Run Serial: ஆளாளுக்கு சத்தியம்... அது என்ன சர்க்கரை பொங்கலா?
சென்னை: சன் டிவியின் ரன் சீரியல் நாயகனுக்கு ஒரு கடமை, நாயகிக்கு ஒரு கடமை என்று கதை ஒரு வழியாக இப்போதுதான் புரிந்து இருக்கிறது. இனி சத்தியத்துக்கான ஓட்டமாக ரன் சீரியல் இருக்க போகிறது.
திவ்யாவின் அப்பா டாக்டர் ஆர்.கேவும் மர்மமான முறையில் மரணம். சக்தியின் காதலி கேரோலினும் கடலில் தற்கொலை என்று சீரியல் ஆரம்பமே பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக இருந்தது.
கேமிரா ஆங்கிள், படப்பிடிப்பு லொக்கேஷன்ஸ், சீரியலுக்கு பரிச்சயமில்லாத புதிய வீடுகளில் படப்பிடிப்பு என்று பார்க்க சற்றே வித்தியாசமாக இருக்கிறது இந்த சீரியல்.

டாக்டர் கெட்டவரா?
ராதாகிருஷ்ணன் சுருக்கமாக ஆர்.கே.என்று அழைக்கப்பட்டு வருபவர்.பிரபல டாக்டர் மட்டுமல்லாமல், ஆர்.கே.என்கிற பெயரில் இயங்கி வரும் ஆஸ்பிடலுக்கு சொந்தகாரரான ஆர்.கே. நிறைய ஏழைகளுக்கு இலவச வைத்தியம் பார்த்தே புகழடைந்தவர். இவருடன் சகலையாக கைக் கோர்த்து இருப்பவர் இயக்குநர் ராஜ்கபூர்.இவரால் ஏற்பட்ட சிக்கல்கள்தான் இப்போது பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது.

கேரோலின் சக்தி
சக்தியின் காதலி கேரோலினை காதலித்த இரண்டு வருடங்களில் அவன் அவளை முழுசாக நம்பிக்கொண்டு இருப்பவன். ஆனால், இவனுக்கு தெரியாமல் மர்ம வாழ்க்கை ஒன்றில் அவள் சிக்கி, டாக்டர் என்கிற அடையாளத்துடன் வேறு பெயரில்,. இறந்து போன ஆர்.கேவுடன் எந்தவிதமான தொடர்பு என்று தெரியாதபடி ஒரு உறவில் இருந்திருக்கிறாள்.

அம்மா கேரோலின்
கேரோலின் இறந்தது, டாக்டர் ஆர்.கே.இறந்தது என்று மீடியாக்களில் இருவரையும் இணைத்து செய்தி வெளியிட, துடித்துப் போகிறார்கள் இரு வீட்டாரும். ஆர்,கே.வீட்டில் பிரஸ், மீடியா என்று குவிந்து ஆளாளுக்கு திவ்யா வீட்டுக்கு மன உளைச்சலை தந்து கொண்டு இருக்கிறார்கள். கேரோலின் அம்மா சக்தியிடம் என் பெண் மீது விழுந்த கெட்ட பெயரை நீதான் போக்க வேண்டும் என்று சக்தியிடம் சத்தியம் வாங்கிக்கறாங்க.

அம்மா திவ்யாவிடம்
திவ்யாவிடம் அம்மா சொல்றாங்க...உங்க அப்பா ரொம்ப நல்லவர்.அவரை இப்படி எல்லாரும் கெட்டவர்னு சொல்லி அசிங்கப்படுத்தறாங்க..அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல் போயிடும் போல இருக்கு திவ்யா. உங்க அப்பா நல்லவர்னு இந்த உலகத்துக்கு புரிய வைப்பேன்னு எனக்கு சத்தியம் செய்து குடு திவ்யான்னு கேட்டு வாங்கிக்கறாங்க.
சத்தியத்தை நிறைவேத்துவாங்களா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications