ரூ.500 கோடி வசூலை அள்ளும் குட் பேட் அக்லி.. அஜித்தை பார்த்ததுமே தியேட்டரே தெறிக்கப் போகுது: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆக்‌ஷன், பாட்டு, சண்டை, பஞ்ச் டயலாக் என எல்லாமே உள்ளதால், குட் பேட் அக்லி ஒரு மாஸ் மசாலா படமாகும்.. பெரிய அளவில் கூட பேசப்படலாம் .. அப்படியில்லாவிட்டாலும், மிகப்பெரிய கலெக்‌ஷனை அள்ளக்கூடும்., தீனா, மங்காத்தா, பில்லா, வாலி போன்ற படங்கள் ஏற்கனவே சக்கை போடு போட்ட படங்கள், அந்த படங்களின் ரெஃபரன்ஸ்கள் இந்த குட் பேட் அக்லியில் உள்ளதால், தியேட்டரே தெறிக்க போகிறது என்று கணித்து சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.

King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருக்கும் பாலாஜி பிரபு, "தமிழ்நாடு முழுக்க குட் பேட் அக்லிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.. அஜித்தின் இந்த படம், மிகப்பெரிய பெஞ்ச் மார்க் படமாக அமையும்..

Television Good Bad Ugly ajith Ajithkumar

காரணம், அஜித் ஒரு மாஸ் ஆக்‌ஷன் ஹீரோ.. இதுபோன்ற நடிகரை, விடாமுயற்சி போன்ற படங்களில் பயன்படுத்தி, அந்த படம் பெரிதாக ஓடவில்லை.. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி தோல்வி என்பதால், அஜித் ரசிகர்கள் அனைவரும் ஒருவித சோர்வில் உள்ளனர்.

கடவுள் முரளி வாழ்க

இப்படிப்பட்ட சூழலில், குட் பேட் அக்லி படம் வெளிவந்து ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் என தெரிகிறது. சில ரசிகர்கள் மட்டும்தான் தங்கள் வெறித்தனமான அன்பை காட்டுவார்கள். அதுபோல அஜித்தின் ரசிகர்களும் வெறித்தனமானவர்கள். நடிகர் முரளிக்கு இப்படியான ரசிகர்கள் அந்த காலத்தில் இருந்தனர். சுவர்களில் கடவுள் முரளி என்று எழுதி வைத்தார்கள்.. தமிழகத்தின் பல சுவர்களில் கறித்துண்டினால், கடவுள் முரளி வாழ்க என்று எழுதி வைத்திருந்தார்கள்.

அதுபோல, தலைவனே, அல்டிமேட், கடவுளே அஜித்தே என்றெல்லாம் தன்னை சொல்லாதீர்கள் என்று ரசிகர்களை அஜித் கேட்டுக் கொண்டாலும், ரசிகர்கள் தங்கள் அன்பை பொழிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். குட் பேட் அக்லி படம் ஓடும் தியேட்டர்களின் வாசலிலேயே கடவுளே அஜித்தே என்றுதான் கோஷம் போடுகிறார்கள்.

டைரக்டர் சொன்ன கதை

அதேபோல, விடாமுயற்சியின் தோல்வியிலிருந்து வெளியே வரவேண்டும் என்று, அஜித்தும் இதில் முழு ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார்.. தன்னுடைய தீவிர ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன், குட் பேட் அக்லியின் ஒன்லைன் கதையை தனக்கு சொன்னதுமே, அஜித்துக்கு பிடித்துவிட்டது.

பிறகு கதையை டெவலப் செய்து கொண்டு வரும்படி அஜித் சொன்னார்.. அதன்படியே கதையை முழுவதுமாக எழுதி முடித்து எடுத்து சென்றார்.. ஒரு ஹீரோவாக செய்ய முடியாத சில விஷயங்கள், அந்த ஸ்கிரிப்ட்டில் இருந்ததை அஜித் கவனித்துள்ளார்..

அசத்தும் ஹேர்ஸ்டைல்

"இதெல்லாம் நான் செய்ய முடியுமா? செய்யணுமா?" என்று கேட்டுள்ளார்.. பிறகு, "நீங்கள் என்னென்ன சொல்கிறீர்களோ, அதை நான் செய்றேன்", என்று சொல்லி முழு ஈடுபாட்டுடன் நடித்தார் அஜித். அஜித் இப்படி சொல்வார் என்று இதை டைரக்டரே எதிர்பார்க்கவில்லை. கிரீடம் படத்துக்கு பிறகு, ஜிவி இந்த படத்தில் அஜித்துடன் இணைந்துள்ளார்.. ஒரு பாடலை அனிருத்தும் பாடியிருக்கிறார்.

அஜித் என்ற மாஸ் ஹீரோவுக்கு சரியான படமாக இது உள்ளது.. சில ஹீரோஸ்களுக்கு சில மாஸ் இருக்கும். அதுபோல, கோட் அணிந்து, சால்ட் & பெப்பர் ஹேர் ஸ்டைலில் அஜித் நடந்து வந்தாலே ரசிகர்கள் விசில் அடித்து கொண்டாடுவார்கள்.

தீனா, மங்காத்தா, பில்லா, வாலி போன்ற படங்கள் ஏற்கனவே சக்கை போடு போட்ட படங்கள், அந்த படங்களின் ரெஃபரன்ஸ்கள் இந்த கு்ட பேட் அக்லியில் உள்ளதால், தியேட்டரே தெறிக்க போகிறது..

பெரிய கலெக்‌ஷன் வரப்போகிறது

ஆக்‌ஷன், பாட்டு, சண்டை, பஞ்ச் டயலாக் என எல்லாமே உள்ளதால், இது ஒரு மாஸ் மசாலா படமாகும்.. பெரிய அளவில் கூட பேசப்படலாம் .. அப்படியில்லாவிட்டாலும், மிகப்பெரிய கலெக்‌ஷனை அள்ளக்கூடும்.,

விஜய், ரஜினி இருவருமே கலெக்‌ஷன் மாஸ்டர்கள்.. விஜய்யின் லியோ படத்தை போல, ரஜினியின் ஜெயிலர் படத்தை போல, அஜித்தின் இந்த படமும் கலெக்‌ஷன் எதிர்பார்க்கப்படுகிறது.. புக்கிங்கே 15 கோடிக்கு இப்போது நடந்துள்ளது.. வெளிநாடுகளில் 20 கோடிக்கு நடந்துள்ளது.. சனி, ஞாயிறு விடுமுறை என மொத்தம் 4 நாளில் 120 கோடியை தாண்டும்.. எப்படியும், 500 கோடி முதல் 750 கோடி வரை இந்த படத்தின் கலெக்‌ஷனை எதிர்பார்க்கிறார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+