விஜய் கேட்டதை நிறைவேற்றி வைத்தேன்.. ஆனால் இன்று..! எனக்கு அதில் விருப்பமே இல்ல!- எஸ்.ஏ சந்திரசேகர்
சென்னை: நடிகர் விஜயின் அப்பாவான எஸ்.ஏ சந்திரசேகர் பேட்டி ஒன்றில் விஜய் நடிக்க வேண்டும் என்பது எனக்கு ஆசை கிடையாது, ஆனால் நான் எதற்காக நடிக்க வைத்தேன் தெரியுமா? என்று சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
நடிகர் விஜய்யின் அப்பாவான எஸ்ஏ சந்திரசேகரை பலருக்கும் தெரிந்திருக்கும். இவர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு பல சமூக சிந்தனையுள்ள படங்களை இயக்கியிருந்தார். ஆனால் இயக்குனராகுவதற்கு முன்பே எஸ் ஏ சந்திரசேகர் படிப்பில் கெட்டிக்காரராக இருந்திருக்கிறார்.

படித்து முடித்ததும் சென்னையில் அரசாங்க வேலையில் சேர்ந்து இருக்கிறார். அந்த நேரத்தில் இவருக்கு சினிமாவின் மீது இருந்த ஆசையின் காரணமாக தன்னுடைய வேலையை விட்டுவிட்டு சினிமாவை நோக்கி வந்திருக்கிறார். அதிலும் எம்ஜிஆர் நடித்துக் கொண்டிருந்த எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலமாக சவுண்ட் இன்ஜினியராக தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்.
அதற்கு பிறகு டிஎன் வாலியிடம் உதவி இயக்குனராக சேர்ந்து அவரோடு சில படங்களில் பணியாற்றி இருக்கிறார். அதிலும் எங்க வீட்டு பிள்ளை, ஆசை முகம், நான் ஆணையிட்டால், மனசாட்சி, வசந்த மாளிகை, எங்க தங்க ராஜா, திருமாங்கல்யம் போன்ற பல திரைப்படங்களில் துணை இயக்குனராக இருந்திருக்கிறார்.
அதற்குப் பிறகு சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் இவர் பேசப்பட்ட நிலையில் நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு, நீதிக்கு தண்டனை, தோஸ்த், முத்தம், வெற்றி போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் எஸ் ஏ சந்திரசேகர் விஜயகாந்தை வைத்து அதிகமான திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
ரஜினிகாந்தை வைத்து நான் சிவப்பு மனிதன் என்ற ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் தான் தன்னுடைய மகனான விஜய்யை நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி இருந்தார். அதற்கு பிறகு விஜய் உடைய வளர்ச்சியை சொல்லவே வேண்டாம்.
ஆரம்ப காலகட்டத்தில் விஜய்யை சிலர் உருவ கேலி செய்திருந்தாலும் இப்போது முன்னணி நடிகராக உருமாறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அரசியலிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய மகன் விஜய் குறித்து நடிகர் எஸ்ஏ சந்திரசேகர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில், எனக்கு விஜய்யை நடிகனாக பார்க்க வேண்டும் என்று ஆசை கிடையாது.
நான் விஜய் நடிக்க வேண்டாம் என்று நினைத்தேன். ஆனாலும் விஜய் நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால் தன்னுடைய மகனின் ஆசையை நிறைவேற்றுவது தானே தந்தையின் கடமை அதைத்தான் நானும் செய்தேன். நான் அன்னைக்கி அவனுடைய ஆசையை நிறைவேற்றினேன். ஆனால் இன்று அவன் வளர்ந்து இருக்கிற உயரம் உங்களுக்கே தெரியும்.
இப்போ பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. இன்னும் விஜய் நிறைய தூரம் போக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஒவ்வொரு இடத்திலும் பெற்றோர் பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல நானும் என்னுடைய மகனின் ஆசையை நிறைவேற்றினேன். இன்று அவன் அதன் மூலமாக வளர்ந்து நிற்கிறான் என்று அந்த பேட்டியில் எஸ்ஏ சந்திரசேகர் பேசியிருக்கிறார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி












Click it and Unblock the Notifications