Run serial: ரன்.. திரைப்பட பாணியில் இருக்கிறதே.. செட்டாகுமா?
சென்னை: சன் டிவியின் ரன் சீரியல் முற்றிலும் திரைப்பட பாணியில் இருக்கிறது. இன்னமும் கதை சரியாகப் பிடிபடவில்லை. சீரியல் பாணியை விட்டு விலகி இருக்கும் இந்த பாணி கை கொடுக்குமா?
விகடன் டெலிவிஸ்டாஸ் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அதே போல ரசிகர்களை ஏமாற்றியது இல்லை விகடன் டெலிவிஸ்டாஸும். இதுவரை சக்ஸஸ் சீரியல்கள் மட்டுமே கொடுத்து வருகிறது.
சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரன் சீரியலின் கதை இன்னும் சரியாக பிடிபடவில்லை. அது மட்டும் இல்லாமல் சீரியல் திரைப்பட பாணியில் பயணிக்கிறது. கதையின் நாட் பிடிபடவில்லை.

பின்னோக்கிய ஓட்டம்
ஆரம்பத்தில் நடப்பு கதையில் ஓடத் துவங்கிய சீரியல், இப்போது ஃபிளாஷ் பேக் என்று பின்னோக்கிய ஓட்டத்தில் போய்க்கொண்டு இருக்கிறது. அவ்வப்போது முன்னுக்கும் ஓடுவதால் நிஜமா கதை குழப்பமா இருக்கிறது.அடித்தட்டு மக்களையும் கவர்ந்து இழுத்து கட்டிப்போடும் விகடன் டெலிவிஸ்டாஸுக்கு இந்த சீரியல் அப்படி கைக் கொடுக்குமா என்பது தெரியவில்லை.

படப்பிடிப்பு பிரமாண்டம்
சீரியலில் ஹாங்காங் படப்பிடிப்பும், அடுத்து உள்ளூர் படப்பிடிப்பும் சினிமா பாணியில் இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது.சீரியல் விரும்பிகளுக்கு தேவை இதுவல்ல என்றாலும், போகப்போக ஏதாவது கதை என்று அவர்களுக்கு புரிந்தால் மட்டுமே சீரியல் சூப்பர் ஹிட்டாகும். இல்லாமல் போனால் சீரியலின் பிரைம் டைம் ரொம்பவும் வீணாகிவிடும்.

நிழல்கள் ரவி
நடிகர் கிருஷ்ணா, செய்தி வாசிப்பாளர் சரண்யா, நிழல்கள் ரவி, இயக்குநர் ராஜ் கபூர் என்று பெரிய நடிகர்கள் பட்டாளம் இருந்தாலும்,கதை இன்னும் பிடிபடாததால் பார்க்கும் சுவாரஸ்யம் இன்னும் சீரியல் ஆர்வலர்களுக்கு ஏற்படவில்லை. நிழல்கள் ரவியை வைத்து இப்போதைக்கு கதை நகர்கிறது என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது.

மாறுபட்ட சீரியல்
ரன் முற்றிலும் வேறு பாணியில் பயணிக்கிறது. இந்த வித்தியாசம் வரவேற்கத் தக்க ஒன்றுதான் என்றாலும், மக்களின் விருப்பத்திலிருந்து சற்றே திசை மாறிப் போனாலும், பார்வையாளர்களை இழக்க நேரிடும். ஆனால்,அதே சமயம் இது போன்ற வித்தியாசமான சீரியல்கள் புதிய ட்ரண்டை உருவாக்கி மக்களின் மனதைக் கவரவும் மெனெக்கெட வேண்டும். அப்படி கதை நகர்ந்தால் வெற்றி உறுதி.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications