Run serial: ஜோடி மாறிப்போச்சு... தப்பிச்சார் கிருஷ்ணா.. நல்ல முடிவுதான்!
சென்னை: சன் டிவியின் ரன் சீரியலின் ஜோடியான சக்தி திவ்யாவாக நடித்து வந்த கிருஷ்ணாவின் ஜோடி நடிகை சரண்யாவாக இருந்தவர் இப்போது நடிக்கவில்லை. இதனால் கிருஷ்ணாவின் ஜோடி மாறிப்போச்சுங்க.
நடிகர் கிருஷ்ணாவை வைத்து விகடன் டெலிவிஸ்டாஸ் ரன் சீரியலை தயாரித்து, சன் டிவியில் ஒளிபரப்பி வருகிறது. தினமும் இரவு 10 மணிக்கும். இதன் மறு ஒளிபரப்பு காலையிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் இவருக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை சரண்யா விஜய் டிவியின் ஆயுத ஏழுத்து சீரியலிலும் அண்மையில் நடித்து வருகிறார். இதனால்தானோ என்னவோ இவர் ரன் சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். இதனால் கிருஷ்ணாவின் ஜோடி மாறிப்போச்சு.

வாணி போஜன் கிருஷ்ணா
கிருஷ்ணா வாணி போஜன் இவர்களை ஹீரோ ஹீரோயினாக்கி இதே விகடன் டெலிவிஸ்டாஸ் தெய்வமகள் சீரியலைத் தயாரித்து சன் டிவியில் ஒளிபரப்பாக்கியது.இந்த ஜோடிக்கு மக்கள் மத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அது மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் இதே ஜோடியை தனியார் நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் விழாக்கள் நடத்தி மக்கள் கூட்டத்தை சேர்த்து கொண்டாடியது.

சாயாசிங் கிருஷ்ணா
இதனால், கிருஷ்ணா தான் காதலிச்சு மணந்துகொண்ட சாயாசிங்குடன் நேரத்தை செலவிட முடியாமல் தடுமாறினார். சாயாசிங் கடும் கோபத்தில் இருந்ததாக கூட கூறப்பட்டது.நாளடைவில் இதே கோபத்தை வாணிபோஜனும் கிருஷ்ணாவிடம் காண்பிக்க இருவக்கும் இடையில் சிக்கி சின்னாப் பின்னமாகிப் போன நிலையில்தான் கடைசி எபிசோடை முடித்து வைத்தார் இயக்குநர்.

சரண்யா
இந்த நிலையில்தான் இரண்டு மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர் அதே விகடன் டெலிவிஸ்டாஸ் கிருஷ்ணா சரண்யா இருவரையும் ஜோடி சேர்த்து ரன் சீரியலை தயாரித்து சன் டிவியில் ஒளிபரப்பி வருகிறது. இதில் நடிக்கும் சரண்யா ஏற்கனவே விஜய் டிவி மூலமாகத்தான் சீரியல் நடிகையாக அறிமுகம் ஆனார்.

தாய் வீடு
விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலுக்கு விஜய் டிவி மீண்டும் அழைக்க தாய் வீட்டுக்கு மீண்டும் போகிறேன் என்று குஷியானவருக்கு ரன் சீரியல் பற்றிய நினைவில்லை போலும். இருந்தாலும் கிருஷ்ணாவுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்தான் என்று எல்லா நடிகைகள் தரப்பிலும் பேசப்படும் நிலையில், பேசாமல் அவரின் மனைவி சாயா சிங்கையே ஜோடியாக நடிக்க வைத்துவிட்டால் பிரச்சனை இல்லைதானே..
அதுதாங்க இப்போ நடக்கப் போகுது.. இனி திவ்யாவாக ரன் சீரியலில் சாயாசிங் தனது புருஷனுக்கே ஜோடியாக நடிக்க உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications