500 கோடி சொத்து.. நொறுங்கிய வயது பாகுபாடு.. பிரியங்கா மேட்டரில் மூக்கை நுழைக்க நீங்க யாரு: பிரபலம்
சென்னை: பிரியங்கா திருமணம் கடந்த 2 நாட்களாகவே இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்.. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில், "பிரியங்காவின் திருமணத்தை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை.. அதேபோல, குறை இல்லாத மனிதர்கள் இல்லை.. ஆண்-பெண் இரு தரப்புக்குமே சின்ன சின்ன குறைகளையும் சகித்து கொண்டு வாழ வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Metro Mail என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் சேகுவேரா, "பிரியங்காவின் கணவர் ஒரு தொழிலதிபர் என்கிறார்கள்.. தற்போது டி.ஜே.வாக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. அவர் தொழிலதிபராக இருக்கட்டும், டி.ஜே.வாக இருக்கட்டும், ஆனால் பிரியங்கா அவரை கணவராக தேர்வு செய்ய என்ன காரணம் என்று பிரியங்கா சொன்னால்தான் தெரியும்.

வயதானவருடன் திருமணமா?
வயதானவரை பிரியங்கா திருமணம் செய்து கொண்டாரோ? என்று பிரியங்கா மீது பிரியமாக இருப்பவர்களும், பிரியங்கா மீது பொறாமையில் இருப்பவர்களும் சொல்லி வருகிறார்கள்.. ஆனால், வயது என்பது எப்போதுமே ஒரு தடையே கிடையாது.. கடந்த காலத்திலேயே அது நொறுக்கப்பட்டுவிட்டது. எனவே வயது ஒரு பொருட்டே கிடையாது.
பிரியங்கா ஒரு நபரை தேர்வு செய்கிறார் என்றால், அவர் நிச்சயம் எல்லா வகையிலும் தகுதியான நபராகவே இருப்பார்.. காரணம் ஏற்கனவே ஒரு தோல்வியிலிருந்து கடந்து வந்திருக்கும் பிரியங்கா, இந்த விஷயத்தில் கவனத்துடன் செயல்பட்டிருப்பார்.
இரண்டாவது திருமணம்
இன்று 2வது கல்யாணம் என்பது மீடியாக்காரர்களுக்கு மட்டுமில்லை, எல்லாருக்கும்தான் சர்வசாதாரணமாக நடக்கிறது. இரண்டாவது திருமணத்தை சரி தவறு என்று முடிவு செய்ய யாருக்குமே உரிமை இல்லை.. இது அவரவர் உரிமை.. இதில் யாரும் உள்ளே நுழைந்து கொச்சைப்படுத்தி பேசக்கூடாது.
பிரியங்காவுக்கெனெ சம்பாத்தியம் உண்டு.. அதை பாதுகாக்க வாரிசு தேவை.. சிறிது காலத்தில் வயது மூப்பும் நெருங்கிவிடும். இன்னும் 5 வருடம் பிரியங்கா மீடியாவில் பயணம் செய்யலாம். அதற்கு பிறகு வாய்ப்பு இல்லாத காலகட்டத்தில், பிரியங்காவுக்கும் ஒரு பாதுகாப்பு தேவைப்படுகிறது. 100 கோடி, 500 கோடி சம்பாதித்தாலும், அதை நடிகைகள் பாதுகாப்பது என்பதுதான் இன்றைய மிகப்பெரிய சிக்கலே.. இந்த சொத்துக்களை பாதுகாக்கவே, நடிகர்களுக்கு, தயாரிப்பாளர்களுக்கு, 2வது, 3வது மனைவியாக திருமணம் செய்து கொள்ளவும் முனைகிறார்கள்.
மேலும், பெண்கள் தனியாக வாழ்வதில் சிக்கல் இன்றும் நம்முடைய சமுதுயத்தில் நிலவுகிறது. துணையில்லாத ஏக்கம் மட்டுமே ஆண்களுக்கு இருக்கும். ஆனால், பெண்களுக்கு அதையும் தாண்டி, பாதுகாப்பு பிரச்சனைகளும் சமுதாயத்தில் உள்ளது.
சமூக பாதுகாப்பு
அதிலும், மீடியாவில் ஒரு பெண் தனிமையில் வாழ்வதற்கு பாதுகாப்பு குறைவு. சமூக பாதுகாப்புக்காக, பிரியங்காவுக்கும் வாழ்க்கை துணை தேவைப்படுகிறது. என்னை கேட்டால், எல்லா நடிகைகளுக்குமே வாழ்க்கை துணை, வாரிசு இருக்கணும்.. இது அவர்களுக்கான சமூக பாதுகாப்பு
அதேபோல, இருக்கும் வாழ்வில் நிறைவை காண வேண்டும். இதை பிரியங்காவுக்காக சொல்லவில்லை.. குறை இல்லாத மனிதர்கள் இல்லை.. ஆண்-பெண் இரு தரப்புக்குமே சின்ன சின்ன குறைகளையும் சகித்து கொண்டு வாழ வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications