50 கோடி காலி.. எஸ்வி சேகர் சொன்னபடியே.. மொக்கை டெஸ்ட்.. மீனாவை ஒப்பிட்டால் நயன்தாரா நத்திங்: பிரபலம்
சென்னை: நயன்தாரா , மாதவன் , சித்தார்த் ஆகியோர் நடித்துள்ள படம் டெஸ்ட். எஸ்.சசிகாந்த் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சக்திஶ்ரீ கோபாலன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விளையாட்டு சூதாட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தோல்வியை சந்தித்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
டெஸ்ட் திரைப்படத்தை 55 கோடி ரூபாய் கொடுத்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியது. ஆனால் படத்துக்கு ரசிகர்களிடம் போதிய வரவேற்பு இல்லை. அதன் காரணமாக 50 கோடி ரூபாய்வரை அந்த நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று சமீபத்தில் பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அசாத்திய நம்பிக்கை
இந்நிலையில், AG Modern Media யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "சமீபத்தில் சித்தார்த், நயன்தாரா, மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்த படம் டெஸ்ட்.. அந்த படத்தின் தயாரிப்பாளரே இயக்குனரும் ஆவார்.. சில டைரக்டர்களுக்கு தங்கள் படங்களின் மீது அசாத்திய நம்பிக்கை உண்டு.. அப்படித்தான் இந்த டைரக்டரும், தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்போவதில்லை, நேரடியாகவே ஓடிடியில் ரிலீஸ் செய்வேன் என்று சவால் விட்டார். அதன்படியே ஓடிடியிலும் ரிலீஸ் செய்தார்.
கடைசியில அது 5 கோடி கூட வசூல் பண்ணல.. நொந்துட்டாரு மனுஷன்.. இப்போ 50 கோடி ரூபாய் வாங்கி கொண்டு ஓடிடியில் வெளியாக தயாராக இருக்கிறது டெஸ்ட் படம். இத்தனைக்கும் நயன்தாரா நடித்த படம்.. நல்ல கேரக்டரில் நயன்தாரா நடித்திருந்தும், ஜனங்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை..
மொக்கை படம்
ஓடிடியில் எத்தனை பேர் இதனை பார்ப்பார்கள்? இதனால் அந்த தயாரிப்பாளருக்கு செம அடி.. நயன்தாராவின் டெஸ்ட் படமும் தோல்வியடைந்து விட்டது என்று அறிவித்து விட்டனர்..
இந்த படத்தில் மாதவனின் தந்தை கேரக்டரில் எஸ்வி சேகர். நடிப்பதற்காக, முன்பணம் தந்துவிட்டார்கள்.. அட்வான்ஸ் தந்தபிறகுதான், மாதவனும் ஐயங்கார், எஸ்வி சேகரும் ஐயங்கார் என்பது தெரியவந்துள்ளது.. இதனால் எஸ்வி சேகர் நடித்தால், தான் நடிக்க முடியாது என்று மாதவன் சொல்லிவிட்டாராம்.
மாதவன் எஸ்வி சேகர்
ஆனால், உண்மையிலேயே எஸ்வி சேகருக்கும், மாதவனுக்கும் என்ன சண்டைன்னு தெரியல. இந்த தகவலை சொன்னதே எஸ்வி சேகர்தான்.. "எனக்கு அட்வான்ஸ் தந்துவிட்டார்கள், தேதியும் தந்துவிட்டார்கள்.. சித்தார்த் அப்பாவாகவும் அதில் நடிக்க சொல்லிவிட்டார்கள். ஆனால், அதற்கு பிறகு அந்த நிறுவனத்திடமிருந்து அழைப்பே வரவில்லை.. பிறகுதான், நீங்க இந்த படத்துல இல்லை, மாதவன் உங்களுடன் நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாருன்னு சொல்லிட்டாங்க.
நான் அட்வான்ஸ் வாங்கிட்டு, மறுபடியும் என்னை பயன்படுத்தி கொள்ளாத படங்கள் எல்லாமே மொக்கை ஆகிவிடும்.. அந்த அடிப்படையில் டெஸ்ட் படமும் மொக்கை ஆகிவிட்டது" என்று சிரித்து கொண்டே சொன்னார் எஸ்வி சேகர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி
சோஷியல் மீடியா முழுக்க நயன்தாராவுக்கு எதிராக திரும்பியிருப்பதற்கு முக்கிய காரணமே அவரது அகங்காரம்தான்.. அகந்தை, சீனியர்களை மதிக்காதது எல்லாமே நயன்தாராவுக்கு வந்துவிட்டது..
மீனாவை ஒப்பிடும்போது நயன்தாரா நத்திங்.. ஐயா படத்தில் நடிக்கும்போதே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யார் என்றே தனக்கு தெரியாது என்று சொன்னவர் நயன்தாரா. இந்தியாவுக்கே ரஜினியை தெரியும்போது, பக்கத்து மாநிலத்தில் கேரளாவில் ஆங்கராக வேலை பார்த்து கொண்டிருந்த நயன்தாராவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி என்பது தெரியாதா? இதெல்லாம் சேர்ந்துதான் அவருக்கான எதிர்ப்புகள் அதிகமாகிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications