ரூ.12 கோடிக்கு எகிறிய திரிஷா.. தக் லைஃப் படத்தில் ரூ.300 கோடியில் சிம்பு பெற்ற சம்பளம் இவ்வளவா? செம
சென்னை: தக் லைஃப் பரபரப்புதான் எங்கு பார்த்தாலும் ஓடிக் கொண்டிருக்கிறது.. நாயகன் படம் வெளியாகி, 37 வருடங்கள் கழித்து, மணிரத்னம், கமல்ஹாசன் இருவரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.. கமல்ஹாசனுடன் சிம்பு முதல்முறையாக இணைந்து நடிக்கிறார்.. அதுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்பு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசை என்பதால், தக்லைஃப் படத்துக்கான எதிர்பார்ப்பு கூடிவருகிறது. இந்த படம் ஓரளவு நாயகன் படத்தின் சாயலில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.. தக் லைஃப் படத்தில் 'விண்வெளி நாயகா' பாடலும் 'முத்த மழை' பாடலும் "ஜிங்குச்சா சிக்காத காளை" பாடலும், கடந்த 2 நாட்களாகவே இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

திரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் என பெரிய பிரபலங்கள் நடித்திருக்கும் படம் தக் லைஃப்.. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது..
சிம்புவுக்கு ஜோடி யார்
தியேட்டர் ரிலீஸ் 350 கோடி ரூபாய்க்கு போனதாகவும், ஓடிடி உரிமம், ஜியோ ஹாட் ஸ்டார் 152 கோடிக்கு வாங்கிவிட்டதாகவும், ஓவர்சீஸ் ரிலீஸ், சாட்டிலைட் என கிட்டத்தட்ட 600 கோடிக்கான பிசினஸ் நடந்துவிட்டதாகவும் கடந்த 10 நாட்களுக்கு முன்பே செய்திகள் வெளியாகியிருந்தன.
திரிஷா, அபிராமி இருவருமே நடித்திருப்பதால், அபிராமி கமலுக்கும், திரிஷா சிம்புவுக்கும் ஜோடி என்றும் பலரும் நினைத்தார்கள்.. ஆனால், திரிஷாவுடன் கமல் டூயட் பாடுவதுபோல சீன்கள் வெளியாகி, பெரும் சஸ்பென்ஸை தந்துள்ளது.
சிம்பு நெகிழ்ச்சி
இந்த படத்தில் கமலுக்கு மகன் அசோக் செல்வன்.. சிம்பு வளர்ப்பு மகன் என்பதுபோல தெரிகிறது.. ஒரு கட்டத்தில் சிம்புவே கமலுக்கு எதிரியாவது போல கதை வருமாம்.. எனினும், கமலுக்கு இணையான கேரக்டர் இதில் சிம்புவுக்கு தரப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. ராஜஸ்தானில் ஜெய்சால்மரில் 68 நாள் எடுக்கப்பட்ட ஷூட்டிங்கில், 50 நாட்களும் சிம்பு போர்ஷன் மட்டுமே எடுக்கப்பட்டதாம்.
படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிம்பு பேசியபோது, கமலின் கழுத்தை பிடிக்கும் காட்சி ஷூட் செய்யப்பட்டபோது, அவரின் கழுத்தை பிடிக்க மிகவும் பயந்தேன், பிறகு, கமல் சார் தான், என்னை தட்டிக்கொடுத்து நடிக்க வைத்தார் என்று கூறியிருந்தார்..
சிம்பு வாங்கிய சம்பளம்
இந்நிலையில், இந்த படத்திற்காக சிம்புவின் சம்பளம் எவ்வளவு? என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.. இதில் சிம்புவிற்கு ரூ. 40 கோடி சம்பளமாக தரப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை சிம்பு நடித்ததிலேயே, அதிக சம்பளம் வாங்குவது இந்த படத்திற்குத்தானாம். முதல்முதலாக கமலுடன் சிம்பு இணைந்திருப்பதால், உச்சக்கட்ட எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
அதேபோல, தக்லைஃப் படத்தில் கமல்ஹாசனுக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறுகிறார்கள். மலையாள நடிகர் ஜோஜு ஜோர்ஜுக்கு 75 லட்சமும், ஐஸ்வர்யா லட்சுமிக்கு 40 லட்சமும், நடிகர் அசோக் செல்வன் 45 லட்சமும் சம்பளமாக வழங்கப்பட்டதாம்.. சுகர் பேபி த்ரிஷாவுக்கு இதுவரை 10 கோடி ரூபாயாக இருந்த சம்பளம், இந்த படத்தில் 12 கோடி ரூபாய் என்று எகிறிவிட்டதாம்.. உறுதிப்படுத்தப்படாத இந்த செய்திதான் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications