
அதுபோல கூலி படத்தில் ரஜினிக்கு 200 கோடி சம்பளம் மட்டுமே என்றாலும் கிட்டத்தட்ட 450 கோடி பட்ஜெட்டே வந்துவிடுகிறது.. இந்த 450 பட்ஜெட்டை திருப்பியெடுக்க தமிழ்நாட்டை மட்டுமே கவர் செய்ய முடியாது.. அதனால்தான் பான் இந்தியா ஸ்டார்களை உள்ளே கொண்டுவந்துள்ளனர்..
பாலிவுட்டில் அமீர்கான், மிகப்பெரிய ஸ்டாராக உள்ளார்.. நாகார்ஜூனா தெலுங்கில் ஸ்டாராக உள்ளார்.. உபேந்திரா இருக்கிறார்.. மிஸ்டர் பாரத் படத்துக்கு பிறகு ரஜினியுடன் இந்த படத்தில் சத்யராஜ் இணைகிறார். எனவே கூலி படம் அனைவரும் விரும்பக்கூடிய படமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications